மனிதநேயக் கல்வியின் அவசியம்

The need for humane education

Authors

  • முனைவர் ப.சண்முகராணி | Dr. P. Shanmugarani முனைவர்பட்ட மேலாய்வாளர் ஏ.பி.சி.மகாலட்சுமி மகளிர் கல்லூரி, தூத்துக்குடி

Keywords:

மனிதநேய, கல்வி, அவசியம்

Abstract

எண்ணரிய பிறவிதனில் மானிடப் பிறவிதான்

யாதினும் அரிது அரிதுகாண்

இப்பிறவி தப்பினால் எப்பிறவி வாய்க்குமோ

ஏதுவருமோ அறிகிலேன்                 (தாயுமானவர், சித்தர்கணம்:4)

எனும் பாடல் அடிகள் மனிதப் பிறவியின் முக்கியத்துவத்தை வெளிக்காட்டுகின்றன. நன்மையையும் தீமையையும் பகுத்தறிந்து ஒற்றுமையைப் பேணி வாழ வழிவகுக்கும் நல்ல அறிவைத் தருவது கல்வி. அதனை முழுமையாகச் செயல்படுத்த உதவுவது இலக்கியக் கல்வி. இக்கல்வியே மக்களிடம் புதைந்து கிடக்கும் மனிதநேயத்தை வெளிக்கொண்டு வருகிறது. ஒரு சமூகத்தின் அங்கங்களாகக் குடும்பம், கல்வி, அரசு முதலான சமூக நிறுவனங்கள் உள்ளன. அவற்றுள் கல்வி என்பது ஒரு சமூகத்தின் இளைய தலைமுறையினர் தன் மூத்த தலைமுறையினரிடமிருந்து பெறும் மரபுகள், பழக்கவழக்கங்கள் பண்பாடு போன்றவற்றை அதன் இயல்பு மாறாமல் கற்றுக்கொள்வதை உணர்த்துகிறது. கல்விவழிப் பெறப்படும் அறிவே தனிமனித பொருளாதார நிலையையும் நாட்டின் பொருளாதார நிலையையும் நிர்ணயித்து வருகிறது. பல்வேறு தொழில் நிறுவனங்களில் பணியாற்றத்தக்க கல்வியாளர்களை உருவாக்கும் உற்பத்திக் கருவியாகவும் கல்வித்துறை செயல்பட்டு வருகிறது. இன்றைய மாணவர்களின் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான பல்வேறு வசதிகளைப் படைத்துத் தருவது இன்றைய நவீனக் கல்விமுறை. ஆனால் இன்றைய மாணவர்கள் பொருளையே முதன்மையாகக் கருதிக் கல்வி கற்கின்றனர். இன்றைய நவீனக் கல்விமுறையில் பணம் மட்டுமே கல்வியின் தரத்தையும் ஒருவனின் வாழ்வையும் நிர்ணயிக்கிறதே தவிர மனிதநேயமும் பழம்பெருமையும் அழிந்து வருகின்றன. இதனை மாற்றுவதற்கு இன்றைய மாணவர்களிடையே மனிதநேயக் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்ட இலக்கியத்தை கற்றுக் கொடுப்பதனால் மட்டுமே அழிவின் விளிம்பில் இருந்து அவர்களைக் காப்பாற்ற முடியும்.

References

இராமலிங்க அடிகள், 1987, திருவருட்பா - ஆறாம் திருமுறை, இராமலிங்கர் பணிமன்றம், சென்னை.

இராமலிங்கம் பிள்ளை (உ.ஆ.), 2000, திருக்குறள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை.

சாலினி இளந்திரையன், 1995, சங்கத்தமிழரின் மனிதநேய மணிநெறிகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.

சுப்பிரமணியக் கவிராயர் சே.நா., 1923, தமிழ்ச்சொல் அகராதி, மதுரைத் தமிழ்ச்சங்கம், மதுரை.

சொக்கலிங்கம். சு.ந., 2009, தாயுமானவர் பாடல் தொகுப்பு, பழனியப்பா பிரதர்ஸ், சென்னை.

திருமலை மா.சு., 1998, தமிழ் கற்பித்தல், மணிவாசகர் பதிப்பகம், சென்னை.

நவீன்குமார் (தொகுப்பு), 1994, உலக அறிஞர்களின் பொன்மொழிகள் 500, நர்மதா பதிப்பகம், சென்னை.

பரிமணம் அ.மா., & பாலசுப்பிரமணியன் கு.வெ.(பதி.), 2004, சிறுபாணாற்றுப்படை, நியூ செஞ்சுரி புக்ஹவுஸ் (பி) லிட், சென்னை.

மெய்யப்பன் ச.(பதி.), 2001, பாரதியார் கவிதைகள், தென்றல் நிலையம், சிதம்பரம்.

ஜீன் லாரன்ஸ் செ., & பகவதி கு., (பதி.), 1998, தொல்காப்பிய இலக்கியக் கோட்பாடுகள், உலகத் தழிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.

Published

10.02.2017

How to Cite

மனிதநேயக் கல்வியின் அவசியம்: The need for humane education. (2017). இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies), 2(8), 64-75. https://inamtamil.com/index.php/journal/article/view/170

Similar Articles

21-30 of 187

You may also start an advanced similarity search for this article.