தொல்காப்பியர் காலம்

Tholkaappiyar period

Authors

  • ச.வையாபுரிப்பிள்ளை | S. Vaiyapuripillai

Keywords:

தொல்காப்பியர், தொல்காப்பியர் காலம், ஐந்திர வியாகரணம், பாணினீயம்

Abstract

இப்பொழுதுள்ள இலக்கணங்கள் எல்லாவற்றுள்ளும் தொல்காப்பியந்தான் மிகப் பழமையானது. இதனை இயற்றிய தொல்காப்பியர் வடமொழிப் பேரிலக்கணத்தைச் செய்த பாணினிக்கு முந்தியவர் ஆவார் என்று சில தமிழறிஞர்கள் கூறி வருகின்றார்கள். இக்கொள்கைக்குரிய முக்கியக் காரணம் தொல்காப்பியரோடு உடன்கற்ற ஒருசாலை மாணாக்கராகிய பனம்பாரனார் தொல்காப்பியரை ஐந்திரத்தில் வல்லவராவார் எனக் குறித்துள்ளமையேயாகும். ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் என்பது பனம்பாரனார் இயற்றிய பாயிரத்தில் வரும் ஓர் அடி. ஐந்திர வியாகரணம் பாணினீயத்திற்கு முற்பட்டதென்றும் பாணினீயம் தோன்றியபின் வழக்கொழிந்து விட்டதென்றும் இவர்கள் கருதுகிறார்கள். தொல்காப்பியனார் காலத்துப் பாணினீயம் உளதாயிருக்குமேல், தொல்காப்பியர் அதனையே கற்று இதில் சிறந்து விளங்கியிருப்பார். பாணினீயம் கற்று வல்லவர் என்று அவரைக் கூறாமையினாலே அவர் பாணினிக்கு முன்பு வாழ்ந்தவர் என்று இந்த அறிஞர்கள் கொள்ளுகின்றார்கள்.

References

M.Sreenivasa Iyengar, Tamil Studies, P.17.

பூஜ்யபாதர் இயற்றிய ஜைனேந்த்ர வியாகரணத்தை ஐந்திரம் என்று சிலர் கூறுவர். இது கி.பி. 5ஆம் நூற்றாண்டில் தோன்றியது.

Systems of Sanskrit Grammar, P.11

History of Civilization: Ancient India and Indian Civilization, P.247.

History of Civilization: Ancient India and Indian Civilization, P.248.

Kielhorn i. pp.379 – 380, 382, 392.

P.C. Chakravarthi : Linguistic Speculations of the Hindus, P.409.

Winternitz; History of Indian Literature (German Edition) Vol. III, P.523.

P.R. Bhandarker: Indian Antiquary Vol.41 (1912), P.158. Jacobi : Bhavasatte of Dhanavala, P.84. Probably 3rd Century A.D.

Winternitz; History of Indian Literature (German Edition) Vol. III, P.540.

Published

10.02.2016

How to Cite

தொல்காப்பியர் காலம்: Tholkaappiyar period. (2016). இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies), 1(4), 12-18. https://inamtamil.com/index.php/journal/article/view/133

Similar Articles

21-30 of 194

You may also start an advanced similarity search for this article.