நீலகேசியில் அரவாணிகள் சித்திரிப்பு
Depiction of Aravanis in Nīlakēci
Keywords:
நீலகேசி, அரவாணிகள், சித்திரிப்புAbstract
நீலகேசி நீலகேசித் தெருட்டு என்றும் வழங்கப்படும். பௌத்த சமயக் காப்பியமாகிய குண்டலகேசிக்கு எதிராக எழுந்த சமணக் காப்பியம். இதன் ஆசிரியர் யார் என்பது தெரியவில்லை. இது ஒரு சமயக்கருத்து நூல். யாப்பருங்கல விருத்தியுரை இதனை நீலம் எனச் சுருக்கிக் கூறுகின்றது. சமயதிவாகர வாமன முனிவர் எழுதிய சமயதிவாகரவிருத்தி எனும் சிறந்த உரை ஒன்று இந்நூலுக்கு உள்ளது. இந்நூல் 10 சருக்கங்களையும் 895 செய்யுட்களையும் கொண்டுள்ளது. குண்டலகேசி என்றால் சுருண்ட கூந்தலையுடையவள் என்று பொருள்படுவதைப் போல நீலகேசி என்பது கருத்த கூந்தலையுடையவள் என்று பொருள்படும். குண்டலகேசிக் காப்பியத்தை மறுப்பதற்கே நீலகேசிக் காப்பியம் எழுந்தது என்பதை உறுதி செய்யும் விதமாக இதில் குண்டலகேசி வாதச் சருக்கம் என்ற பகுதி காணப்படுகிறது.
References
நீலகேசி, அ. சக்கரவர்த்தி நயினார் பதிப்பு, கழகப் பதிப்பு. இரண்டாம் பதிப்பு - 2007
இந்தியத் தத்துவ ஞானம், கி. லஷ்மணன், பழனியப்பா பிரசுரம், முதற்பதிப்பு - 2005
சமணமும் தமிழும், மயிலை சீனி. வேங்கடசாமி, கழகப் பதிப்பு. முதற்பதிப்பு - 2008
சமணம் (ஜைனம்), ஆர். பார்த்தசாரதி, முதற்பதிப்பு - அக்டோபர் 2009, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., அம்பத்தூர், சென்னை - 600098.
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2022 இனம் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam International E-Journal of Tamil Studies)
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.