இரட்டைக் காப்பியங்களில் மணிமேகலை பற்றிய செய்திகளின் பின்புல அரசியல் Iraṭṭaik kāppiyaṅkaḷil maṇimēkalai paṟṟiya ceytikaḷiṉ piṉpula araciyal (Politics behind the news about Manimegalai in a double epic)

Authors

  • முனைவர் ஆ. சந்திரன் | Dr A. Chandiran உதவிப்பேராசிரியர், தமிழ் முதுகலை மற்றும் ஆய்வுத்துறை, தூயநெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி), திருப்பத்தூர், திருப்பத்தூர் மாவட்டம் Assistant Professor, Department of Tamil PG & Research, Sacred heart college (Autonomous), Tirupattur, Tirupattur District https://orcid.org/0000-0002-8884-3285

Keywords:

மணிமேகலைத் துறவு, இரட்டைக் கப்பியங்கள், சமூக நிலை, சாத்தனார் மனநிலை, பௌத்த மதம்.

Abstract

ஆய்வுச்சுருக்கம்

கோவலன் மாதவிக்கு மகளாகப் பிறந்த மணிமேகலை பற்றிய செய்தியைச் சிலப்பதிகாரம் மணிமேகலை ஆகிய இரண்டு காப்பியங்களிலும் சொல்லப்பட்டிருக்கின்றன. என்றாலும், மணிமேகலை பற்றிய குறிப்புகளில் இரண்டு காப்பியங்களிலும் முரண்பாடுகள் பல இடம்பெற்றிருக்கின்றன. அவற்றை வாசிப்பில் மிகத்தெளிவாக அறிந்துகொள்ள முடிகின்றது. மணிமேகலை பற்றிய குறிப்புகளில் காணப்படும் இந்த முரண்பாடுகள் குறித்தும் அவற்றிற்கான காரணங்கள் மற்றும் அவற்றின் பின்புலமுள்ள அரசியல் குறித்தும் ஆராய்கிறது இந்தக் கட்டுரை.

சிலப்பதிகாரத்தில் மணிமேகலை பற்றிய மாடலமறையோன் மற்றும் தேவந்தியின் பின்புலங்களில் இடம்பெற்றுள்ள குறிப்புகளும், மணிமேகலையில் மணிமேகலை பற்றிய சித்திராபதி, உதயகுமரன் நண்பனான எட்டி மற்றும் கதாசிரியர் கூற்றாக (சமூகத்தின் மன நிலை) வெளிப்படும் குறிப்புகளும் முரண்படுகின்றன. இந்த முரண்பாடுகளை எல்லாம் ஒப்பிட்டு ஆராய மணிமேகலை பற்றிய புதிய கருத்துக்களைப் பெற முடிகின்றன.

மணிமேகலைத் துறவும் சித்திராபதியின் எதிர்ப்பும், மணிமேகலை (கணிகை மகள் என்கிற பின்புலம்) பற்றிய சமூக நிலை, மணிமேகலை பழம்பிறவி அறிதலின் பின்புலம் மணிமேகலை துறவியாக மாறிய பின்புலம் (எதிர்பார்ப்பும் x எதிர்ப்புகளும்) போன்ற பின்புலங்களில் அறியப்படும் செய்திகள் வழி பெறப்படும் கருத்துகள் குறித்து விவாதிக்க வேண்டிள்ளது. அப்படிப் பார்க்க கண்ணகி மகள் துறவி X கணிகை மகள் துறவி என மணிமேகலையின் துறவின் பின்புலம் எதிரும் புதிருமாக மோதிக் கொண்டு இறுதியாக = கோவலன் மகள் துறவி என நிலைக் கொள்கிறது.

காப்பியத்தின் தொடக்கத்தில் கண்ணகியின் மகள் என்று சுதமதியிடம் சொல்லுவதாகத் தொடங்கி தொடர்ச்சியாக அவளுடைய செயல்பாடுகளின் வெளிப்பாடுகள் காரணமாகப் படிப்படியாக உயர்ந்து கோவலனின் மகள் என்ற சமூக அந்தஸ்தைப் பெற்றவளாகத் துறவியாக உச்சம் பெறுவதாகக் காப்பியத்தில் மணிமேகலையின் பயணம் தொடர்கிறது. அதாவது, பிறப்பு அடிப்படையிலான தகுதி பற்றிய சமூகப் பொதுபுத்தியின் வெளிப்பாட்டை இக்குறிப்புகள் வழி கவனிக்க முடிகிறது.

Abstract

The story of Manimegalai, who was born as the daughter of Govalan Madhavi, is told in two Epics, Silapathikaram Manimegalai. However, there are many inconsistencies between the two Epics in the references to Manimegalai. They can be understood very clearly in reading. This article examines these contradictions in references to Manimegali, their causes and the politics behind them.

The references to Manimegalai in Silapathikaram in the background of Madalakarayon and Devanthi are contradicted by Chitrapathi, Udayakumaran's friend Etty and the narrator's statement (state of mind) about Manimegalai in Manimegalai. By comparing all these contradictions, we can get new ideas about Manimegalai.

This aims to discuss the perceptions about Manimegalai (background of Kanikai daughter) through social status, background knowledge of Manimegalai, background of Manimegalai becoming a saint (expectations and resistances) In that way, the background of Manimegalai asceticism as Kannagi’s daughter ascetic X Kanigai’s ascetic asceticism collides with each other and finally stands as Kovalan’s daughter ascetic.

Manimegalai’s journey in the epic continues with Manimegalai telling Sudhamathi that she is the daughter of Kannagi at the beginning of the epic, gradually rising due to revelations of her activities and culminating in the social status of Govalan's daughter as a saint. That is, these references can be seen as an expression of social common sense about birth-based merit.

References

துணைநின்ற நூல்கள்

இளவழுதி.வீ., சிலப்பதிகாரம் (மூலமும் உரையும்), 2015 (முதல் பதிப்பு), தி.நகர், சென்னை - 600 017.

இறைக்குருவனார், திருக்குறள் மணி புலவர்., சிலம்பில் பிழையா (ம. பொ. சி. க்கு மறுப்பு), 1983 (மறுபதிப்பு - 1) தமிழ் கொடி பதிப்பகம் , 88 தம்பு செட்டி தெரு, சென்னை - 600 001.

சிதம்பரனார், சாமி., சிலப்பதிகாரத் தமிழகம், 2008 (முதல் பதிப்பு), அறிவுப் பதிப்பகம், இராயப்பேட்டை, சென்னை – 600 014.

சிதம்பரனார். சாமி., மணிமேகலை காட்டும் மனித வாழ்வு, 2018, கௌரா பதிப்பகம் 6 /16 தோப்பு வெங்கடாசலம் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை – 600 005.

சீனிச்சாமி. து., தமிழ் காப்பிய கொள்கை, 1985 (முதல் பதிப்பு) தமிழ் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் - 613 010.

சுப்பிரமணியன், முனைவர் ச.வே., கானல் வரி, 2002 (முதல் பதிப்பு), உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை – 600 113.

தண்டபாணி.துரை (உ.ஆ)., மணிமேகலை (தெளிவுரை), 2019 (எட்டாம் பதிப்பு), உமா பதிப்பகம், சென்னை - 600 001.

துரைச்சாமிபிள்ளை. ஒளவை சு., முப்பெருங்காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை ஆராய்ச்சி, டிசம்பர் - 1942, கழக வெளியீடு, சென்னை – 600 018.

நடராசன், தி.சு., சிலப்பதிகாரம் மறுவாசிப்பு, 2015 (முதல் பதிப்பு), நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட், சென்னை - 600 098.

பஞ்சாங்கம், க., இலக்கியத் திறனாய்வு (பஞ்சாங்கம் கட்டுரைகள் II), 2010 (முதல் பதிப்பு), காவ்யா வெளியீடு, கோடம்பாக்கம், சென்னை – 600 024.

மாணிக்கம்.ஞ (உ.ஆ)., சிலப்பதிகாரம் தெளிவுரை, 2019 (பத்தாம் பதிப்பு), உமா பதிப்பகம், சென்னை – 600 001.

மாணிக்கம். வ.சுப., இரட்டைக் காப்பியங்கள், 1958 (முதல் பதிப்பு) செல்வி பதிப்பகம், காரைக்குடி- 630 001.

மீனாட்சி சுந்தரனார், தெ.பொ., சிலப்பதிகாரம் குடிமக்கள் காப்பியம் தெ.பொ.மீ களஞ்சியம் - 4, 2005 (முதல் பதிப்பு), காவ்யா வெளியீடு, கோடம்பாக்கம், சென்னை - 600 024.

வேங்கடசாமி. மயிலை சீனி., பௌத்தமும் தமிழும், டிசம்பர் - 1942, கழக வெளியீடு, சென்னை – 600 018.

ஆய்வுக் கட்டுரைகள்

தேவந்தி – மடலமறையோன் பயணங்களில் உள்ள முரண்களும் அவற்றின் பின்னணியும், மார்ச் - 2023, புதிய‍வையம், (UGC Approved journal) pa: 253 – 261, ISSN : 2456-821X http://www.shcpub.edu.in/shc/publish_paper/?name=Puthiya+Avaiyam

சிலப்பதிகார வாசிப்பில் உள்ள முரண்பாடுகளும் இடைவெளிகளும், ஜூலை - 2021, Shanlax International Journal of Tamil Research Volume: 6 Issue:1 P-ISSN: 2454- 3993 http://www.shanlaxjournals.in/journals/index.php/tamil/article/view/4035

மணிமேகலை கட்டமைக்கும் சமூக அரசியல் ... IJCRT.org https://www.google.com/url?sa=t&source=web&rct=j&opi=89978449&url=https://ijcrt.org/papers/IJCRT2006532.pdf&ved=2ahUKEwipwtqrhOuAAxW1SmwGHa-LCj0QFnoECFAQAQ&usg=AOvVaw06AtxuzsfgsAEfdDvf2J0z

மணிமேகலைக் காப்பியத்தில் புத்தசமய நெறி – ResearchGate https://www.google.com/url?sa=t&source=web&rct=j&opi=89978449&url=https://www.researchgate.net/publication/341912337_The_Buddhism_Morality_in_The_Epic_Manimekalai/fulltext/5ee08d5d299bf1d20bdec527/The-Buddhism-Morality-in-The-Epic-Manimekalai.pdf&ved=2ahUKEwipwtqrhOuAAxW1SmwGHa-LCj0QFnoECDUQAQ&usg=AOvVaw3_hI_PwaIN2EiQQ9fMgj13

பௌத்த சமயமும் மணிமேகலை மொழிபெயர்ப்புகளும் https://www.google.com/url?sa=t&source=web&rct=j&opi=89978449&url=https://www.cict.in/pdf/workshop%2520proposal%2520on%2520Buddhism%2520and%2520Manimegali%2520Translations.pdf&ved=2ahUKEwipwtqrhOuAAxW1SmwGHa-LCj0QFnoECDgQAQ&usg=AOvVaw1qR0agE0xtFMS3-3Y80XXc

Published

30.08.2023

How to Cite

இரட்டைக் காப்பியங்களில் மணிமேகலை பற்றிய செய்திகளின் பின்புல அரசியல் Iraṭṭaik kāppiyaṅkaḷil maṇimēkalai paṟṟiya ceytikaḷiṉ piṉpula araciyal (Politics behind the news about Manimegalai in a double epic). (2023). இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies), 9(35), 13-20. https://inamtamil.com/index.php/journal/article/view/229

Similar Articles

31-40 of 194

You may also start an advanced similarity search for this article.