புறநானூற்றுப் போரியலில் இயற்கைச் சிதைப்பு
Puṟanāṉūṟṟup pōriyalil iyaṟkaic citaippu
Keywords:
இயற்கைச் சிதைப்பு, இயற்கை, சிதைப்பு, புறநானூறு, போரியலில்Abstract
ஐம்பூதங்களுள் தலையாயது இந்த மண்ணே. அதனால்தான் மண்திணிந்த நிலம் என்று மண்ணையே முதலில் கூறினான் புலவன். அத்துடன் மண்செறிந்த இந்த பூமி விசித்திரமானது. அவ்வாறு கூறுவதற்கான முதற் காரணம் ஒரு வித்து மண்ணில் விழும்பொழுது அது மண்ணால் அழியாது உறக்க நிலையிலிருந்து, குறித்த காலம் வந்தவுடன் தன்னைப் பாதுகாத்த மண்ணைப் பிளந்துகொண்டு வெளிப்படுவதற்கு மண்ணே முக்கியக் காரணியாக விளங்குகின்றது. அதேபோன்று ஒருமனிதன் அம்மண்ணிலே வி(வீ)ழும் பொழுது ஒரு விதைபோன்று அவன் மீண்டும் உயிர்த்தெழாதவாறு அம்மண்ணே அவனைச் சிதைத்து விடுகிறது. ஆக, இயற்கையானது மனிதனுக்குச் சற்று முரண்பட்டே இருக்கின்றது. இப்பேசாமுரண் மண்ணோடு மனிதனிடத்திலும் உள்ளது. அதனால்தான் மண்ணிற்கும் மண்ணையே நம்பி உயிர்க்கும் அனைத்து உயிர்கட்கும் அவன் துன்பத்தையே விளைவிக்கின்றான். இத்துன்பம் இடையறாத துன்பம். காலம் தன்பேரேட்டைப் புரட்டிப் போட்டுக்கொண்டிருந்தாலும்ர் கூட வெவ்வேறு வகைகளில் வெவ்வேறு வழிகளில் மண்ணை முதலாகக் கொண்ர்ட மனிதன் இயற்கையைச் சிதைத்துக் கொண்டிருப்பவனாகவே விளங்குகின்றான்.
‘மரம்சா மருந்தும் கொள்ளார் மாந்தர்’ எனக் கூறிய சங்ககாலம் இயற்கையைத் தன்வாழ்வியலோடு பிணைத்துக்கொண்ட காலம். தன்காதலின் இயல்பைச் சொல்லும்ர் உயர்நிலையிலும், மன, உடல் உறுதியைக்கூறும் திண்ணிய நிலையிலும், தலைவியின் அழகுநலனை எடுத்துரைக்கும் இன்பநிலையிலும், இம்மரம் எமக்குத் தங்கைபோன்றது என இயற்கையைப் பின்னிப்பிணைத்துக் கூறும் உறவுநிலையிலும், தலைவன் பிரியும்பொழுது தான் வைத்த முல்லையானது மலரும்காலத்தே வந்துநிற்பேன் எனத் தலைவியிடம் கூறும் உறுதியை மொழிகின்ற நிலையிலும், மழைபொழியும் கார்காலத்தே வந்துசேர்வேன் எனப் பொழுதை முன்னிறுத்தும் நிலையிலும், அங்கு மலரும் தளிரும், பொழுதும் பருவமும் மட்டுமே முன்னிறுத்தப்பட்டிருக்கின்றன. அகத்துடன் மட்டுமின்றி புறத்திலும் வாள், தோள் வலிமையைக்கொண்ட வரைமார்பார்கள் கூட, போருக்குச் செல்லும் முன்பாக உன்ன மரத்தைப் பார்த்துச் செல்லும் வழக்கத்தைக் கொண்டிருந்தனார் என்பதைப் புறநானூறு பதிவுசெய்துள்ளது. எனவே, வாழ்வின் பிரதிபலிப்பாக விளங்கியிருந்த அகத்திலும், புறத்திலும் இயற்கையே முன்னிறுத்தப்பட்டிருக்கின்றது. ஆனால் முக்கியத்துவப்பட்டிருக்கின்றதா? என்ற வினாவினைக் கேட்கும்பொழுது விடையேதும் இல்லாத வினாவே நம்மைக் கேள்வி கேட்கின்றது.
புறப்பாடல்களில் வீரத்தை முன்னிறுத்திச் செய்திகள் புனையப்பட்டிருப்பினும் அவ்வீரத்தின் ஊடே பிறார் நாடுகளை, குறிப்பாக இயற்கை வளங்கள் சூறையாடப்பட்டுள்ள செய்தியை அறியலாகின்றது. முரண்பட்ட மன்னார்களை அழிப்பதை விடுத்து அவார்களின் இயற்கைவளங்களை அழிப்பதுதான் வீரத்திர்ன் அடையாளமா? அவ்வாறு அழிக்கும்பொழுது அறநெறி கூறிய, குறிப்பாக செவியறிவுறூஉ துறையையும், பாடாண்திணையையும் பாடிய புலவார்கள் என்செய்தார்கள்? பிறநாட்டின் இயற்கையை அழிக்கும் அவ்வேளையில் மட்டும் இயற்கை குறித்த அறிவு மன்னார்களுக்கும், புலவார்களுக்கும்ர் நினைவு தப்பியிருக்குமோ? என்ற வினாக்கள் எழுகின்றன. இயற்கை அழித்தலை மன்னன் மேற்கொள்ளும் பொழுது அவனின் அடாத செயல் குறித்துப் புகழ்ந்து பாடுவதைத்தவிர வேறில்லை என்ற விளிம்புநிலைக்குப் புலவார்கள் தள்ளப்பட்டனரா? என்று எண்ணவேண்டியுள்ளது. இவ்வனைத்து வினாக்களுக்கும் விடைதேடும் முயற்சியில் இக்கட்டுரை நகர்கின்றது.
References
சுப்பிரமணியன் கு.வெ. (உ.ஆ), புறநானூறு. நியூசெஞ்சுரி புக்ஹவுஸ் (பி) லிட்., சென்னை.
மாணிக்கவாசகன் ஞா. (உ.ஆ), சிலப்பதிகாரம், உமா பதிப்பகம், சென்னை.
சுப்பிரமணியம் ச.வே. (உ.ஆ), தொல்காப்பியம் தெளிவுரை, மணிவாசகர் பதிப்பகம்,
சென்னை.
பாரதியார் கவிதைகள், பாப்புலார் பப்ளிகேசன்ஸ், சென்னை.
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2022 இனம் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam International E-Journal of Tamil Studies)
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.