இலக்கணமறியாக் கவிதை - நூல்மதிப்புரை

Ilakkaṇamaṟiyāk kavitai - nūlmatippurai

Authors

  • முனைவர் மு.ஐயப்பன் | Dr. M. Ayyappan முதுமுனைவர் தகுதிநிலை மேலாய்வாளர் (யு.ஜி.சி), வெ.ப.சு.தமிழியல் ஆய்வு மையம், ம.தி.த.இந்துக்கல்லூரி, திருநெல்வேலி.

Keywords:

இலக்கணமறியாக் கவிதை, நூல்மதிப்புரை, நூல், மதிப்புரை, இலக்கணமறியா, கவிதை

Abstract

பேரளவு துன்பத்தின் சாயை படியாது வெறும் உயிர்ப்பிண்டமாக வாழ்ந்து வருகின்ற ஓர் இளைஞன் திடீரென்று உலகத்தில் இயல்பாக நிகழ்ந்து வருகிற கொடுமைகளையும் சமூக அநீதிகளையும், சமூகத்தினரது வக்கிரச் செயற்பாடுகளையும் ஆவேசமாகக்கண்டு, கண்டதைத் தன்மன இருட்டில் தோய்த்துச் சொல்லியிருக்கிற கனவுகளே முனியசாமியின் இக்கவிதைகள். இவரது கவிதைகளில் கவிதைக்கான இலக்கணம் எதுவுமில்லை. அவற்றில் பெரும்பாலானவற்றிற்கு ஆரம்பம் என்ற நிலைகளும் இல்லை. மன அவசரத்தின் உருவகப் பிரவாகம்தான் கவிதைகளின் உற்பத்தி மையம் என்பதைக் கவியுலகம் ஒத்துக்கொள்ளுமானால் இவைகளும் கவிதைகளே என்றே மதிப்பிடலாம். கவிதைகளின் மூலமாகப் படைப்புலகில் கால்  பதித்திருக்கின்ற முனியசாமியினது எல்லாக் கவிதைகளுமே அதனதன் நோக்கப் புலப்பாட்டுத் தளத்தில் சிறப்பானதாகவே வெளிப்பட்டிருக்கின்றன. இந்த வெளிப்பாடுதான் முனியசாமி என்ற கவிஞரின் நுழைவை அவரது எழுத்துக்களின் வழி நின்று வாசகப்பரப்பிற்குள் அடையாளப்படுத்துவதோடு வாசகர்களை இவரது கவிதைகள் குறித்து ஒருகணமாவது சிந்திக்க வைக்கச் செய்கின்ற செயலையும் மிகநேர்த்தியாகச் செய்கின்றது. இருப்பினும் இக்கவிதைப் படைப்பாளியின் உணர்வுகளும் நினைவுகளும் ‘காதல்’ என்ற வட்டத்திற்குள்ளாகவே சுற்றிச்சுற்றி வந்திருப்பதைக் காண்கையில் இக்கவிஞரின் எதிர்காலத்திய படைப்புலகப் பிரவாகத்திற்கு இது ஆரோக்கியமற்றது என்றே சொல்லத் தோன்றுகின்றது.

There is no grammar of poetry in his poetry. For most of them, there is no beginning. Poetry can be regarded as the epicentre of mental urgency if the world recognizes that poetry is the centre of production. All the poems of the muniyasamy, which have set foot in the creative world through poetry, are best expressed in its own poem . It is a revelation that marks the entry of a poet named Muniyasamy into the context of his writings and makes the reader think of his poetry at least as much. However, when the poet's feelings and memories are encircled within the circle of ' love ', it seems to be unhealthy for the future work of the poet .

References

முனியசாமி சே., (2015), இலக்கணமறியாக் கவிதை, சென்னை: கீதம் பதிப்பகம்.

Published

10.08.2015

How to Cite

இலக்கணமறியாக் கவிதை - நூல்மதிப்புரை: Ilakkaṇamaṟiyāk kavitai - nūlmatippurai. (2015). இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies), 1(2), 41-43. https://inamtamil.com/index.php/journal/article/view/116

Similar Articles

101-110 of 194

You may also start an advanced similarity search for this article.