TY - JOUR AU - AMM.AAQIL, AMM.AAQIL AU - S. Nathira Jahan, S. Nathira Jahan AU - AMF. Sabeeha, AMF. Sabeeha PY - 2022/08/28 Y2 - 2024/03/29 TI - ஆன்லைன்வழி உயர்தர மாணவர்களின் கல்வியில் கோவிட்-19இன் தாக்கம் - சம்மாந்துறை அல் மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரி மாணவர்களை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு: Impact of Covid-19 on Advance Level Students’ Education via online - A study based on the students of Al Marjan Muslim Ladies College, Sammanthurai JF - இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies) JA - இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் காலாண்டுக்கு ஒருமுறை மே, ஆகட்டு, நவம்பர், பிப்புருவரி ஆகிய திங்கள்களில் வெளிவரும். இவ்விதழ் 2015 முதல் இயங்கிவருகிறது (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies that publishes articles in Tamil and English (bi-lingual) and it comes quarterly (February, May, August, and November) since 2015. We publish research and review articles, book reviews, editorials.). VL - 8 IS - 31 SE - Articles DO - UR - https://inamtamil.com/journal/article/view/183 SP - 30-38 AB -
அறிமுகம்

COVID- 19 எனப்படும் கொரோனாவின் பாதிப்பை உலகில் அனைத்து மக்களும் உணர்ந்துகொண்டுள்ள அதேநேரம் மிகவும் பாதிப்புக்குள்ளாகியிருப்பது விவசாயமா, அல்லது சிறு நிறுவனங்களா என்று விவாதித்துக் கொண்டிருக்கிறார்களே தவிர COVID-19 உருவாக்கியுள்ள சமூக இடைவெளியால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது கல்வித்துறை என்பதைப் பலரும் உணர்வதில்லை (ரங்கராஜன், 2020). அந்தவகையில் தற்காலத்தில் ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கத்தைச் சமாளிக்க இலங்கை கல்விப்புலமானது தகவல் தொழில்நுட்பத்தை நாடியுள்ளது. இலங்கையில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிப் பற்றி நோக்குமிடத்து 1945 முதல் கண்ணங்கராவின் அயராத முயற்சியின் வரப்பிரசாதமாக இலவசக்கல்வி முறை இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் 2006ஆம் ஆண்டில் க.பொ.த சாதாரண தரப் பாடத்திட்டத்தில் 3ஆம் தொகுதியில் ஒரு பாடமாகத் தகவல் தொழிநுட்பம் சேர்க்கப்பட்டுள்ளதுடன் க.பொ.த உயர்தரப் பாடத்திட்டத்திலும் தகவல் தொடர்பாடல் தொழிநுட்பம் எனும் பாடம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து பல்கலைக்கழகங்களிலும் இது தொடர்புடைய பாடநெறிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. பின்னர் தரம் 6இலிருந்து அறிமுகப்படுத்தப்பட்ட தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பப் பாடநெறியானது 2018லேயே நடைமுறைச் சாத்தியமானது (கிஸ்னகாந்த், 2020).

COVID-19 காலப்பகுதியில் பாடசாலைகள், பல்கலைக்கழகங்களில் இணைய வழியில் கற்பித்தல் செயற்பாடுகள் ஆரம்பமாக மாணவர்களின் முகம் பார்த்து ஆசிரியர்கள் கற்பிக்கும் முறைக்குப் பதிலாக இணையம் மூலம் பாடம் கற்பிப்பது என்பது இலங்கை போன்ற நாடுகளில் சாத்தியமில்லாத ஒரு விடயமாகக் காணப்படுகிறது (ரங்கராஜன், 2020). ஏனெனில் தொலைதூரக் கற்றலுக்குத் தேவைப்படும் இணையவழிக் கல்விக்கு மின்சாரம், இணையத்தளத் தொடர்பு, கணினி, அதிதிறன்பேசி (smart phone) போன்றவை அவசியமாகும். எனினும், வளரச்சி அடைந்து வரும் இலங்கை போன்ற நாடுகளில் கிராமப்புறங்களில் 4.4% வீடுகளிலும், நகர்ப்புறங்களில் 23.4% வீடுகளிலும் கணினிகள் உள்ளன. அதேபோல் 14.9%  கிராமப்புற, 42% நகர்புற வீடுகளிலும் இணையத்தள வசதி காணப்படுகிறது. மேலும் இலங்கையில் 24 சதவீதத்தினரிடம் மட்டுமே அதிதிறன்பேசிகள் காணப்படுவதுடன் 11 சதவீத வீடுகளில் கணினி, மடிக்கணினி, நோட்புக், நெட்புக் முதலானவை உள்ளன. இதற்கமைய இலங்கையில் கணினி அறிவு வீதமானது நகர்ப்புறங்களில் 39.5% ஆகவும் கிராமப்புறங்களில் 25.5%  ஆகவும் மலையகத்தில் 9% ஆகவும் காணப்படுகிறது (தேசிய மாதிரி அலுவலகம், 2017).

இந்தப் பின்னணியில் தற்பொழுது கொரோனாவினால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலைகள் காரணமாகப் பாடசாலைகளும், பல்கலைக்கழகங்களும், ஏனைய கல்வி நிறுவனங்களும் மூடப்பட்ட வேளையில் திடீரெனத் தொலைக் கல்வியினூடாக மாணவர்கள் தமது கல்வியைத் தொடர்வதில் பெரும்பாலான சவால்களை எதிர்கொள்கின்றனர் (ரங்கராஜன், 2020). அதிலும் குறிப்பாக இலங்கையில் பல்கலைக்கழக நுழைவைத் தீர்மானிக்கும் சக்தியாக விளங்கும் க.பொ.த. உயர்தரப் பரீட்சையை எதிர்கொள்ள இருக்கும் மாணவர்கள் இணையவழிக்கல்வியைக் கற்பதனால் எதிர்கொள்கின்ற சவால்களைக் கண்டறிந்து அதற்கான தீர்வை முன்வைக்கும் முகமாகவே இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Abstract

Schools, universities, and other educational institutions were shuttered by the spread of coronavirus. Therefore, students were compelled to follow their study via distance education. Especially, G.C.E A/L students, who are pursuing their study via e-learning faced a number of difficulties. by considering this issue, the study aims to find out about challenges faced by students in learning   online. In order to get the perception of the students on this issue, the data of this research collected through the field and library. The primary data was collected from the questionnaires distributed among 100 students to each section, such as Arts, Science, Mathematics, Business, and Technology. website articles, journals, school documents, and reports were used as secondary data to set up the theoretical framework for this study. In order to obtain accurate scientific results, the qualitative and quantitative methods are used in deducing the questionnaire using Ms Excel 2016. The study's findings indicate that students do not have own smartphone or laptop to learn online, they are unpredictable in their use of electronic devices and social media, and they are unable to fully comprehend lectures due to a lack of adequate coverage, and unable to concentrate study due to the diseases such as cataracts, back pain, body fatigue, headaches, and neck pain. This study recommended including online education as a subject in school and university curricula in the future and providing a second chance for last attempt students in university Entrance.
ER -