@article{Haris_2022, place={India}, title={மின் கல்வியும் கண் நோயியல் தொடர்பான பகுப்பாய்வும் : மாவனல்லை ஸாஹிரா பாடசாலையை மையப்படுத்திய ஆய்வு: E - Learning and Analysis of Ophthalmology: A study based on Zahira School, Mawanella}, volume={7}, url={https://inamtamil.com/journal/article/view/52}, abstractNote={
ஆய்வுச் சுருக்கம்

தற்காலத்தில் மின் கல்வி என்பது மாணவர்களின் வாழ்வில் ஓர் அங்கமாக மாறிவிட்டது.   அந்த வகையில் மின் கல்வியும் கண் நோயியல் தொடர்பான பகுப்பாய்வும் என்ற தலைப்பில்  மாவனல்லை ஸாஹிரா பாடசாலையை மையப்படுத்திய ஆய்வாக இவ் ஆய்வு அமையப்பெற்றுள்ளது. இந்நிலையில் மின் கல்வியானது மாணவர்கள் மத்தியில் எந்தளவிற்கு முக்கியத்துவமளிக்கப்படுகின்றதோ அந்தளவிற்குப் பெற்றோர்கள் மத்தியிலும் இம் மின் கல்வியினால் மாணவர்களது கண்கள் பாதிக்கப்படுகின்றன என்ற கருத்தும் பரவலாக பேசப்பட்டுக்கொண்டிருப்பதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. ஆகவே இதனை ஆய்வுப் பிரச்சினையாகக்கொண்டு இவ் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. W2இவ்வாய்வானது தற்போதைய சூழலில் அதிகமாக கண் பாதிக்கப்படுவதற்கான முக்கிய காரணங்களைக் கண்டறிதல், மின் கல்வி மூலம் மட்டுமே கண் பாதிக்கப்படுகின்றது என்ற அறிதல் பிழையானது என்பதனை நிரூபித்தல் போன்றவற்றைத் தன்னுள் நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் தற்கால சூழ்நிலையில் மாணவர்களினுடைய கண் பாதிக்கப்படுவதிலிருந்து பாதுகாக்கப்படுவதற்கான வழிமுறைகளை எடுத்துரைக்கும் வகையில் இவ் ஆய்வானது  முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகின்றது. இவ் ஆய்வு அளவுசார் மற்றும் பண்புசார் தரவுகளை அடிப்படையாகக்கொண்டு அமையப்பெற்றுள்ளது.  அந்த வகையில் இது கலப்பு முறையிலான ஆய்வாக அமைகின்றது.  மேலும் இவ்வாய்வில்  முதலாம்  நிலைத் தரவுகளைப் பெற்றுக்கொள்வதற்காக வினாக் கொத்து, கலந்துரையாடல், அவதானம் போன்றன பயன்படுத்தப்பட்டு இத்தரவுகள் யாவும் MS Excel லினூடாக பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது மற்றும் இரண்டாம் நிலைத் தரவுகளைப் பெறுவதற்காக சஞ்சிகைகள், இணையத்தளம் அதனுடன் தொடர்புடைய ஆய்வுக் கட்டுரைகளும் பயன் படுத்தப்பட்டுள்ளன. அந்தவகையில் இவ்வாய்வானது இலங்கை, கேகாலை மாவட்டத்தின் மாவனல்லை பிரதேசத்தில் அமைந்துள்ள ஸாஹிரா தேசிய பாடசாலையில் கல்வி கற்கும் முதலாம் தர வகுப்பிலிருந்து ஐந்தாம் தர வகுப்பு வரையான மாணவர்களையும், க.பொ.த உயர் தர மாணவர்களையும் மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவற்றில் 200 மாணவ, மாணவிகள் எழுமாற்று மாதிரியின் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவ்வாய்வில் ஸாஹிரா தேசிய பாடசாலையில் கல்வி கற்கின்ற மாணவர்களின் கண்கள் பாதிப்படைவதற்கு மின் கல்விக்காகப் பயன்படுத்தும் நேரத்தை விட மற்றைய பொழுதுபோக்கு விடயங்களிற்கு அதிகமான நேரங்களைச் செலவழிப்பதே பிரதான காரணம் எனக் கண்டறியப்பட்டுள்ளதோடு ஆண் மாணவர்களே அதிகமாக கண் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர் என்பதும் மின் கல்விக்காக மட்டும் தொலைத் தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்தியவர்களுக்குக் கண் பாதிப்பு பெரிய அளவில் ஏற்படவில்லை என்பது தொடர்பாகவும் கண்டறியப்பட்டுள்ளது. எனவே மாணவர்களை இவ்வாறான பிரச்சினைகளிலிருந்து பாதுகாப்பதற்காக, பாடசாலையில் உள்ள அதிபர், ஆசிரியர்கள் மத்தியில் விளிப்புணர்வை ஏற்படுத்தி இவர்களின் மூலம் பெற்றோர்களுக்கான கூட்டங்கள் மற்றும் கலந்துரையாடல்கள் போன்ற ஏற்பாடுகளை மேற்கொண்டு  தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது தொடர்பாக பிள்ளைகளை கையாளும் விதங்களைத் தெளிவுப்படுத்துதல் மேலும் நடைமுறைக்கு ஏற்றவாறு அறிவுரைகளை வழங்குதல் போன்ற ஏற்பாடுகளை முன்னெடுத்தல் மற்றும் மாணவர்களுக்கும் இது தொடர்பான விழிப்புணர்வினை அறிவுபூர்வமாக வழங்க வேண்டும்.

Abstract

Nowadays e-learning has become an element of students' lives. This study is based on e-learning and analysis of ophthalmology at the Zahira School of Mawanalla. Greater emphasis is placed on e-learning among students and as well as it can be seen that there is a lot of concepts among parents about how students' eyes are affected by e-learning. This study aims to identify the main causes of high eye damage in the current context, to prove that it is a mistake to say that e-learning only affects the eye. This study is also important in suggesting ways to protect students from eye damage in the current context. This is a mixed method study based on quantitative and qualitative data. Primary data were gathered from questionnaire, discussion, observation and all these data were analyzed through MS Excel. Further, secondary data were gathered from Magazines, Website and previous research articles. In that regard, the study has been conducted focusing on students from first class to fifth class and GCE Advanced Level students of Zahira National School, Mawanella, Kegalle District. For this, 200 students have been selected through the systematic random sampling. The study found that students of Zahira National School spend more time on entertainment than e-learning, causing to eye damage. The study also found that male students were more affected by eye damage and those who used telecommunication equipment for only e-learning have massively unaffected by eye problems. Therefore, in order to protect the students from such problems, the principal of the school should aware among the teachers and arrange the meetings and discussions for the parents and make arrangements for the use of technology and should provide practical advice and make the students aware.
}, number={29}, journal={இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies)}, author={Haris, Shifna}, year={2022}, month={Feb.}, pages={139–151} }