@article{முனைவர் ப.திருஞான சம்பந்தம்_2017, place={India}, title={புதுக்கவிதை : இலக்கண வரையறை உருவாக்க முயற்சிகள்}, volume={3}, url={https://inamtamil.com/journal/article/view/190}, abstractNote={<p>தமிழ்க் கவிதைமரபு சங்க காலம், சங்க மருவிய காலம், பக்தி இயக்கக் காலம், காப்பியக் காலம், பிரபந்தக் காலம், தற்காலம் என நீண்ட வரலாற்றைக் கொண்டு திகழ்கிறது. இவ்வரலாற்றைப் பார்க்கும்போது காலந்தோறும் கவிதையில் நிகழ்ந்துள்ள உருவ - உள்ளடக்க மாறுதல்களைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். சங்ககால கவிதைகள் ஆசிரியப்பா, கலிப்பா, பரிபாடலையும், சங்க மருவிய காலக் கவிதைகள் வெண்பாவையும், காப்பியக் கால கவிதை, பத்தி இலக்கியக் கால கவிதை, பிரபந்த இலக்கியக் கால கவிதை முறையே தொடர்நிலைச் செய்யுள், விருத்தப்பா மற்றும் அனைத்துப் பாவகைகளையும் அதன் இனங்களையும் கொண்டு இயற்றப்பட்டுள்ளன. இவ்வாறு கால மாற்றத்திற்கேற்பத் தமிழ்க்கவிதை வடிவத்தில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.</p> <p>      பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களின் வருகைக்குப் பின் பல மாற்றங்கள் தமிழ்ச் சூழலில் நிகழ்ந்தன. இம்மாற்றம் தமிழ்க்கவிதை அமைப்பிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தியது. மேலைத்தேயக் கவிதையிலாளர்களான வால்ட் விட்மன், எஸ்ரா பவுண்டு, டி.எஸ். எலியட் முதலியோரின் புதிய முயற்சிகள் தமிழ்க்கவிதை மரபிலும் அதன் பாதிப்பை உண்டாக்கின. இந்தப் பின்புலத்தில் வசன கவிதை, புதுக்கவிதை தோற்றம் பெற்றன. தமிழில் முதல் வசன கவிதை முயற்சியாகப் பாரதியாரின் காட்சிகள் கவிதையைக் குறிப்பிடலாம். பாரதி பல்வேறு யாப்பு வடிவிலான கவிதைகளை எழுதினாலும் அவ்வப்போது நிகழும் புது முயற்சிகளையும் தம் கவிதை வடிவத்தில் கையாண்டு வெற்றி பெற்றுள்ளார்.</p> <p>      பாரதியைத் தொடர்ந்து மணிக்கொடி பரம்பரை, எழுத்து பரம்பரை, வானம்பாடி பரம்பரை என மூன்று பரம்பரைகள் தோன்றின. இம்மூன்று பரம்பரையைச் சேர்ந்த கவிஞர்கள் - எழுத்தாளர்கள் புதுக்கவிதையை வளர்த்தெடுக்கும் முயற்சியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். இம்முயற்சிகளின் வழிப் புதுக்கவிதை பல பரிமாணங்களை அடைந்தது.</p>}, number={10}, journal={இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies)}, author={முனைவர் ப.திருஞான சம்பந்தம் முனைவர் ப.திருஞான சம்பந்தம்}, year={2017}, month={Aug.}, pages={17–25} }