பாரதியும் சாதியும்

Bharathi and Caste

Authors

  • முனைவர் இரா.தெய்வநாதன் | Dr. R. Thievanathan உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, தியாகராசர் கல்லூரி, மதுரை-09. (Assistant Professor - Thiagarajar College)

Keywords:

Bharathi, Caste, barbarism, diversity, community.

Abstract

ஆய்வுச்சுருக்கம்

தமிழகத்தில் தலைசிறந்த சமூகக் கவிஞர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் பாரதி. தன் எழுத்தின் வல்லமையைக் கவிதையில் வருவித்து அதனைப் பாமரர்களுக்குக் கொண்டு சென்றார். மிகக் குறைந்த வயதினிலே சமூகத்தை நேசிக்கும் மனப்பக்குவம் கொண்டதினால் இந்திய நாட்டின் விடுதலை உணர்வு, சமூகத்தில் புரையோடிக் காணப்பட்டுள்ள பெண் ஒடுக்குமுறை, சாதியக் கொடுமைகள், மக்களின் மூடநம்பிக்கைகள் ஆகியவற்றினைப் பகுத்தறிவுச் சிந்தனையோடு தன் கவித்துவத்தின் வழி மிக வன்மையாகச் சாடியிருக்கிறார். பிறப்பால் சமூகத்தில் உயர்ந்த நிலை என்று கட்டமைக்கப்பட்டிருக்கும் பார்ப்பனர் குடியில் பிறந்தவரான பாரதி அத்தகைய சமூக அடுக்குமுறைகளைப் பல இடங்களில் கடிந்து பேசுகிறார். அனைவரும் சமம் என்ற ஒற்றைக் கருத்தியல் சிந்தனையோடு பாரதி இந்தச் சமூகத்தை அணுகியுள்ளார் என்பது அவரின் கவிதைகளின்வழி நாம் அறியலாம். உயர்குடியில் பிறந்திருந்த பலரும் பேசாத நிலையில் சாதியப் பகுப்பினையும் அதன்வழி மக்கள் படும் கொடுமைகளையும் மிகவும் துணிந்து கண்டித்துச் செல்கின்றார். இருப்பினும் இத்தகைய சாதியப் படிநிலைகள், அதன் வழி உண்டாகும் வன்முறை ஆகியவற்றைச் சாடியிருந்தாலும் பிராமணியம், வேதம் ஆகியவற்றினை ஏற்றுக் கொணடார் என்பதனைப் பாரதியின் வரலாற்றுவழி அறிய முடிகிறது. அந்தவகையில், இருவேறு நிலையில் பாரதியாரை அணுகும் முறையில் இக்கட்டுரை அமைகிறது.

Abstract

Bharathi is proud to be the greatest social poet in Tamil Nadu. He brought the power of his writing into poetry and passed it on to the laity. With a mindset of loving society at a very young age, she has slammed the way of her poetry with a rational thought of the Indian sense of liberation, the mythical oppression of women in society, caste oppression and the superstitions of the people. Bharathi, who was born in Barbana Gudi, which is structured as a high position in the society by birth, criticizes such social strata in many places. We can see from the way in his poems that Bharati approached this community with the single ideological thought that all are equal. He boldly condemns caste discrimination and the atrocities perpetrated by the people in its path, which many in the aristocracy have not spoken about. However, Bharati's historical record shows that he accepted the Brahmanical scriptures in spite of such caste hierarchies and the violence that ensued. This article sets out to approach Bhartiyar in two different ways.

References

சொக்கலிங்கம் சி., & பொன்னீலன், (ப.ஆ.)., (2008), பாரதி என்றென்றும், சென்னை, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட்.

பக்தவத்சல பாரதி, (2019), பண்பாட்டு மானுடவியல், திருச்சி, புத்தாநத்தம், அடையாளம் பதிப்பகம்.

பரமகுரு பொன்., (1980), பாரதியார் கட்டுரைகள், சென்னை, வானதி பதிப்பகம்.

வெங்கடாசலபதி இரா., (1994), வ.உ.சியும் பாரதியும், சென்னை - 02, மக்கள் வெளியீடு.

Published

28.08.2022

How to Cite

R. Thievanathan, . D. R. T. (2022). பாரதியும் சாதியும்: Bharathi and Caste. இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies), 8(31), 9–15. Retrieved from https://inamtamil.com/journal/article/view/99