இராபர்ட் கால்டுவெல்லின் பன்முகப் பரிமாணங்கள் The Multi Dimension of Robert Caldwell

Authors

  • ஜா.பிராங்கிளின் தேவராஜ் | J.Franklin Devaraj Assistant Professor, Dept. of Tamil, Bishop Heber College (Autonomous), Thiruchirappalli – 620 017.

Keywords:

கால்டுவெல், வல்லுநர், அகழ்வாராய்ச்சி, மகுடம், பரிமாணம், கருத்தாக்கம், Caldwell, Archeology

Abstract

ஆய்வுச்சுருக்கம்

    கிறித்தவச் சமயப் பரவலாக்கத்திற்காக வந்த மேலைநாட்டுத் தொண்டர்கள் தமிழ்க் கற்றுத் துறைபோகிய வல்லுநர்களாயினர். எனினும், வேறுபல நற்செயல்களும் செய்தனர் என்பதற்குக் கால்டுவெல் நல்லதோர் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார். சமயப்பணி, சமுதாயப்பணி, கல்விப்பணி ஆகிய முப்பெரும் பணிகளைச் செய்த இப்பெருமகனார்  இப்பணிகளின் உட்பிரிவுகளுக்குள் சென்று நன்மை பயக்கும் செயல்களைச் செம்மையுற ஆற்றினார். கட்டடக்கலை, அகழ்வாராய்ச்சி, இசைக்கலை, ஓவியக்கலை, மொழிபெயர்ப்பு உள்ளிட்ட பல நற்செயல்களைச் செய்து இடையன்குடி மட்டுமின்றி இலக்கியத்திலும் அழியாப்புகழ் பெற்றவராய்த் திகழ்ந்தார். வேதாகமத் திருத்தப்பணி என்பதும் ஆலயமணி அமைப்பு என்பதும் இன்றும் என்றும் நினைத்து மகிழ்தற்குரிய மகுடப்பணியாக உள்ளது. இக்கருத்தாக்கத்தில் ‘இராபர்ட்  கால்டுவெல்லின் பன்முகப் பரிமாணங்களை விளக்குவதாக இக்கட்டுரை அமைகிறது.

Abstract

    Though the Foreigners came to India to spread the gospel to Indians and Tamilians, they became genious and experts in Tamil Literature. Robert Caldwell is a very good example for this. Though he concentrated on Religeon, Social and Education activities, he went in to the branches of the said three and achived his goal. His attempts concentrated Artchitectur, Archeology, Music, Art. The Translation and etc. All these works gave him name and fame. Not only at Idayankudi but in the Literature world. Bible Translation and Bell Tower are crown activates of him. In this them the article is structured.

References

சிவப்பிராகசம் வெ, (2015). தமிழ்த்திருமகன் கால்டுவெல் தமிழ்மொழி வரலாற்றில் ஒரு திருப்புமுனை, சென்னை : கலாம் பதிப்பகம்.

ஞான சந்திர ஜாண்சன் யோ, (2019). அருட்பணியாளர் இராபர்ட் கால்டுவெல், சென்னை : மோரியா ஊழியங்கள்.

டேவிட் பிராபகர் ப. (பதி.), (2014). கால்டுவெல் பார்வையும் பங்களிப்பும், சென்னை: தமிழ்த்துறை, சென்னை கிறித்தவக் கல்லூரி.

நிவேதிதா லூயிஸ், (2022). அறியப்படாத கிறிஸ்தவம் தமிழ்நாட்டில் ஒரு வரலாற்றுத் தேடல் (பகுதி-1), சென்னை : கிழக்கு பதிப்பகம்.

Published

28.11.2022

How to Cite

ஜா.பிராங்கிளின் தேவராஜ் ஜ. த. (2022). இராபர்ட் கால்டுவெல்லின் பன்முகப் பரிமாணங்கள் The Multi Dimension of Robert Caldwell. இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies), 8(32), 22–29. Retrieved from https://inamtamil.com/journal/article/view/206