தொல்காப்பிய வாசிப்பு வரலாறும் பதிப்புகளின் உருவாக்கமும்

Tolkāppiya vācippu varalāṟum patippukaḷiṉ uruvākkamum

Authors

  • முனைவர் பா. ஜெய்கணேஷ் (இளமாறன்) | Dr. B. Jaiganesh தமிழ்த் துறைத்தலைவர், அறிவியல் மற்றும் மானுடவியல் புலம் எஸ். ஆர்.எம். பல்கலைக்கழகம், காட்டங்குளத்தூர்

Keywords:

உருவாக்கம், தொல்காப்பிய, தொல்காப்பிய வாசிப்பு, வாசிப்பு, வரலாறு, பதிப்பு, பதிப்பு வரலாறு, வரலாறு வரலாறு

Abstract

தொல்காப்பியம் உருவானதன் பின்புலம்

தமிழ் இலக்கண வரலாற்றில் தனித்துவம் வாய்ந்த பனுவலாகவும், தொன்மைத் தன்மை உடைய பனுவலாகவும் இன்றுவரை நிலைபெற்றிருப்பது தொல்காப்பியமாகும்.தொல்காப்பியம் எழுதப்பட்ட காலத்திற்கு முன்னதான தரவுகள் என்பது இன்று முழுமையற்ற தன்மையில் இருக்கக்கூடிய நிலையில் தொல்காப்பியம் யாருக்காக எழுதப்பட்டது? எதற்காக எழுதப்பட்டது? என்ற கேள்வியைப் பலரும் முன்னிலைப்படுத்தி அது குறித்த விவாதங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

வரலாற்றுப் பார்வையுடனும், மொழியையும் இலக்கியங்களையும் பன்முகத் தளங்களில் ஆராய்ந்தும் எழுதப்பட்டுள்ள தொல்காப்பியம் ஒரு நீண்ட காலத் தமிழ்ச் சமூகத்தின் ஆவணம் என்பதை மட்டும் மறுப்பதற்கில்லை. தொல்காப்பியர் வகுத்தளித்த பல இலக்கணக் கூறுகளுக்குத் தரவுகளையும் சான்றுகளையும் தேடித் தேடி ஓய்ந்துபோன உரையாசிரியர்தம் கூற்றுகளின் வழியே தொல்காப்பியத்தின் தொன்மையை மதிப்பிட்டறிந்து கொள்ளமுடியும்.

இன்றைக்குத் தொகுக்கப்பட்டு நம் கையில் கிடைக்கின்ற பாட்டும் தொகையுமான பனுவல்களைக் கடந்து ஒரு மாபெரும் இலக்கிய இலக்கணப் பரப்பை நுண்ணிதின் மதிப்பிட்டறிந்து தமது தொல்காப்பியத்தைத் தொல்காப்பியர் வகுத்தளித்துள்ளார் என்பதை அவரின் இலக்கண உருவாக்க முறையிலிருந்து அறிந்துகொள்ள முடிகிறது. தொல்காப்பியத்திற்கு முன்னரும் தொல்காப்பியத்திற்குப் பின்னரும் வரலாற்றில் மறைந்து போன இலக்கண நூல்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கின்றது. இத்தனை நூல்களும் மறைந்து போனதற்குக் காரணங்கள் பலவாக இருந்தபோதிலும் தொல்காப்பியம் இத்தனை காலம் கடந்து வந்ததற்கும் காரணங்கள் பல உண்டு. தொல்காப்பியத்தின் தொடர்ச்சியான பயணங்களையும் அப்பயணங்களின் வழியாக அந்நூல் அச்சுவாகனமேறிய வரலாற்றையும் பல படிநிலைகளில் மதிப்பிடுவதாக இக்கட்டுரை அமைகின்றது.

References

தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சினார்க்கினியர் உரை (பகுதி 1) (அகத்திணையியல், புறத்திணையியல்), ச.பவானந்தம்பிள்ளை, மினெர்வா அச்சுக் கூடம், சென்னை, 1916.

தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சினார்க்கினியர் உரை (பகுதி 2) (களவியல், கற்பியல், பொருளியல்), ச.பவானந்தம்பிள்ளை, மினெர்வா அச்சுக்கூடம், சென்னை, 1916.

தொல்காப்பியம் பொருளதிகாரம் பேராசிரியர் உரை (பகுதி 3) (மெய்ப்பாட்டியல், உவமவியல், செய்யுளியல்), ச.பவானந்தம்பிள்ளை, லாங்மென்ஸ் க்ரீன் அண்ட் கம்பெனியார், சென்னை, 1917.

தொல்காப்பியம் பொருளதிகாரம் பேராசிரியர் உரை (பகுதி 4) (செய்யுளியல், மரபியல்), ச.பவானந்தம்பிள்ளை, லாங்மென்ஸ் க்ரீன் அண்ட் கம்பெனியார், சென்னை, 1917.

தொல்காப்பியம் செய்யுளியல் நச்சினார்க்கினியருரை, ரா.ராகவையங்கார், தமிழ்ச்சங்க முத்திராசாலைப் பதிப்பு, மதுரை, 1917.

தொல்காப்பியம், பொருளதிகாரம், இளம்பூரணம், பகுதி - க, (அகத்திணையியல், புறத்திணையியல்), நமச்சிவாய முதலியார், ஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1920.

தொல்காப்பியம், பொருளதிகாரம், இளம்பூரணம், அகத்திணையியலும், புறத்திணையியலும், வ.உ.சிதம்பரம் பிள்ளை, பிரம்பூர், சென்னை, 1921.

தொல்காப்பியம், எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், நமச்சிவாய முதலியார், ஸி. குமார சாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1922.

தொல்காப்பியம் மூலம் (கருத்து, பாடபேதக்குறிப்பு முதலியவற்றுடன்), பி.சிதம்பர புன்னைவனநாத முதலியார், பி.என்.சிதம்பரமுதலியார் அன் கோ. மதுரை, 1922.

தொல்காப்பியம் எழுத்ததிகாரம் நச்சினார்க்கினியர் உரை, தி.த.கனகசுந்தரம்பிள்ளை, கழகப்பதிப்பு, 1923.

தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரையருரையோடும் கந்தசாமியார் திருத்திய திருத்தங்களோடும் குறிப்புரையோடும், கழகப்பதிப்பு, 1923.

தொல்காப்பியம் பொருளதிகாரம் (மூலம்), கா. நமச்சிவாய முதலியார், ஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1924.

தொல்காப்பியம் சொல்லதிகாரம் இளம்பூரணம் காவேரிபாக்கம் நமச்சிவாய முதலியார், ஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், காக்ஸ்டன் பிரஸ், 1927.

தொல்காப்பியம் எழுத்ததிகாரம் இளம்பூரணர் பதவுரை, வ.உ.சிதம்பரம்பிள்ளை, அகஸ்தியர் பிரஸ், அம்பாசமுத்திரம், 1928.

தொல்காப்பியம் சொல்லதிகாரம் தெய்வச்சிலையார் உரை, ரா.வேங்கடாசலம், கரந்தைத் தமிழ்ச்சங்கம்,1929.

தொல்காப்பியம் பொருளதிகாரம் இளம்பூரணம், (களவியல், கற்பியல், பொருளியல்), வ.உ.சிதம்பரம்பிள்ளை, வாவிள்ள இராமஸ்வாமி சாஸ்த்ருலு அண்ட் சன்ஸ், சென்னை, 1933.

தொல்காப்பியம் பொருளதிகாரம் முதற்பாகம் (நச்சினார்க்கினியர் உரை), இது எஸ்.வையாபுரிப்பிள்ளை அவர்களால் ஓலைப்பிரதியைக் கொண்டு பரிசோதிக்கப்பட்டு ம.நா.சோமசுந்தரம்பிள்ளை ஆராய்ச்சிக் குறிப்புக்களுடன் எஸ்.கனகசபாபதிப் பிள்ளையால் பதிப்பிக்கப்பட்டது, சென்னை சாது அச்சுக்கூடம், 1934.

தொல்காப்பியம் பொருளதிகாரம் இரண்டாம் பாகம் (பேராசிரியம்), இது வே.துரைசாமி ஐயரவர்களால் ஏட்டுப்பிரதியோடு ஒப்பிட்டு ஆராய்ந்து திருத்தப்பட்டு ம.நா.சோமசுந்தரம் பிள்ளை ஆராய்ச்சிக் குறிப்புக்களுடன் எஸ்.கனகசபாபதிப் பிள்ளையால் பதிப்பிக்கப்பட்டது, சென்னை சாது அச்சுக் கூடம், 1935.

தொல்காப்பியம் பொருளதிகாரம் இளம்பூரணம், (மெய்ப்பாட்டியல், உவமவியல், செய்யுளியல், மரபியல்), வ.உ.சிதம்பரம்பிள்ளை, வாவிள்ள இராமஸ்வாமி சாஸ்த்ருலு அண்ட் சன்ஸ், சென்னை, 1935.

தொல்காப்பியம் பொருளதிகாரம் இளம்பூரணம் முழுவதும் வ.உ.சிதம்பரம்பிள்ளை, எஸ்.வையாபுரிப்பிள்ளை, வாவிள்ள இராமஸ்வாமி சாஸ்த்ருலு அண்ட் சன்ஸ், சென்னை, 1935.

தொல்காப்பியம் எழுத்ததிகாரம் நச்சினார்க்கினியர் உரை, சி.கணேசையர் எழுதிய உரை விளக்கக் குறிப்புகளுடன் நா.பொன்னையாவால் பதிப்பிக்கப்பட்டது. சுன்னாகம் திருமகள் அழுத்தகம், 1937.

தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரையர் உரை, சி.கணேசையர் எழுதிய உரை விளக்கக் குறிப்புகளுடன் நா.பொன்னையாவால் பதிப்பிக்கப்பட்டது. சுன்னாகம் திருமகள் அழுத்தகம், 1938.

தொல்காப்பியம் சொல்லதிகாரம் நச்சினார்க்கினியார் உரை, மே.வீ.வேணுகோபாலப் பிள்ளை, பவானந்தர் கழகம், சென்னை, 1941.

தொல்காப்பியம் மூலம், தி.சு.பாலசுந்தரம்பிள்ளை எழுதிய விளக்கக் குறிப்புகள், கழகம், 1943.

தொல்காப்பியம் பொருளதிகாரம் (இரண்டாம் பாகம்) பேராசிரியர் உரை, சி.கணேசையர் ஒப்புநோக்கித் திருத்திய திருத்தங்களோடும் எழுதிய உரை விளக்கக் குறிப்புகளுடனும் நா.பொன்னையாவால் பதிப்பிக்கப்பட்டது. சுன்னாகம் திருமகள் அழுத்தகம், 1943.

தொல்காப்பியம் எழுத்ததிகாரம் நச்சினார்க்கினியர் உரை, புலவர் ஞா.தேவநேயப் பாவாணர் அடிக்குறிப்புடன், கழகம், 1944.

தொல்காப்பியம் பொருளதிகாரம் (முதற்பாகம்) நச்சினார்க்கினியர் உரை, சி.கணேசையர் ஒப்புநோக்கித் திருத்திய திருத்தங்களோடும் எழுதிய உரை விளக்கக் குறிப்புகளுடனும் நா.பொன்னையாவால் பதிப்பிக்கப்பட்டது. சுன்னாகம் திருமகள் அழுத்தகம், 1948.

தொல்காப்பியம் (மூலம்) பதிப்பாசிரியக் குழுவினரால் பல பிரதிகளை ஒப்புநோக்கிப் பரிசோதித்து வெளியிடப்பெற்றது, எஸ்.ராஜம், மர்ரே வெளியீடு, சென்னை, 1960.

தொல்காப்பியம் சொல்லதிகாரம் நச்சினார்க்கினியார் உரை, பல பிரதிகளைக் கொண்டு பரிசோதித்துப் பதிப்பித்தவர் இராம.கோவிந்தசாமி பிள்ளை, தஞ்சை சரசுவதி மகால் நிர்வாகக் குழுவினருக்காக எஸ்.கோபாலனால் வெளியிடப்பட்டது. 1962.

தொல்காப்பியம் சொல்லதிகாரம் உரைக்கோவை முதற்பாகம் (கிளவியாக்கம், வேற்றுமையியல், வேற்றுமை மயங்கியல், விளிமரபு) ஆபிரகாம் அருளப்பன், வி.ஐ.சுப்பிர மணியன், அருள் அச்சகம், பாளையங்கோட்டை, 1963.

தொல்காப்பியம் சொல்லதிகாரம் கல்லாடனார் விருத்தியுரையும் பழைய உரையும், கு.சுந்தரமூர்த்தி எழுதிய விளக்கவுரையுடன், கழகம், 1964.

தொல்காப்பியம் எழுத்ததிகாரம் இளம்பூரணர் உரை, ஆராய்ந்து விளக்கக்குறிப்புகளுடன், அச்சிட்டார், அடிகளாசிரியர், கும்பகோணம் காவேரி கலர் அச்சுக்கூடம், 1969.

தொல்காப்பியம் எழுத்ததிகாரம் இளம்பூரணர் (விளக்கவுரையுடன்), கு.சுந்தரமூர்த்தி, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், 1969.

தொல்காப்பியம் சொல்லதிகாரம், கல்லாடனார் விருத்தி, தெ.பொ.மீனாட்சிசுந்தரனார், தமிழ்நாடு அரசு, 1971.

தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரையர் உரை, கு.சுந்தரமூர்த்தி, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், 1981.

தொல்காப்பியம் பொருளதிகாரம் செய்யுளியல் இளம்பூரணர் உரை, அடிகளாசிரியர், தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1985.

தொல்காப்பியம் பொருளதிகாரம் பிற்பகுதி (மெய்ப்பாட்டியல், உவமவியல், செய்யுளியல், மரபியல்), பேராசிரியர் உரை, (குறிப்புரையுடன்) கு. சுந்தரமூர்த்தி, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், 1985.

தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சினார்க்கினியர்உரை, தொகுதி 1,2, கு.சுந்தரமூர்த்தி, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், 1986.

தொல்காப்பியம் சொல்லதிகாரம் இளம்பூரணர் உரை, அடிகளாசிரியர், தமிழ்ப்பல்கலைக் கழகம், தஞ்சாவூர், 1988.

தொல்காப்பிய மூலம், பாடவேறுபாடுகள் - ஆழ்நோக்காய்வு, கே.எம்.வேங்கடராமையா, ச.வே.சுப்பிரமணியன், ப.வெ.நாகராசன், பன்னாட்டுத் திராவிட மொழியியற் கழகம், திருவனந்தபுரம், 1996.

மூலப்பதிப்பு

மர்ரே பதிப்பு (1960), திராவிட மொழியியற் கழகம் வெளியிட்ட (1996) பதிப்பு.

உரைப்பதிப்புகள்

நச்சினார்க்கினியர்:

எழுத்ததிகாரம் - சி.கணேசையர் (1937), கு.சுந்தரமூர்த்தி (1965), இராம.கோவிந்தசாமிப்பிள்ளை (1967)

சொல்லதிகாரம் - மே.வீ.வே. (1941), கு.சுந்தரமூர்த்தி (1952), இராம.கோவிந்தசாமிப் பிள்ளை (1962)

பொருளதிகாரம் (முன் ஐந்தியல்கள்) - எஸ்.கனகசபாபதிப்பிள்ளை (1934), சி.கணேசையர் (1948), செய்யுளியல் - ரா.ராகவையங்கார் (1917)

பேராசிரியர்:

பொருளதிகாரம் (பின்னான்கு இயல்கள்) - எஸ்.கனகசபாபதிப்பிள்ளை (1935), கணேசையர் (1943)

இளம்பூரணர்:

எழுத்ததிகாரம் - அடிகளாசிரியர் (1969), கு.சுந்தரமூர்த்தி (1969)

சொல்லதிகாரம் - கா.நமச்சிவாயமுதலியார், கு.சுந்தரமூர்த்தி( 1963), அடிகளாசிரியர் (1988)

பொருளதிகாரம் - வ.உ.சி.(1935), மு.சண்முகம்பிள்ளை (மறுபதிப்பு 1995, 1996)

சேனாவரையர் :

சொல்லதிகாரம் - சி.கணேசையர் (1938), கு.சுந்தரமூர்த்தி(1966)

தெய்வச்சிலையார்:

சொல்லதிகாரம் - கு.சுந்தரமூர்த்தி ( 1963)

கல்லாடம், பெயரறியப்படாத உரை :

சொல்லதிகாரம் - தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் ( 1971)

சண்முகம்பிள்ளை, மு., தொல்காப்பியப் பதிப்புகள், (பக்.1-70), தமிழாய்வு தொகுதி-8, சென்னைப் பல்கலைக்கழகம், 1978.

மெய்யப்பன், ச., தொல்காப்பியப் பதிப்புகள், தொல்காப்பியச் சிந்தனைகள், அண்ணாமலை நகர், 1978, ப-ம். 46.

கிருட்டிணமூர்த்தி, கோ., தொல்காப்பிய ஆய்வின் வரலாறு, சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை, 1990.

சுப்பிரமணியன், ச.வே., தொல்காப்பியப் பதிப்புகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 1992.

மதுகேசுவரன், பா., தொல்காப்பியப் பதிப்பு வரலாறு, சந்தியா பதிப்பகம், 2008.

தொல்காப்பியம், சங்க இலக்கியம்: பதிப்பும் பதிப்பாளரும், பதிப்பாசிரியர், ச.சிவகாமி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 2009.

Published

10.11.2016

How to Cite

முனைவர் பா. ஜெய்கணேஷ் (இளமாறன்) ப. ஜ. (2016). தொல்காப்பிய வாசிப்பு வரலாறும் பதிப்புகளின் உருவாக்கமும்: Tolkāppiya vācippu varalāṟum patippukaḷiṉ uruvākkamum. இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies), 2(7), 25–48. Retrieved from https://inamtamil.com/journal/article/view/159