தொல்காப்பியனார் காலம்

Tolkappiar period

Authors

  • க.வெள்ளைவாரணனார் | K. Vellaivaranar மேனாள் தலைவர், தமிழ்த் துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்

Keywords:

தொல்காப்பியனார் காலம், தொல்காப்பியனார், காலம்

Abstract

இப்பொழுது கிடைத்துள்ள தமிழ் நூல்களெல்லாவற்றிறிகும் மிகமிகத் தொன்மை வாய்ந்தது தொல்காப்பியமாகும். எட்டுத்தொகை  நூல்களெல்லான்றாகிய புறநானூற்றிற் காலத்தால் மிகப் பழைய பாடல்களும் தொகுக்கப்பட்டுள்ளன. அவற்றின் சொற்பொருளமைதியினை ஆராயுங்கால் இயற்றமிழ் நூலாகிய தொல்காப்பியம் சங்கத் தொகை நூல்களெல்லாவற்றிறிகும் காலத்தால் முற்பட்டதென்பது நன்கு புலனாம்.

            கயவாகு என்னும் பெயருடைய வேந்தர் இருவர் இலங்கையில் ஆட்சி புரிந்துள்ளார்கள். அவர்களுள் முதற்கயவாகுவின் காலம் கி.பி.171-193 என்பது ஆராய்ச்சியாளர் துணிபு. செங்குட்டுவனென்னும் சேரமன்னன், கண்ணகியார்க்குத் திருவுருவமைத்துக் கோயிலெடுத்துக் கடவுண் மங்கலஞ் செய்த நாளில், இலங்கை வேந்தனாகிய கயவாகு வஞ்சி நகரத்திற்கு வந்து கண்ணகியாரை வழிபட்டு வரம்பெற்றுச் சென்றான் எனச் செங்குட்டுவற்குத் தம்பியாகிய இளங்கோவடிகள் தாமியற்றிய சிலப்பதிகாரத்ற் குறிப்பிட்டுள்ளார். எனவே இளங்கோவடிகள் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டென்பது தெளிவாதல் காணலாம் (திரு.தி.வை.சதாசிவ பண்டாரத்தார் அவர்கள் எழுதிய தமிழிலக்கிய வரலாறு (கி.பி.250-600) பக்கம் 2, 3). இளங்கோவடிகளும், அவர் காலத்தும் அவர்க்கு முன்னும் வாழ்ந்த சங்கப் புலவர்களும் தெய்வப் புலவர் இயற்றிய திருக்குறளிலுள்ள சொற்றொடர்களையும் கருத்துக்களையும் அவ்வாறே எடுத்தாண்டுள்ளார்கள். ஆகவே திருக்குறளாசிரியர் திருவள்ளுவனார் காலம் கி.மு. முதல் நூற்றாண்டெனக் கொள்ளுதல் ஏற்புடையதாகும்.

References

இதுகாறும் எடுத்துக்காட்டியவாற்றால் ஆசிரியர் திருவள்ளுவனார் இயற்றிய திருக்குறள், தொல் காப்பியக் கருத்துக்களையும் சொற்றொடர்களையும் தன்னகத்தே கொண்டு விளங்குகின்றமை நன்கு புலனாதல் காணலாம்.

(தொடரும்...)

Published

10.05.2016

How to Cite

வெள்ளைவாரணனார் க. (2016). தொல்காப்பியனார் காலம்: Tolkappiar period. இனம் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam International E-Journal of Tamil Studies), 2(5), 8–9. Retrieved from https://inamtamil.com/journal/article/view/143