மலர்: 8, இதழ்: 32 | Vol. 8, Issue : 32

15.05.2022

இதழ் 32-ற்குக் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. அதற்குரிய இறுதி நாள் - 30.09.2022.

இனம் ஆய்விதழ் - பதிப்புநெறிகள்

அறிமுகம்

இனம்: பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் காலாண்டுக்கு ஒருமுறை மே, ஆகட்டு, நவம்பர், பிப்புருவரி ஆகிய திங்கள்களில் வெளிவரும். இவ்விதழ் 2015 முதல் இயங்கி வருகிறது.

அருமைத் தமிழ் உறவுகளே! ஆய்வு நண்பர்களே! இந்தியாவிலிருந்து வெளிவரும் இனம் தமிழாய்விதழில் கட்டுரைகள் வெளியிடுவதற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம். எங்கள் குழு கலை, இலக்கியம், இலக்கணம், மானுடம், மொழியியல், சமயம், நாட்டுப்புறவியல், தொல்லியல், கணினித்தமிழ், தமிழ் இயற்கை மொழி ஆய்வுகளுக்கு முன்னுரிமை அளிக்கும். ஒவ்வொரு கட்டுரையும் ஆசிரியர் குழுவினரால், துறைசார் வல்லுநர் குழுவால் மதிப்பீடு செய்யப்பெற்ற பின்னரே இதழில் வெளியிடப்பெறும்.

இவ்விதழ் பன்னாட்டு ஆராய்ச்சி இதழ் ஆகும். இவ்விதழின் மூலம் தமிழாய்வுகளை உலகளாவிய வாசிப்புக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்பது நோக்கம். எனவே, தங்களின் ஆய்வுச் சிந்தனைகளை அனைவரும் வாசிக்கவும் மேற்கோள் காட்டவும் இவ்விதழ் உறுதுணை நல்கும் என உறுதியளிக்கின்றோம்.

About us

Inam is an International E-Journal of Tamil Studies that publishes articles in Tamil and English (bi-lingual) and it comes quarterly (February, May, August, and November) since 2015. We publish research and review articles, book reviews, and editorials. 

Dear researcher, we welcome original articles from all over the world who are willing to support the Tamil research journal from Tamil Nadu, India. The articles from Arts, Literature, Grammar, Philosophy, Linguistics, Folklore, Archeology, Religion, Science, Tamil NLP and Computing Tamil Related Researches are most preferable. Your article will be published in the journal “Inam” if your manuscript qualifies the editorial review process. 

The aim of the journal is to extend the readability of the Tamil research article among interested readers around the world. We hope this journal exposes your research to a vast audience and aids to cite your research.

நோக்கமும் எல்லையும்

இனம்: பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (IIETS) என்பது உலகளாவிய ஆய்விதழாகும், இவ்வாய்விதழ் அறிஞர்கள், கல்வியாளர்கள், தமிழ் ஆய்வாளர்கள், கொள்கை வகுப்பாளர்களிடையே ஆய்வுசார் முன்னெடுப்புகளையும் கூட்டு ஆய்வுகளையும் ஊக்குவிக்கிறது. சர்வதேச சூழல்களில் தமிழ் மொழி, கலை, இலக்கியம், இலக்கணம், மானுடம், மொழியியல், சமயம், நாட்டுப்புறவியல், தொல்லியல், கணினித்தமிழ் ஆகிய துறைகளின்கீழ்ப் பல்வேறு பொருண்மைகளில் இந்த ஆய்விதழ் கவனம் செலுத்துகிறது. இந்த ஆய்விதழ் ஓராண்டில் நான்கு முறை மின்வடிவமாக வெளிவருகிறது.

ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்களிடையே ஊடாடும் ஆராய்ச்சி முடிவுகளின் பாதுகாப்பு அரணாக இது ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளது. இந்தியா மற்றும் உலகெங்கிலும் உள்ள தமிழ் ஆய்வுகள் தொடர்பான துறைகளில் அவர்களின் ஆராய்ச்சி, கோட்பாடு, விமர்சன ஆய்வுகளின் அடிப்படையில் கல்வி நிறுவனங்கள், நிறுவனங்கள், தனியார் துறைகளைச் சேர்ந்த அனைத்து ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்களிடமிருந்து ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. மேலும், மேற்குறிப்பிடப்பட்ட துறைகளில் வெளிவந்துள்ள ஆராய்ச்சி முடிவுகள் தொடர்பான புத்தகங்களை அறிமுகமும் மதிப்பாய்வும் செய்ய வாய்ப்பு வழங்கப்படுகின்றது.

Aim and Scope

Inam : International E-Journal of Tamil Studies (IIETS) is a world-wide journal which encourages academic discussions and collaborative literary works among the scholars, academicians, educationalists, and policy-maker of Tamil studies. The journal focuses wide range of topics under the areas of Tamil language, Arts, Literature, Grammar, Philosophy, Linguistics, Folklore, Archeology, Religion, Science and Computing Tamil in international contexts. The journal is published four issues in a year and comes out as an electronic form. 

It aims to play a vital role as a medium of interactive research findings among researchers and the academicians. Contributions are invited from all researchers and academicians from educational institutions, companies and private sectors based on their research, theory and critical explorations in areas of Tamil studies from India and worldwide. Moreover, the contributions can be review of books and products related to research findings in mentioned fields.

 ஆசிரியர்குழுவின் செயல்பாடுகள்

ஆசிரியர் குழுவின் பொறுப்புகள்

ஆசிரியர் குழுவிலுள்ள உறுப்பினர்களின் பொறுப்புகள் பின்வருமாறு:

ஒப்படைக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரையானது ஆய்விதழில் வெளியிடுவதற்கு ஏற்றவாறு இல்லையென்றால் ஆசிரியர்கு ழுவினர் நிராகரிக்கலாம்.

ஆய்வாளர்களுக்கு அறிவுறுத்தப்பெற்ற கருத்துகளுக்குச் சரியான விளக்கம் அவர்கள் சார்பாக அளிக்கப்படாமல் இருந்தாலும் அல்லது ஆய்வின் தரம் இனம் ஆய்விதழின் தரத்துடன் பொருந்தவில்லை என்றாலும் அந்த ஆய்வை ஆசிரியர்குழுவினர் மேலதிக மதிப்பாய்வு இல்லாமல் நிராகரிக்கலாம்.

Editors Roles and Responsibilities

The responsibilities of members of the Editorial Board include:

Screening the submitted manuscripts for possible publication in IIETS

The Editor may reject the manuscript without further review because of redundancy with recent material, or the manuscript quality didn’t match with the standard of IIETS.

தொழில்நுட்ப அம்சங்களில் பொறுப்பு

ஆய்வுக்கட்டுரையின் போக்கை மதிப்பாய்வு செயல்முறைக்கு உட்படுத்துவதற்கு முன்பு ஆசிரியர்குழுவினர் கட்டுரை உரிய கட்டமைப்புடன் உருவாக்கம் பெற்றிருக்கிறதா என உறுதிப்படுத்த வேண்டும். இந்தப் பிரிவில் கருத்தில்கொள்ள வேண்டிய காரணிகளில் ஆய்வுக்கட்டுரையின் வடிவம், புள்ளிவிவரங்கள், அட்டவணைகளின் தரம், அளவு, சரிபார்ப்பு ஆகியவை அடங்கும். ஆய்வுக்கட்டுரையின் பிரதி சரியான தமிழ்க் கலைச்சொல் பயன்பாட்டைச் சரிபார்த்தல் தேவை. மேலும் இதில் இலக்கணம், நிறுத்தற்குறி, எழுத்துப்பிழை ஆகியவற்றையும் சரிபார்த்தல் ஆசிரியர்குழுவினரின் பணியாகும்.

Responsibility on technical features

The Editor should ensure that every technical aspect of the manuscript is fulfilled by the author(s) before proceeding to the reviewing process. Factors that must be considered in this section include the manuscript format, quality and size of figures and tables, and proofreading. The manuscript needs to be proofread for proper Tamil vocabulary usage, including grammar, punctuation, spelling, and overall style by the authors Proofreading Services.

நெறிமுறைக் கொள்கைகள் மீதான பொறுப்பு

கருத்துத் திருட்டு, ஒரே கட்டுரையைப் பிற இதழுக்கும் ஒப்படைத்தல் அல்லது படைப்புரிமையின் பல்வேறு அம்சங்களுடன் தொடர்புடைய கருத்துவேறுபாடுகள் குறித்து அவ்வாய்வுக்கட்டுரைப் பிரதிகளின் மீது சோதனைகள் செய்யப்படும்.

Responsibility on ethical policies

Manuscript checks will be done on plagiarism, multiple submission of the same article to other journals, or disagreements related to various aspects of authorship.

ஆய்வுப் பிரதியின் இணை மதிப்பாய்வை நிர்வகித்தல்

ஆய்வுப் பிரதியின் இணை மதிப்பாய்வுச் செயல்முறையை ஆசிரியர்குழுவினர் நிர்வகிக்க வேண்டும். இந்தச் செயல்முறையில் பொருத்தமான இணை மதிப்பீட்டாளர்களைக் கண்டுபிடித்தல், ஆய்வாளர்கள், விமர்சகர்களுடன் மின்னஞ்சல் மூலம் தொடர்புகொள்ளுதல், மீண்டும் மீண்டும் மதிப்புரைகளை நிர்வகித்தல் ஆகியவை அடங்கும். மேலும், ஆய்வுப் பிரதி வெளியீட்டுத் தன்மையை அடையும் வரை ஆசிரியர்குழுவினரால் இம்முறை கையாளப்படும்.

Managing the peer review of a Manuscript

The Editor needs to manage the peer review process of the manuscript. This process includes finding appropriate peer reviewers, communicating with the authors and reviewers through the e-mail and managing the repeated reviews. Also, the manuscript will be handled by the Editor until it reaches publication stage.வ

பொருத்தமான இணை மதிப்பாய்வாளர்களைக் கண்டறிதல்

திறனறிஞர்களைத் தேடுவது பதிப்பாசிரியரின் பணியாகும். ஒவ்வொரு திறனறிஞர்களுக்கும், அவர்களின் தலைப்பு, முழுப் பெயர், மின்னஞ்சல் முகவரி, முழுத் தொடர்புத் தகவல்களும் வழங்கப்படும். மறுஆய்வுச் செயல்முறையை மேற்கொள்ள குறைந்தபட்சம் 2 திறனறிஞர்கள் இம்மதிப்பீட்டில் பயன்படுத்தப்பெறுவர்.

Finding appropriate peer reviewers

Searching for potential reviewers is the task of the editor. Kindly provide for each potential reviewer, their title, full name, e-mail address and full contact information. A minimum of 2 reviewers are needed to carry out the reviewing process.

மதிப்பிடப்பெற்ற ஆய்வுப் பிரதி குறித்த இறுதி முடிவைத் தீர்மானித்தல்

இணை மதிப்பாய்வாளர்கள் அல்லது பதிப்பாசிரியரால் இணை மதிப்பாய்வு முடிந்ததும், ஏற்றுக்கொள்வது, நிராகரிப்பது அல்லது திருத்தம் செய்வதற்கான முடிவுகள் மீண்டும் செய்யப்பட வேண்டுமா என்பதை முதன்மைப் பதிப்பாசிரியர் உறுதி செய்வார். திருத்தம் செய்திருப்பின், திருத்தத்தின் முழு விவரங்களும் கட்டுரை எழுதிய ஆய்வாளருக்குத் தெரிவிக்கப்படும்.

Deciding the final decision on the revised manuscript

Once peer review is completed by peer reviewers or editorial board, the Editor has to determine whether the decisions to accept, reject, or the revision needs to be done again. If revision, the editor has to inform the corresponding author the full details of revision.

அனைத்துத் தகவல்களையும் பாதுகாப்பாக வைத்திருத்தல்

நாங்கள் உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் அனைத்துத் தகவல்களையும் பாதுகாப்பாக வைத்திருப்போம்.

Keeping all the information confidential

Please note that you must keep all the information we share with you in the strictest confidence.

மூலவராக இருந்து திட்டமிடுதலில் பங்களிப்புச் செய்தல்

ஆய்விதழானது செம்மைக்காக அங்கீகரிக்கப்படுவதை ஆசிரியர்குழுவினர் எதிர்பார்க்க வேண்டும். ஆகவே, மேம்படுத்துதல், எதிர்காலத் திசையைத் திட்டமிடுதல், இனம் ஆய்விதழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதை உறுதி செய்வதற்கான வழிமுறைகளைப் பரிந்துரைப்பதன் மூலம் ஆசிரியர்குழுவினர் இனம் ஆய்விதழிற்கான மூலவராக இருந்து திட்டமிடுதலில் முக்கிய பங்கு வகிக்க வேண்டும்.

Play a role as a strategic planner

Editors should anticipate having their journals recognized for their excellence. Therefore the Editors should play a vital role as a strategic planner for IIETS by help suggest methods towards improving, planning future direction and ensuring an ever-increasing readership of IIETS.

இணையாய்வு மதிப்பீட்டு நெறிகள்

இணையாய்வு மதிப்பீட்டுக் கொள்கை

சிறந்ததும் தரமானதுமாகிய ஆய்வுப் பிரதி மட்டுமே வெளியிடப்படுவதை உறுதி செய்வதே இணை மதிப்பாய்வுச் செயல்முறையாகும். அனைத்து ஆய்வுப் பிரதிகளும் கீழே குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறையைப் பின்பற்றி மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Peer Review Policy

The peer review process is to ensure that only excellent and quality manuscript is published. All manuscripts are peer reviewed following the procedure outlined below.

1) தொடக்கநிலை மதிப்பீடு

ஒப்படைக்கப்பட்ட அனைத்து ஆய்வுப் பிரதிகளையும் ஆசிரியர்குழுவினர் மதிப்பீடு செய்கின்றனர்.

ஆய்வுப் பிரதி மிகச் சிறந்ததாக இருந்தால், இந்தக் கட்டத்தில் ஒரு ஆய்வுப் பிரதியை ஏற்றுக்கொள்ள முடியும்.

மேலும், ஆய்வுப் பிரதியின் உள்ளடக்கம் மோசமானதாக இருந்தால் அல்லது தீவிரமற்ற, துல்லியமற்ற ஆராய்ச்சி முடிவுகளைக் கொண்டிருந்தால், மோசமான தமிழ் எழுத்துக்களைக் கொண்டிருந்தால், இனம் ஆய்விதழின் நோக்கங்களுக்கும் நோக்கத்திற்கும் வெளியே இருந்தால், இந்தக் கட்டத்தில் அப்பிரதி நிராகரிக்கப்படும்.

இந்தக் கட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆய்வுப் பிரதியின் செயல்முறைகளை மதிப்பாய்வு செய்வதற்குக் குறைந்தபட்சம் 2 நிபுணர்களுக்கு அனுப்பப்படும்.

1) Initial Manuscript Evaluation 

The Editor evaluates all submitted manuscripts.

If the manuscript is very excellent, it is possible for a manuscript to be accepted at this stage.

Also, the manuscript can be rejected at this stage, if the content of the manuscript is not original or has seriously inaccurate data and research findings or has poor Tamil writing, or is outside of the aims and scope of the IIETS.

The manuscript that is accepted in this stage will be passed on to at least 2 experts for the reviewing process.

2) இணை மதிப்பாய்வு வகை

இரட்டைத் திரைமறைப்பு மறுஆய்வு செயல்முறை என்பது மதிப்பாய்வு வகையாகும். இங்கு மதிப்பாய்வு செய்பவர் மற்றும் ஆய்வாளர்(கள்) இருவரும் மறுஆய்வு செயல்முறையின் மூலம் அடையாளம் காணப்படாமல் இருக்கிறார்கள்.

2) Type of Peer Review

Double blind reviewing process is the type of review, where both the reviewer and the author(s) remain unidentified through the review process until the article is published.

3) திறனறிஞர் தேர்வு

ஒப்படைக்கப்பட்ட ஆய்வுப் பிரதியின் உள்ளடக்கத்துடன் பொருந்தக்கூடிய அவர்களின் நிபுணத்துவத்தின் அடிப்படையில் இரண்டு திறனறிஞர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

3) Reviewer Selection 

Two reviewers are chosen based on their expertise that matches with the content of the manuscript submitted.

4) திறனறிஞர் அறிக்கைகள்

கீழே வரையறுக்கப்பட்ட அளவுகோல்களின் அடிப்படையில் ஆய்வுப் பிரதியை மதிப்பாய்வாளர் மதிப்பீடு செய்வர்:

  • உண்மைத் தன்மை இடம்பெறல்.
  • உரிய ஆய்வுநெறி முறை பின்பற்றல்.
  • பொருத்தமான நெறிமுறை வழிகாட்டுதல்களைப் பின்பற்றுதல்.
  • தெளிவான முடிவுகளை, விவாதத்தை முன்வைத்து, ஆய்வு முடிவுகளைத் தருதல்.
  • ஆய்வுப் பிரதியில் மேற்கோள் காட்டப்பட்ட துல்லியமான மற்றும் போதுமான குறிப்புகள் அளித்தல்.
  • மொழிப்பிழைகளையும் ஆய்வுநடைகளையும் கணித்தல்
  • மறுஆய்வு செயலாக்கத்திற்காக மதிப்பாய்வாளர் ஒப்புக்கொண்டு மதிப்பீடு வழங்க எடுத்துக்கொள்ளும் காலம் மூன்று-ஐந்து வாரங்கள் ஆகும்.
  • ஆய்வுப் பிரதியை மதிப்பீட்டிற்கு உட்படுத்தலாம் என முடிவு செய்யப்பெற்றால், தொடக்கநிலை மதிப்பாய்விற்கு எடுத்துக்கொள்ளப்படும்.

4) Reviewer reports 

Reviewer will evaluate the manuscript based on criteria defined below:

  • Originality
  • Proper methodology
  • Follows appropriate ethical guidelines
  • Present a clear results and discussion, which support the conclusions
  • Accurate and adequate references cited in the manuscript.
  • Tamil grammar and language
  • The time required for the review process is estimated to be three-five weeks after the reviewer agrees to review.
  • If the decision is to revise the manuscript, the revised manuscripts will be returned to the initial reviewer for evaluation process.

5) இறுதி முடிவு

ஆய்வுப் பிரதியை ஏற்றுக்கொள்வதற்கோ அல்லது நிராகரிப்பதற்கோ இறுதி முடிவை ஆசிரியர்குழுவினர் பதிப்பாசிரியருக்கு அறிவிப்பர். ஆய்வுப் பிரதி கிடைத்த நாளிலிருந்து எட்டு வாரங்களுக்குள் ஆசிரியர்குழுவினரின் முடிவு குறித்து ஆய்வாளர்களுக்கு அறிவிக்கப்படும்.

5) Final Decision

The Editor will inform the final decision to accept or to reject the manuscript to the author(s). Author(s) will be notified about the Editorial decision within eight weeks from the date of manuscript receipt.

6) ஆசிரியர் கட்டணம்

இந்த ஆய்விதழ் கட்டுரையை ஒப்படைப்புச் செய்வதற்கும் வெளியீட்டிற்கும் எவ்வித கட்டணங்களையும் பெறுவதில்லை. கட்டுரை மதிப்பீட்டிற்கான தொகையை ஆய்வாளர்கள் செலுத்தத் தேவையில்லை.

6) Author Fees

This journal does not charge article submission and publication fees. The authors are not required to pay the article processing fee.

Section Policies Articles

  • Open Submissions
  • Indexed
  • Peer Reviewed