TY - JOUR AU - ALM, Mujahid AU - ML., Mohamed Helfan PY - 2022/05/08 Y2 - 2024/03/28 TI - ஆதரவற்ற சிறுவர்களைப் பராமரிப்பதில் ஏறாவூர் சிறுவர் பராமரிப்பு இல்லத்தின் சேவைகளும் சவால்களும் - ஒரு விஷேட பார்வை : Services and Challenges of Eravur Child Care Home in Caring for Orphaned Children an Overview JF - இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies) JA - இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் காலாண்டுக்கு ஒருமுறை மே, ஆகட்டு, நவம்பர், பிப்புருவரி ஆகிய திங்கள்களில் வெளிவரும். இவ்விதழ் 2015 முதல் இயங்கிவருகிறது (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies that publishes articles in Tamil and English (bi-lingual) and it comes quarterly (February, May, August, and November) since 2015. We publish research and review articles, book reviews, editorials.). VL - 8 IS - 30 SE - Articles DO - UR - https://inamtamil.com/journal/article/view/92 SP - 1-13 AB -
ஆய்வுச்சுருக்கம்

பெற்றோர்களின் பிரிவு பிள்ளைகளின் வாழ்வில் பெரிதும் தாக்கம் செலுத்துவதோடு, ஆதரவற்றவர்கள் என்ற பெயரையும் தோற்றுவிக்கின்றது. இவ்வாறான வகுப்பினர்களை இனங்கண்டு மனிதநேய அடிப்படையில் அவர்களுக்கான சிறந்த பாதைகளைக் காட்டி வாழ்வைச் செம்மைப்படுத்தி எதிர்காலத் தலைவர்களாக உருவாக்கும் வண்ணம் ஏறாவூர் சிறுவர் பராமரிப்பு இல்லம் உழைத்து வருகின்றது. இந்நிலையத்தின் சேவைகளை மதிப்பிடுதல், மாணவர்களைப் பராமரிப்பதில் இல்லம் எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என்பவற்றைக் கண்டறிந்து விவரிப்பதை நோக்கமாகக் கொண்டு இவ்வாய்வு அமைந்துள்ளது. பண்புரீதியில் அமைந்த இவ்வாய்வு நேரடி அவதானம் மற்றும் நிருவாகிகள், மாணவர்கள் உள்ளடங்கலாக முப்பத்தைந்து நபர்களிடம் நேர்காணல் மேற்கொள்ளப்பட்டு, தகவல்கள் பெறப்பட்டுள்ளன. பெறப்பட்ட தகவல்கள் குறிமுறை அடிப்படையில் பகுப்பாய்வு செய்யப்பட்டு, முடிவுகள் பெறப்பட்டன. அரச அதிகாரிகள் மற்றும் தனவந்தர்களைக் கொண்டமைந்த நிர்வாகத்தின் மூலம் ஆதரவற்ற மாணவர்களுக்கான உணவு, உடை, உறையுள், கல்வி, பாதுகாப்பு போன்றவை சிறப்பாகக் கிடைக்கப் பெற்றுள்ளதனால் மாணவர்களின் கல்வியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையத்தின் பௌதீக வளங்கள் முறையாகப் பூர்த்தி செய்யப்படாமை, மாணவர்களை ஒழுங்கமைப்பதில் சிக்கல் நிலை தோன்றியுள்ளமை, நிர்வாக செலவீனங்களை முகாமைத்துவம் செய்ய முடியாமை, பிறப்புப் பதிவின்மையினால் மாணவர்களைப் பாடசாலைகளில் இணைப்பதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளமை போன்ற பல்வேறு சவால்களை இந்நிலையம் எதிர்கொண்டுள்ளது. ஆசிரியர் சிலரின் சொற்பயன்பாடு மாணவர்கள் மனத்தைப் பெரிதும் புண்படுத்தியுள்ளதோடு, வளப்பற்றாக்குறை நிலவுவதினால் கல்வியைத் தொடர்வதில் மாணவர்கள் பல சிரமங்களையும் எதிர்நோக்கியுள்ளனர். எனவே, சிறுவர் பராமரிப்பு இல்லம் மேற்கொள்ளும் சேவைகளை மேலும் செம்மைப்படுத்துவதற்கான முன்னெடுப்புக்கள், சிறுவர் இல்லம் மற்றும் நிலையத்தின் மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை இல்லாதொழிப்பதற்கான வழிகாட்டல்கள் பற்றிய  முன்மொழிவுகளைத் தருவதாகவும், எதிர்காலத்தில் இவ்விடயத்தில் ஆய்வை மேற்கொள்வோருக்கு உதவுவதாகவும் இவ்வாய்வு அமைகிறது.

Abstract

The separation of parents has a great impact on the lives of children and creates the name of the orphans.  Eravur Child Care Home is working to identify such classes and show them the best paths on humanitarian and shape future leaders. The study aims to identify and describe the challenges faced by the home and students in evaluating the services of the centre.  Thirty-five people, including administrators and students, were interviewed for the primary data collection.  Code basis analysis was applied.  The study reveals that students' education has improved due to better availability of food, clothing, shelter, education and security for underprivileged students through an administration consisting of government officials and rich people. The centre faces various challenges such as inadequate physical resources, difficulty in organizing students, inability to balance administrative costs and problems in enrolling students in schools due to birth registration.  The wording of some teachers has greatly offended students and the students are facing many difficulties in pursuing their education due to lack of resources.  Therefore, the study sets out to take steps to further enhance the services provided by the childcare home and to provide guidelines for overcoming the challenges faced by the children of the orphanage.
ER -