TY - JOUR AU - Fareed Mohamed, Nawastheen PY - 2021/11/24 Y2 - 2024/03/28 TI - கலைத்திட்ட நடைமுறைப்படுத்தலில் கரிசனைகள் அடிப்படையிலான இசைவாக்க மாதிரியுருவின் பயன்பாடு – ஓர் இலக்கிய மீளாய்வு: CONCERNS-BASED ADOPTION MODEL IN THE SUCCESSFUL CURRICULUM IMPLEMENTATION – A LITERATURE REVIEW JF - இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies) JA - இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் காலாண்டுக்கு ஒருமுறை மே, ஆகட்டு, நவம்பர், பிப்புருவரி ஆகிய திங்கள்களில் வெளிவரும். இவ்விதழ் 2015 முதல் இயங்கிவருகிறது (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies that publishes articles in Tamil and English (bi-lingual) and it comes quarterly (February, May, August, and November) since 2015. We publish research and review articles, book reviews, editorials.). VL - 7 IS - 28 SE - Articles DO - UR - https://inamtamil.com/journal/article/view/20 SP - 45-57 AB -
ஆய்வுச் சுருக்கம்

உலகில் விரைவாக மாறிவரும் சமூக, பொருளாதார, தகவல் தொழினுட்பக் காரணிகள் காரணமாக, பாடசாலைக் கலைத்திட்டத்தில் அவ்வப்போது மாற்றங்களையும், புத்தாக்கங்களையும் அறிமுகம் செய்ய வேண்டியுள்ளது. பாடசாலைக் கலைத்திட்டத்தில் மேற்கொள்ளப்படும் மாற்றங்கள், புத்தாக்கங்களை வெற்றிகரமாக  நடைமுறைப்படுத்துவதில் பாடசாலை ஆசிரியர்களின் துலங்கல்கள் மிக முக்கிய காரணியாக விளங்குகின்றன. பாடசாலைக் கலைத்திட்டத்தில் அறிமுகம் செய்யப்படும் மாற்றங்கள், புத்தாக்கங்கள் தொடர்பாக பாடசாலை ஆசிரியர்கள் எத்தகைய துலங்கல்களை வெளிப்படுத்துகின்றனர் என்று மதிப்பீடு செய்வது முக்கியமாகும். குறித்த மதிப்பீட்டு முடிவுகளுக்கு ஏற்ப கலைத்திட்டத்தைச்  சிறந்த முறையில் நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான தலையீடுகளை அவ்வப்போது கலைத்திட்ட விருத்தியாளர்கள் மேற்கொள்வார்களாயின், கலைத்திட்ட நடைமுறைப்படுத்தலை வெற்றிகரமாக மேற்கொள்ள முடியும். இதற்காக அண்மையில் கரிசனை  அடிப்படையிலான இசைவாக்க மாதிரியுரு (CBAM) பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இம்மாதிரியுரு, கல்விமுறைமையில் புத்தாக்கங்களை நடைமுறைப்படுத்தும்போது, அவை எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதை தொகைசார் மற்றும் பண்பு சார் அணுகுமுறைகளில் மதிப்பீடு செய்கிறது. மதிப்பீட்டு பெறுபேறுகளின்படி, கலைத்திட்ட புத்தாக்கங்களை  மேலும் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கான வழிவகைகளையும் முன்வைக்கின்றது.   எனவே, கலைத்திட்ட புத்தாக்க நடைமுறைப்படுத்தலில் CBAM இன் பயன்பாட்டை கண்டறிவதுடன், இலங்கையின் கலைத்திட்ட நடைமுறைப்படுத்தல் தொடர்பான ஆய்வுகளில்  இதன் பயன்பாடு எந்தளவு உள்ளது என்பதைக் கண்டறிவதே இவ்வாய்வுக் கட்டுரையின் குறிக்கோள் ஆகும். இதற்காக இணைய தேடல் பொறிகள் மற்றும் நூலக ஆய்வின் ஊடாக, CBAM தொடர்பான ஆய்வுகள் தெரிவு செய்யப்பட்டு மீளாய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இதன் முடிவாக, CBAM என்னும் மாதிரியுரு கலைத்திட்ட நடைமுறைப்படுத்தலை மதிப்பீடு செய்வதில் அண்மையில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகின்ற போதும், இலங்கையில் இதன் பயன்பாடு அதிகம் காணப்படவில்லை என்பதாகும். கலைத்திட்ட நடைமுறைப்படுத்தல் தொடர்பாக கவனம் செலுத்தும் ஆய்வாளர்கள், எதிர்கால கலைத்திட்ட மாற்றங்கள் தொடர்பாக  CBAM யினை பயன்படுத்தி அதிகம் பயன்பெற வேண்டும்  என்பதே இவ்வாய்வின் பரிந்துரையாகும்.

Abstract

Rapid changes taking place in the globe in socio-economic aspects and advancements in information and communication technology necessitate the introduction of changes and innovations into the school curriculum from time to time. Teachers are one of the crucial entities responsible for the implementation of such curriculum changes and innovation.  As such, it is important to evaluate teachers’ responses towards changes introduced to the school curriculum. Therefore, curriculum developers should probe teacher's responses and make necessary interventions into the implementation process. Concern-Based Adoption Model (CBAM) has been widely used for this purpose. CBAM can be used to investigate to what extent the innovations of the educational system are being implemented, both quantitatively and qualitatively. According to the probes, CBAM suggests intervening strategies for more successful implementation of curriculum innovations. The objectives of this research paper were to identify the uses of CBAM in the implementation of curriculum innovation and to determine to what extent the CBAM is used in the evaluation of curriculum implementation in the Sri Lankan context. In order to achieve these objectives, CBAM-related studies were selected and reviewed through Internet search engines and library research. Findings of this study reveal that the CBAM has not been widely used in curriculum implementation studies in Sri Lanka, although it has recently been used extensively in evaluating curriculum implementation. It is recommended that researchers in Sri Lanka consider applying CBAM in evaluating the implementation of curriculum innovation.
ER -