TY - JOUR AU - இ.ஜெனிபாமேரி, இ.ஜெனிபாமேரி PY - 2017/08/10 Y2 - 2024/03/29 TI - அக இலக்கியங்களில் மிதவை மாந்தர்கள் JF - இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies) JA - இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் காலாண்டுக்கு ஒருமுறை மே, ஆகட்டு, நவம்பர், பிப்புருவரி ஆகிய திங்கள்களில் வெளிவரும். இவ்விதழ் 2015 முதல் இயங்கிவருகிறது (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies that publishes articles in Tamil and English (bi-lingual) and it comes quarterly (February, May, August, and November) since 2015. We publish research and review articles, book reviews, editorials.). VL - 3 IS - 10 SE - Articles DO - UR - https://inamtamil.com/journal/article/view/189 SP - 11-16 AB - <p>அக இலக்கியங்கள் அக்காலத் தமிழரின் அகவாழ்வியலை எடுத்தியம்பும் தன்மையன.&nbsp; அக இலக்கியங்களில் மிதவை மாந்தர் என்போரின் பணி குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இந்நிலையில், மிதவை மாந்தர்கள் ஆற்றிய பணிகளையும், தலைவன் தலைவியரிடையே கொண்ட உறவு நிலைகளையும் எடுத்துரைக்கும் விதமாக இக்கட்டுரை அமைகின்றது.</p><p>தலைவன், தலைவி, பரத்தை ஆகியோரிடையே தூது செல்லும் வாயில்கள் பட்டியலில் மிதவை மாந்தர்களுக்கும் இடம் உண்டு. இவ்வாயில்களில் மிக நீண்ட தொலைவு பயணம் செய்து செய்தி உரைப்பதற்கு உரியவராகக் கூத்தரும் பாணரும் குறிக்கப்படுகின்றனர் என்பதைத் தொல்காப்பியம் சுட்டுகிறது.</p><p>தலைவனின் பரத்தமை ஒழுக்கம் காரணமாகச் சினம் கொண்ட தலைவியின் ஊடலைத் தணிக்கும் வாயில்களாக மிதவை மாந்தர்கள் பயன்படுத்தப் பட்டிருக்கின்றனர். மருதத்திணைப் பாடல்கள் பலவற்றில் இத்தகைய சூழலில் மிதவை மாந்தர்களைச் சந்திக்க முடிகிறது. பெரும்பாலும் தலைவியின் சின மொழிகளுக்கும், இகழ்ச்சிக்கும் உள்ளாகின்றவர்களாகவும், சில நேரங்களில் பரத்தையரால் கடியப்படுகின்றவர்களாகவும் மிதவை மாந்தர்கள் காட்சி தருகின்றனர். தலைவன் பொருள் தேடவோ வேறு வினை காரணமாகவோ வேற்று நிலங்களுக்குப் பிரிந்து சென்றிருக்கும் சூழலில், தலைவி தலைவனுக்கிடையில் தூதுவராக மிதவை மாந்தர்கள் செயலாற்றி உள்ளனர். முல்லை, நெய்தல் திணைப் பாடல்கள் இத்தகைய சூழல்களில் மிதவை மாந்தர்களைச் சித்திரிக்கின்றன. மேலும், தலைவன் தன் அகவாழ்வு அனுபவங்களை நெருங்கிய நண்பனிடம் பகிர்ந்து கொள்வதைப் போல், பாணனுடன் பேசி மகிழும் காட்சிச் சித்திரங்களையும் அகப்பாடல்களில் காண முடிகிறது. எனவே, மிதவை மாந்தர்கள் தலைவனிடம் கொண்ட உரிமையையும் உறவையும், தலைவியிடம் கொண்ட பணிவையும் இடைவெளியையும், தலைவியின் புகழ்ச்சிக்கும் இகழ்ச்சிக்கும் ஆட்பட்ட நிலையையும், அச்சூழலில் மிதவை மாந்தர்தம் எதிர்வினையையும் பற்றி எடுத்துரைப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.</p> ER -