TY - JOUR AU - முனைவர் ஆ. மணி, ஆ. மணி PY - 2020/11/10 Y2 - 2024/03/28 TI - திருமுருகாற்றுப்படைத் தனி வெண்பாக்களின் முதல் உரையாசிரியர் யார்? Who is the Commentator of special Songs of Thirumurukatrupadai? JF - இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies) JA - இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் காலாண்டுக்கு ஒருமுறை மே, ஆகட்டு, நவம்பர், பிப்புருவரி ஆகிய திங்கள்களில் வெளிவரும். இவ்விதழ் 2015 முதல் இயங்கிவருகிறது (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies that publishes articles in Tamil and English (bi-lingual) and it comes quarterly (February, May, August, and November) since 2015. We publish research and review articles, book reviews, editorials.). VL - 6 IS - 24 SE - Articles DO - UR - https://inamtamil.com/journal/article/view/178 SP - 4-27 AB -
உரைக்களம்

பத்துப்பாட்டில் ஒவ்வொரு நூலுக்கும் பல்வேறு காலங்களில் பாடப்பட்ட;  பாடியவர் யார் என அறியப்படாத வெண்பாக்கள் பல உள்ளன. ”இதுவரை வந்துள்ள பதிப்புக்களில் வெண்பாக்களுக்கு ஒருவரும் உரை தரவில்லை. இப்பதிப்பில் வெண்பாக்களுக்கும் உரை தரப்பெற்றுள்ளது” (ச.வே. சுப்பிரமணியன் 2003: 84) என்பர். இதன்மூலம், 2003ஆம் ஆண்டுவரை பத்துப்பாட்டு  வெண்பாக்களுக்கு யாரும் உரையெழுதவில்லை என்பதும், ச.வே. சுப்பிரமணியன் உரையில் தான் முதன்முறையாக உரையெழுதப்பட்டுள்ளது என்பதும் புலனாகின்றன. இவ்வுரை குறிப்பாகப் பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றாகிய திருமுருகாற்றுப்படையின் வெண்பா உரைகள் பற்றிக் கவனம் செலுத்துகின்றது.

கிடைத்துள்ள தரவுகளின் அடிப்படையில் பார்க்கும்போது (கையெழுத்தில் உள்ள இலக்குமணன் பதிப்பை நீக்கிவிட்டுப் பார்த்தால்) 1853இல் வந்த ஆறுமுக நாவலர் பதிப்பில்தான் (அச்சில்) முதன்முறையாக வெண்பாக்கள் இடம்பெறுகின்றன என்பதை அறிய முடிகின்றது. அப்பதிப்பிலும், இலக்குமணன் பதிப்பில் உள்ள அதே ஏழு வெண்பாக்களே உள்ளன என்பதும் நினையத்தகும். (விரிவுக்கு: ஆ. மணி பத்தொன்பதாம் நூற்றாண்டுப் பதிப்புக்களில் திருமுருகாற்றுப்படைத் தனி வெண்பாக்கள், கட்டுரைப்படி). ஆக, 150 ஆண்டுகளுக்கும் மேலாகத் திருமுருகாற்றுப்படை வெண்பாக்களுக்கு யாரும் உரையெழுதவில்லை என்று கூறுவது வியப்பை ஏற்படுத்துகின்றது. எனவே, இக்கருத்தின் பொருத்தத்தை அறிவதோடு, திருமுருகாற்றுப்படைப் பதிப்புக்களில் தரப்பட்டுள்ள தனி வெண்பாக்களுக்கு முதன்முதலில் உரையெழுதியவர் யார்? என்பதை அறிவதும், திருமுருகாற்றுப்படைத் தனி வெண்பாக்களுக்கு உரையெழுதியவர்களைக் காலவரிசையில் தொகுத்துக் காட்டுவதும்; அதன்வழித் திருமுருகாற்றுப்படைத் தனிவெண்பாக்களின் பதிப்பு வரலாற்றை உணர்த்துவதும்  இவ்வுரையின் நோக்கமாகும். இம்முயற்சிக்குத் திருமுருகாற்றுப்படைப் பதிப்புக்களும், பத்துப்பாட்டுப் பதிப்புக்களும் அவை பற்றிய ஆய்வுகளும் துணைகளாகக் கொள்ளப்பட்டுள்ளன.

Abstract

Sung at different times for each book in the Paththupattu; There are a number of special Songs that are not known who the sung is. "None of the editions so far have given text to the special Songs of Paththupattu. In this edition, the text is also standardized for special Songs of Paththupattu” (S.V. Subramanian 2003: 84). Thus, until 2003, there is no commentator of the special songs of paththupattu. It is also clear that S.V.S. who is the first commentator of special songs of paththupattu. This discourse focuses specifically on the commentaries of special songs of Thirumurukatruppadai.

It amazes us to say that no one has written for Thirumurukatruppadai Venpas for more than 150 years. So, knowing the relevance of this idea, who was the first to write the text for the individual verses given in the Thirumurukaruppadi editions? Knowing that, and chronologically compiling the authors of the Thirumurukatruppadai individual venpas; the purpose of this discourse is to convey the history of the edition of the Thirumurukatruppadai individual venpas.
ER -