TY - JOUR AU - முனைவர் பா. ஜெய்கணேஷ் (இளமாறன்), பா. ஜெய்கணேஷ் PY - 2016/11/10 Y2 - 2024/03/29 TI - தொல்காப்பிய வாசிப்பு வரலாறும் பதிப்புகளின் உருவாக்கமும்: Tolkāppiya vācippu varalāṟum patippukaḷiṉ uruvākkamum JF - இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies) JA - இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் காலாண்டுக்கு ஒருமுறை மே, ஆகட்டு, நவம்பர், பிப்புருவரி ஆகிய திங்கள்களில் வெளிவரும். இவ்விதழ் 2015 முதல் இயங்கிவருகிறது (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies that publishes articles in Tamil and English (bi-lingual) and it comes quarterly (February, May, August, and November) since 2015. We publish research and review articles, book reviews, editorials.). VL - 2 IS - 7 SE - Articles DO - UR - https://inamtamil.com/journal/article/view/159 SP - 25-48 AB -
தொல்காப்பியம் உருவானதன் பின்புலம்

தமிழ் இலக்கண வரலாற்றில் தனித்துவம் வாய்ந்த பனுவலாகவும், தொன்மைத் தன்மை உடைய பனுவலாகவும் இன்றுவரை நிலைபெற்றிருப்பது தொல்காப்பியமாகும்.தொல்காப்பியம் எழுதப்பட்ட காலத்திற்கு முன்னதான தரவுகள் என்பது இன்று முழுமையற்ற தன்மையில் இருக்கக்கூடிய நிலையில் தொல்காப்பியம் யாருக்காக எழுதப்பட்டது? எதற்காக எழுதப்பட்டது? என்ற கேள்வியைப் பலரும் முன்னிலைப்படுத்தி அது குறித்த விவாதங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

வரலாற்றுப் பார்வையுடனும், மொழியையும் இலக்கியங்களையும் பன்முகத் தளங்களில் ஆராய்ந்தும் எழுதப்பட்டுள்ள தொல்காப்பியம் ஒரு நீண்ட காலத் தமிழ்ச் சமூகத்தின் ஆவணம் என்பதை மட்டும் மறுப்பதற்கில்லை. தொல்காப்பியர் வகுத்தளித்த பல இலக்கணக் கூறுகளுக்குத் தரவுகளையும் சான்றுகளையும் தேடித் தேடி ஓய்ந்துபோன உரையாசிரியர்தம் கூற்றுகளின் வழியே தொல்காப்பியத்தின் தொன்மையை மதிப்பிட்டறிந்து கொள்ளமுடியும்.

இன்றைக்குத் தொகுக்கப்பட்டு நம் கையில் கிடைக்கின்ற பாட்டும் தொகையுமான பனுவல்களைக் கடந்து ஒரு மாபெரும் இலக்கிய இலக்கணப் பரப்பை நுண்ணிதின் மதிப்பிட்டறிந்து தமது தொல்காப்பியத்தைத் தொல்காப்பியர் வகுத்தளித்துள்ளார் என்பதை அவரின் இலக்கண உருவாக்க முறையிலிருந்து அறிந்துகொள்ள முடிகிறது. தொல்காப்பியத்திற்கு முன்னரும் தொல்காப்பியத்திற்குப் பின்னரும் வரலாற்றில் மறைந்து போன இலக்கண நூல்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கின்றது. இத்தனை நூல்களும் மறைந்து போனதற்குக் காரணங்கள் பலவாக இருந்தபோதிலும் தொல்காப்பியம் இத்தனை காலம் கடந்து வந்ததற்கும் காரணங்கள் பல உண்டு. தொல்காப்பியத்தின் தொடர்ச்சியான பயணங்களையும் அப்பயணங்களின் வழியாக அந்நூல் அச்சுவாகனமேறிய வரலாற்றையும் பல படிநிலைகளில் மதிப்பிடுவதாக இக்கட்டுரை அமைகின்றது.
ER -