@article{T._Dr M._2022, place={India}, title={காப்பிய இலக்கியங்கள் – கற்பித்தலும் மதிப்பிடுதலும்: Kappiya Ilakiyangal-Teaching and Evaluation}, volume={7}, url={https://inamtamil.com/journal/article/view/26}, abstractNote={
ஆய்வுச்சுருக்கம்

ஒரு மனிதனை முழுமை பெறச்செய்வது கல்வி. அக்கல்வியின் வழி அடுத்தடுத்த தலைமுறையினரைத் தகுதிப்பாடு உடையவர்களாக மாற்றுபவர்கள் ஆசிரியர்கள். ஆசிரியப்பணி என்பது அறப்பணி. அதில் அர்ப்பணிப்பு வேண்டும். அவற்றிலும் தாய்மொழிவழிக்கல்வியின் வாயிலாகப் பயன்தரக்கூடிய சிறப்பான கல்வியை மாணவர்களுக்குக் கொண்டுசேர்ப்பது இன்றியமையாத ஒன்றாகும்.

குறிப்பாக இலக்கியப் பாடங்களை, அவை தரும் வழிகாட்டுதல்களை, அறிவுரைகளைக் கற்றுத் தரும் வாழ்வியல் விழுமியங்களை, அவற்றில் பொதிந்து கிடக்கும் உண்மைகளை மாணவர்கள் மனத்தில் பதியச்செய்து அதன்வழி வரும் இளையதலைமுறையினர் தங்கள் வாழ்வில் சிறந்த நிலையை அடைவதற்குக் கல்வி கற்பிக்கும் ஆசிரியரே பெருந்துணையாக வேண்டும்.

மதிப்பெண்ணுக்காக மனனம் செய்யும் நிலைமாறி அவ்விலக்கியங்கள் உணர்த்தும் வாழ்வியலைப் பழக்கவழக்க பண்பாடுகளைப் பின்வருவோர் அறிந்து உணர்ந்து தம் வாழ்வில் பின்பற்றவும், ஒரு சமுதாயம் நற்சமுதாயமாக வளரவும் ஆசிரியர்களே உறுதுணையாக வேண்டும்.  இன்றைய சமுதாயத்தைச் சரிசெய்ய காவல்துறையும் நீதித்துறையும். வருங்காலச் சமுதாயத்தைச் சரிசெய்யக் கல்வித்துறையாலேயே இயலும் என்பது மறுக்கவியலா உண்மை.

அந்தவகையில் தமிழ் இலக்கியங்கள் காலத்தை வென்று தமிழர்தம் பெருமையை இன்றளவும் உலகளவில் கொண்டு சேர்த்தவை என்றால் அது மிகையில்லை. சங்க இலக்கியங்கள் தொடங்கி இக்கால இலக்கியங்கள் வரை அவ்வவ் காலச் சமூகச் சூழலுக்கு மட்டுமல்லாமல் எதிர்காலச் சந்ததியினரும் உய்விக்கும்வகையில் வழிகாட்டு இலக்கியங்களாக  இருப்பது படைப்பாளர்களின் தொலைநோக்குச் சிந்தனையை உணர்த்துகின்றன.

ஒரு படைப்பினை வெறும் பொழுதுபோக்கிற்காவும் இலக்கியச்சுவைக்காகவும் மட்டும் படைத்து சென்றுவிடாமல் கலை வாழ்க்கைக்காக என்ற உணர்வோடு இலக்கியங்களை உருவாக்கித்தந்தவர்கள் இலக்கியப்படைப்பாளர்கள். இந்நற்சிந்தனையாளர்களின் கருத்தியல்களை எதிர்கால மாணவர்களின் வாழ்வியல் கருதி  அவர்களிடத்துக் கொண்டு சேர்க்கவேண்டிய பொறுப்பும் கடமையும் அவ்விலக்கியங்களைக் கல்வியின் வாயிலாகக் கொண்டு சேர்க்கும் கற்பிப்போருக்கும் வேண்டும். இலக்கிய உலகில் தனக்கெனத் தனியிடம் பெற்றுக் கலைக்காக, வாழ்க்கைக்காக என்ற இருநிலைகளையும் பின்பற்றி மக்களை வழிப்படுத்தும் வாழ்வியல் உண்மைகளை உணர்த்தி அமைந்த தமிழ் இலக்கியங்களுள் காப்பிய இலக்கியங்கள் தனக்கென்ற தனித்தன்மையுடன் காலத்தை வென்று வாழ்வன.

தமிழின் பெருமையை உலகிற்குப் பறை சாற்றியவை  தமிழ் இலக்கியங்கள் என்றால் சங்க இலக்கியங்கள், அற இலக்கியங்கள், காப்பிய இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள் எனத் தொடர்ந்து  இன்றைய நவீன இலக்கியங்கள் வரை  ஒவ்வொரு படைப்புகளும் தன்னளவில் தனித்துவம் பெற்றனவாக விளங்கி வருவது குறிப்பிடத்தக்கது. குறிப்பாகக் காப்பியங்கள். அகத்தையும் புறத்தையும் பாடுபொருளாகக் கொண்ட சங்க இலக்கியங்கள் குறுகிய அடிகளில் மக்களின் உள்ளத்து உணர்வுகளின் வெளிப்பாடாய் வாழ்வியல் பதிவுகளாய் அமைந்தன. அறஇலக்கியங்கள் அம்மக்களுக்கு நல்வழியை எடுத்தோதின. பின்வந்த காப்பிய இலக்கியங்கள் அகம், புறம், அறம், பக்தி என்ற பல நிலைப்பாடுகளையும் ஒருங்கே தன்னகத்தே கொண்டு தோன்றியதுடன் அவை தோன்றிய சமூகப்பதிவாய் அமைந்ததும் தனிச்சிறப்பாகும்.

இத்தகைய சிறப்பு பொருந்திய காப்பியங்களைக் கற்பிக்கும் முறைகுறித்தும்  கற்பித்தலுக்குப் பிறகு அமையும் மதிப்பிடுதல் குறித்தும் எடுத்துரைப்பதாக ஆய்வுக்கட்டுரை அமைகின்றது.

Abstract

Education makes man perfect. Teachers play a vital role in utilizing such education to empower the upcoming generation. Teaching is a selfless service that requires dedication. The foremost duty in reaching the little minds with their own mother tongue language is remarkable.In particular, the literature, the abundant guidance and advice in them, teaches the life lessons through culture and history, which gets engraved in the students' mind. The responsibility of teaching such good literature is to shape the younger generation's vests in the teacher.The present situation of learning the subjects for marks should be swapped by following the cultural roots learnt through the education. It should descend through generations by practice. To have a healthy society, the teachers should be the pillar of the society.The weeds in the current society/generations are nipped by the Judiciary powers and the police department. Likewise, the future generation could be made flawless by the teachers. It is an irrefutable truth.

The credit goes to Tamil literature for carrying the pride and glory of Tamil language throughout the world, through ages. The prophet vision of the creators to guide the generation in each era is continuing since ancient literature.The creators have written the literature not only for entertainment and to enjoy the literature, but also have incorporated the art and sense of life in it. Teachers, who teach about the brainchild of those creators, should educate the younger, future generations to incorporate it in their lifestyle. Amongst all, the literature, "KappiyaIlakiyam" in Tamil literature has set a benchmark an proves the strong roots of Tamil civilization through ages. The unique nature of Tamil literature, say 'Sanga Ilakiyam', 'Ara Ilakiyam', 'KappiyaIlakiyam', 'BhakthiIlakiyam' till the modern literature depicts the glory of Tamil to other parts of the world. Especially, KappiyaIlakiyam, they separate literature as 'Agam' means inside and 'Puram', stands for 'Outside'. They preached the goodness of home and the country through that literature including Bhakthi, which means devotion. They all had social messages, which are carried over years. My Article is going to be on how to teach and evaluate such great epics in our literature.
}, number={29}, journal={இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies)}, author={T., Muthukumar and Dr M., Sutha}, year={2022}, month={Feb.}, pages={54–70} }