@article{வையாபுரிப்பிள்ளை_2016, place={India}, title={தொல்காப்பியர் காலம்: Tholkaappiyar period}, volume={1}, url={https://inamtamil.com/journal/article/view/133}, abstractNote={<p>இப்பொழுதுள்ள இலக்கணங்கள் எல்லாவற்றுள்ளும் தொல்காப்பியந்தான் மிகப் பழமையானது. இதனை இயற்றிய தொல்காப்பியர் வடமொழிப் பேரிலக்கணத்தைச் செய்த பாணினிக்கு முந்தியவர் ஆவார் என்று சில தமிழறிஞர்கள் கூறி வருகின்றார்கள். இக்கொள்கைக்குரிய முக்கியக் காரணம் தொல்காப்பியரோடு உடன்கற்ற ஒருசாலை மாணாக்கராகிய பனம்பாரனார் தொல்காப்பியரை <strong>ஐந்திரத்தில் வல்லவராவார் </strong>எனக் குறித்துள்ளமையேயாகும். <strong>ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் </strong>என்பது பனம்பாரனார் இயற்றிய பாயிரத்தில் வரும் ஓர் அடி. ஐந்திர வியாகரணம் பாணினீயத்திற்கு முற்பட்டதென்றும் பாணினீயம் தோன்றியபின் வழக்கொழிந்து விட்டதென்றும் இவர்கள் கருதுகிறார்கள். தொல்காப்பியனார் காலத்துப் பாணினீயம் உளதாயிருக்குமேல், தொல்காப்பியர் அதனையே கற்று இதில் சிறந்து விளங்கியிருப்பார். <strong>பாணினீயம் கற்று வல்லவர் </strong>என்று அவரைக் கூறாமையினாலே அவர் பாணினிக்கு முன்பு வாழ்ந்தவர் என்று இந்த அறிஞர்கள் கொள்ளுகின்றார்கள்.</p>}, number={4}, journal={இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies)}, author={வையாபுரிப்பிள்ளை ச.வையாபுரிப்பிள்ளை}, year={2016}, month={Feb.}, pages={12–18} }