Announcement for தமிழியல் ஆய்வுகள்: அடைவுபடுத்தலும் மதிப்பிடுதலும் (International Seminar on Indexable and Evaluation of Tamilology)

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியும் இனம் : பன்னாட்டு இணையத் தமிழாய்விதழும் இணைந்து மார்ச் 2020இல் பன்னாட்டுக் கருத்தரங்கு நடத்தத் திட்டமிட்டுள்ளது. அதற்கு உலகத் தமிழாய்வாளர்கள் ஆர்வலர்கள் கட்டுரை வழங்கிச் சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
………………….
கட்டுரையாளர்கள் கவனத்திற்கு அனைத்துத்துறை சார்ந்த பேராசிரியர்கள்,
தமிழறிஞர்கள், ஆய்வாளர்கள் மற்றும்
ஆர்வலர்கள் அனைவரிடமிருந்தும் கட்டுரைகள்
வரவேற்கப்படுகின்றன.
முதுகலை பயிலும்
மாணவர்களும் தரமான கட்டுரைகளை எழுதி
அனுப்பலாம்.
கட்டுரையாளர்கள் தங்கள் கட்டுரையில் பெயர்,
பணி விவரம், முழு முகவரி, அ.கு.எண்.,
கைப்பேசி எண் ஆகியவற்றைத் தவறாது
குறிப்பிடுதல் வேண்டும்.
ஆய்வுக் கட்டுரை UNICODE எழுத்துருவில் 12
புள்ளி எழுத்தளவில் 1.5 வரி இடைவெளித்
தட்டச்சுடன் A4 தாளில் 6 பக்கங்களுக்கு
மிகாமல் இருத்தல் வேண்டும்.
ஆய்வாளரின் கட்டுரைகள் ஆய்வுநெறி
முறைப்படி அமைதல் வேண்டும்.
[email protected] என்ற மின்ன ஞ்சல்
முகவரிக்கு ஆய்வுக் கட்டுரைகளை அனுப்புதல்
வேண்டும்.
பதிவுப்படிவம், கட்டுரை, வரைவோலை மற்றும்
மின்னஞ்சல் வந்து சேர வேண்டிய கடைசி நாள்
10.02.2020. காலம் கடந்து வரும் கட்டுரைகள்
ஏற்கப்பட மாட்டாது.
ஆய்வுக் கட்டுரைகள் அனைத்தும் தொகுக்கப்
பெற்று ஆய்வுக்கோவையாகவும், ஆய்விதழின்
ஆய்வு மலராகவும் (சிறப்பு வெளியீடு)
வெளியிடப்படும்.
இதழ் வழியாகக் கட்டுரை வெளியிட
விரும்புவோர் இனம் இதழின் உறுப்பினர்
படிவத்தை (இணையம் வழி) உரியவாறு
நிரப்புதல் வேண்டும்.
…………..
முகவரி
……………
தமிழாய்வுத்துறைத் தலைவர்
பிஷப் ஹீபர் கல்லூரி, புத்தூர்,
திருச்சிராப்பள்ளி – 620 017.
Bishop Heber College, Trichy is planning to hold a International Symposium in March 2020 in collaboration with the International Tamil Language Association. We call on the world Tamil scholars and activists to highlight the article.

Buy Books Offline