Month: May 2017

சென்றேன் தமிழூர்

  சண்முக வேலாயுதம் சுப்பிரமணியனின் பவளவிழாவை முன்னிட்டு “ச.வே.சு.75” எனும் தொகுப்பு நூல் 2004ஆம் ஆண்டு வெளிவந்தது. இத்தொகுப்பில் பேரா.தாயம்மாள் அறவாணன் ’தமிழூர் செல்லுங்கள்’ எனும் தலைப்பில் இருபக்க அளவில் கட்டுரை ஒன்றை வடிவமைத்திருந்தார். அத்தலைப்பை யொட்டியே “சென்றேன் தமிழூர்” எனும் தலைப்பில் யான் சென்ற / கண்ட அனுபவங்களை வெளிப்படுத்தும் முகமாக இக்கட்டுரை அமைகின்றது.   இருமுறை ’’ச.வே.சு. அய்யாவைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்ததை நினைத்து மனம் நெகிழ்கிறேன். தமிழ்ச் சான்றோர்களிடம் அருகில் இருந்தாலே அவர்களின் குணாதியசங்கள் சிறிதளவாவது பெற்றுக் கொள்ளலாம் என்ற அருந்தவத்தத்தினை எதிர் நோக்கும் எண்ணம் எப்போதும் என் அகச்சிந்தையில் நிறைந்தே காணப்படும். 2014ஆம் ஆண்டு முனைவர்பட்ட ஆய்வு மேற்கொண்டிருந்த காலம். காலையில் எப்போதும் நூலகம் சென்று நூல்களைத் தேடிக் குறிப்பெடுத்துக் கொண்டிருப்பது வழக்கம். நூலகத்தில் ஆய்வாளர்கள் அமர்ந்து குறிப்பெடுக்கக்  கிழக்குத் திசையை நோக்கி நாற்காலி அமர்த்தப்பட்டிருக்கும். அவற்றுள் ஒன்றில் சாய்வாக அமர்ந்து குறிப்பெடுத்துக் கொண்டிருந்தேன். கடிகாரத்தின் முள் சிறிதுசிறிதாய் நகர்ந்தது. நகர்ந்த நேரத்தைக் கவனியாது நானும் ஆழ்ந்த வாசிப்பில் மூழ்கினேன். எதார்த்தமாக இடப்பக்கமாய்த் திரும்பிப் பார்க்க நேரிட்டபோது வெள்ளைநிற ஆடையணிந்து வயதான ஒருவர் அமர்ந்து கொண்டு நூலகப் பணியாளரிடம் உரையாடிக் கொண்டிருந்தார். இவர் யாராக இருப்பார்…? என்ற சிந்தை என்னை ஆட்டிப் படைத்தது. என்னைச் சுமந்து கொண்டிருந்த நாற்காலிக்குச் சற்று ஓய்வு கொடுத்து, வெள்ளையாடை அணிந்திருக்கும் பெரியவர் பக்கம் தலைசாய்க்கலானேன். அருகில் வந்தேன். முகத்தைப் பார்த்தேன். எங்கேயோ புத்தக அட்டைப்படத்தில் பார்த்த ஞாபகம் மட்டும் என்னைத் தொற்றிக்கொண்டு யாரென்று விசாரிக்கத் துடித்தது மனம். இப்படிக் குழம்பிக் கொண்டிருந்த வேளையில் நூலகப் பணியாளர் புத்தக அலமாரிப் பக்கம் மெதுவாய் நடந்து வந்தார். அவருக்குத் தெரியாமல் அவரைப் பின்தொடர்ந்தேன். சார்… அங்க உட்காந்திருக்காருல அவரு பேரு என்ன சார்னு கேட்டேன். தம்பி… அவருதான் ச.வே.சு.னு சொன்னார். இல்ல இவர எங்கேயோ பார்த்த ஞாபகம், அதான் சார் கேட்டேன். நன்றி சார்னு சொல்லிவிட்டு அய்யாவை நெருங்கினேன். அய்யா வணக்கம். என் பேரு முனியசாமி.. இங்கதான் முனைவர் பட்டம் மேற்கொண்டு வரேங்கையா… சொன்னதும் தம்பி உக்காருப்பானு பக்கத்துல இருந்த நாற்காலியைக் காட்டினார். பெரியவங்க கிட்ட அமர்ந்து பேசுவதென்றால் தனி அலாதிதான். வாய்ப்புக் கிடைத்தது. விடுவேனா என்ன? என...

Read More

திறனாய்வாளர் ஞானி

பிறப்பு தற்பொழுது 82 அகவை நிரம்பிய முதுபெரும் தமிழறிஞரான திரு.கோவை ஞானி என்றழைக்கப்படும் கி.பழனிச்சாமி அவர்கள் 01.07.1935இல் கோவை மாவட்டம் சோமனூரில்  பிறந்தவர். இவரது பெற்றோர் கிருட்டிணசாமி – மாரியம்மாள். இவருடன் பிறந்தவர்கள் எண்மர். இவரது வாழ்வு இயற்கை சூழ்ந்த பசுமையான கிராமச் சூழலுடன் அமைந்தது. இக்கிராமத்து உழவர்களோடும், நெசவாளர்களோடும், உழைப்பாளிகளோடும் நெருக்கமான உறவை ஏற்படுத்திக்கொண்டார். இளமையிலேயே தனது தந்தையாரிடம் வாசிக்கும் பழக்கத்தைப் பெற்றார். கல்வி பள்ளிக்கல்வியைக் கிராமத்தில் பெற்ற இவர், கோவையிலும்,  அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலும் தமிழ்இலக்கியம் பயின்றார்.  முதுநிலைக் கல்வியை  சென்னைப் பல்கலையில் பெற்றார். இவர் கோவை, அருட்கலை ஆசான் ப.சு.மணியம், பேரா.உருத்திரமணி, பேரா.கே.எஸ்.மகாதேவன் போன்றோரிடமும், அண்ணாலைப் பல்கலைக்கழகத்தில் பேரா.லெ.ப.கரு.இராமநாதன் செட்டியார், பேரா.மு.அருணாசலம் பிள்ளை, பேரா.முத்துச்சாமி பிள்ளை, பேரா.தண்டபாணி தேசிகர், பேரா.சண்முகம் பிள்ளை, பேரா.நடேசன்பிள்ளை முதலியயோரிடமும் கல்வி கற்கும் வாய்ப்புக் கிட்டியமையைத் தனக்குக் கிடைத்த பெரும்பேறாகக் கருதுகிறார். தலைசிறந்த தமிழறிஞரிடம் தமிழிலக்கியத்தையும் இலக்கணத்தையும் ஆழமாகப்  பயின்று முதன்மையாகத் தேர்ச்சி  பெற்றதன் காரணமாகப் தமிழோடுதான் தனக்கு வாழ்வு என்பதை முற்றிலும் உணர்ந்தார். இவருக்குள் தமிழின் மீது தீராக்காதலும், தமிழுணர்வும், தமிழ்ப்பற்றும் ஏற்பட்டது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்த காலத்தில் அங்குள்ள நூலகம் இவருக்கு வாய்த்த மற்றொரு சிறப்பாகும். படிக்கின்ற காலத்தில் பெரும் பகுதியை இந்நூலகத்திலேயே கழித்தார். இங்குதான் அவரது ஆழ்ந்த வாசிப்பின் எல்லை விரிவடைந்தது. வரலாறு, மெய்யியல்,  திறனாய்வு, பிற இலக்கியங்கள் எனத் தேடித்தேடிப் படித்தார். இதன் காரணமாகத் திறனாய்வு என்பதைத் தனக்குள் பெரிதும் வரித்துக் கொண்ட இவர் தமிழிலக்கியத்தில்  திறனாய்வை முதன்மையாகச் செய்துள்ளார். எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்பதைத் தன் வாழ்விலும் இயக்கச் செயல்பாட்டிலும் மெய்ப்பித்து வந்தவர்.  இவரது விரிந்த வாசிப்பின் காரணமாக ஆங்கில இலக்கியத்திலும் நன்கு தேர்ச்சி பெற்றிருந்தார். பணி  கோவையில் சி.எஸ்.ஐ. மேல்நிலைப் பள்ளியில் பொறுப்பு மிக்க தமிழாசிரியராக முப்பதாண்டுகள் பணியாற்றியவர். மாணவர்களுக்கு நேசத்தோடு தமிழைக் கற்றுத் தந்தார். பிழையில்லாமல் பேசவும் எழுதவும் பழக்கினார். அவர்களுக்குத் தமிழ் உணர்வையும் தமிழறிவையும் புகட்டினார். 1988இல் நீரிழிவு நோய் காரணமாகப் பார்வையிழப்பு ஏற்பட்டது. பார்வையை மீண்டும் பெற இயலாத நிலையில் பள்ளிப்பணியை விட்டு விலகினார். அன்று முதல் இன்று வரை உதவியாளர் ஒருவரின் துணையோடு பெருமளவில் தொடர்ந்து படித்தும் எழுதியும்...

Read More

தமிழ் ஆராய்ச்சி மரபில் பதினெண் கீழ்க்கணக்கு

பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் குறித்த ஆய்வுகள் பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதி தொடங்கிப் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்க கட்டங்களில் விரிவாக முன்னெடுக்கப் பட்டுள்ளன. இவ்வாராய்ச்சியை முன்னெடுத்ததில் சி.வை.தா., உ.வே.சா. நாராயண சரணர், ரா.இராகவையங்கார், திருமணம் செல்வகேசவராய முதலியார், கா.ர.கோவிந்தராச முதலியார் உள்ளிட்ட செவ்விலக்கியப் பதிப்பாசிரியர்களுக்குத் தனித்த இடம் உண்டு. இதன் தொடர்ச்சியில் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் இவைதாம் என்ற தெளிவான கருத்து முடிவுகளை ஆராய்ச்சியாளர்கள் முன்வைத்துள்ளனர். சிலர் இம்முடிவுகளுக்கான தொடக்க முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். இவ்விரு நிலைப்பட்ட ஆய்வுப் புள்ளிகளை இணைத்து உரையாடுவதாக இக்கட்டுரை அமைகின்றது. குறிப்பாக இவ்விரு வகைப்பட்ட ஆராய்ச்சி முறையியலை முன்னெடுத்தவர்களாகத் திருவாரூர் சோமசுந்தர தேசிகர், துடிசை கிழார் அ.சிதம்பரனார், ச.வையாபுரிப்பிள்ளை, மயிலை சீனி.வேங்கடசாமி ஆகியோரைக் குறிப்பிடலாம். பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் குறித்த இவர்களது ஆய்வுகள் தொடக்ககால முயற்சிகளை அடியொற்றிச் சென்றாலும்  குறிப்பிடத்தக்க சில ஆய்வு முடிவுகளைக் கண்டறிந்துள்ளன. முந்தைய பதினெண் கீழ்க்கணக்கின் பதிப்பாசிரியர்கள் சிலரிடம் காணப்பட்ட கருத்தியல் ரீதியான குழப்பங்கள் இவர்களிடத்தும் காணப்படுகின்றன. அதாவது கைந்நிலையைப் பதினெண் கீழ்க்கணக்கில் ஒன்றாகச் சேர்ப்பதா, அல்லது இன்னிலையை ஏற்பதா?. இவ்வகையான விவாதங்களைச் சோமசுந்தர தேசிகர், துடிசை கிழார் அ.சிதம்பரனார் ஆகிய இருவரிடத்தும் காணலாம். இவ்விருவர்களில் சோமசுந்தர தேசிகர் இன்னிலையை ஏற்றுக்கொள்ளபவராக இருப்பதை அவரது கருத்துகள் தெளிவுபடுத்துகின்றன. இவர்கள் இருவரிலிருந்து சில தெளிவான முடிவுகளை முன்வைத்தவர்களாகச்  ச.வையாபுரிப்பிள்ளை, மயிலை சீனி.வேங்கடசாமி ஆகிய இருவரையும் அடையாளப்படுத்தலாம். பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் குறித்து 1940கள் வரை நடைபெற்ற விவாதங்களைத் தொகுத்து ஆராய்ந்தவர் ச.வையாபுரிப்பிள்ளை. இவர் அ.நாராயண சரணர், ரா.இராகவையங்கார், இ.வை.அனந்தராமையர் ஆகியோரின் கருத்துகளை வலியுறுத்தும் விதமாகக் கைந்நிலையைக் கீழ்க்கணக்கில் ஒன்றாகக் காட்டுகின்றார். ச.வையாபுரிப்பிள்ளை பாட்டும் தொகையும் (1940) நூலைப் பதிப்பித்த பிறகு கீழ்க்கணக்கைச் சார்ந்த இன்னா நாற்பது (1944), நான்மணிக்கடிகை (1944), திரிகடுகமும் சிறுபஞ்சமூலமும் (1944) ஆகிய நான்கு நூல்களைப் பதிப்பிக்கிறார். இவற்றில் திரிகடுகமும் சிறுபஞ்சமூலமும் என்னும் நூற்பதிப்பில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் குறித்த தெளிவான கருத்துகளை முன்வைத்துள்ளார். இந்நூலின் முன்னுரை மூலம் பதினெண்கீழ்க்கணக்கின் பெயராட்சி, பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் குறித்து நடைபெற்றுள்ள விவாதங்கள் அதற்கான விடைகள், பதினெண்கீழ்க்கணக்கு நூல்களின் காலம், திரிகடுகம், சிறுபஞ்சமூலம் ஆகிய இரு நூல்கள் பற்றிய விரிவான குறிப்புகள் ஆகியவற்றைக் குறித்து அறிந்துகொள்ள முடிகின்றது. இங்குப் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் பற்றிய விவாதங்கள்...

Read More

சி.கணேசையரின் உரைத்திறன் (அகநானூறு)

மொழியின் தோற்றமானது உயிரினப் பரிணாமங்களில் மனிதனைத் தனித்து அடையாளம் காட்டியது. அத்தகு மனித இனம் கண்ட அனுபவித்த நுகர்ந்தவைகளையெல்லாம் தமது எழுத்தாக்கத்தின் மூலம் உலகிற்கு எடுத்தியம்பினான். அவ்வாறு எடுத்துரைத்த எழுத்தாக்கங்களின் பொருளினை, கல்வியில் நாட்டமுடையோர் கற்று ஐயங்களை நீக்கித் தெளிவுறும் பொருட்டு எழுந்தவையே உரைகளாகும். உலக மொழிகளில் வேறு எந்த மொழியிலும் இல்லாத அளவிற்குப் பலவகையான சிறந்த உரைகள் காலந்தோறும் தொடர்ச்சியாகப் பரிணாம வளர்ச்சியின் அடிப்படையில் தமிழில் தோன்றிக் கொண்டே இருக்கின்றன. உரைகள் தமிழ் மக்களின் சிந்தனையில் வேரூன்றிப் பண்பாட்டில் தழைத்து வளர்ந்து செயல்களில் சிறந்து விளங்குகின்றன. தலைமுறை தலைமுறையாக நூல்களுக்கு உரைகேட்டுப் பழகியவர்களும் தொடக்கத்தில் விரிவான உரையோ விளக்கமோ எழுதவில்லை. முதன்முதலில் தோன்றிய உரையின் வடிவமானது அருஞ்சொற்களுக்குப் பொருள் கூறும் முறையிலேயே அமைந்ததென்பர். இத்தன்மை சிறப்புப் பொருந்திய உரையினைக் கணேசையர் கையாண்ட முறை குறித்து இக்கட்டுரையில் காணலாம். உரை என்பதன் பொருள் பாடல் அல்லது செய்யுள் வடிவிலுள்ள சூத்திரங்களுக்குப் பொருள் கூறும் மரபு உரை எனப்படுகிறது. ஒரு நூலின் உள்ளார்ந்த கருத்துக்கள் அல்லது செய்திகளை அறியப் பயன்படுவது உரை எனலாம். உரை என்பது ஒரு நூலிலுள்ள செய்யுட்களுக்கு விளக்கம் கூறுவதாகும். “உரை என்பதற்குச் சொல் சொற்பொருள், அறிவுரை, பழிப்புரை, பொன், நூல், புகழ், மாற்று, எழுத்தின் ஒலி, புகழுரை, விரிவுரை, விடை, ஆசிரிய வசனம், ஆகமப் பிரமாணம்”[1] போன்ற பலபொருட்களைத் தருகின்றதென்று கழகத் தமிழகராதி கூறுகிறது. அதனோ டியைந்த வொப்ப லொப்புரை[2] உரைத்திற நாட்டங் கிழவோன் மேன[3] இவ்வாறு உரை என்னும் சொல் உரைத்தல், பேச்சு என்னும் பொருளில் வந்து வழங்குமாற்றை மேற்குறிப்பிட்டுள்ள தொல்காப்பிய நூற்பாக்கள் உணர்த்தி நிற்கின்றன. உரையாசிரியர் பல்வேறு வகைப்பட்ட இலக்கிய இலக்கண வளங்களைத் தன்னகத்தே கொண்டது தமிழ்மொழி. தமிழில் தோன்றிய பழமையான படைப்புகள் அனைத்தும் செய்யுள் வடிவிலேயே இருந்தன. செய்யுள் வடிவிலான பழங்கால நூல்களுக்குப் பிற்காலத்தில் உரைநடையில் விளக்கம் எழுதியவர்கள் உரையாசிரியர்கள். பண்டைத் தமிழரின் வாழ்வியற் களஞ்சியமான இலக்கிய இலக்கணங்களின் சிறப்பினை அறிவதற்குப் பெரிதும் துணை நிற்பவர்கள் உரையாசிரியர்கள். “விருப்பு வெறுப்பற்ற நிலையில் இருந்து கொண்டு ஆராய்ச்சியில் ஈடுபட்டு குற்றமும் குணமும் நாடி மதிப்பிட்ட திறனாய்வாளர்கள் உரையாசிரியர்கள். உரையாசிரியர்கள் பிறர் கருத்தை மதிப்பதிலும், நடுவுநிலைமையோடு பொருள் உரைப்பதிலும் கண்ணுங் கருத்தும்...

Read More

லூலூவின் நூலாக்க வழிமுறைகள்

இணைய வழியிலான நூலாக்கத்திற்குச் சில நிறுவனங்கள் வழிவகை செய்துள்ளன என மின்னூல் பதிப்புநெறிகள் எனும் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது (த.சத்தியராஜ்:2016). அந்நிறுவனங்களில் pressbooks, booktango, lulu, foboko, bookrix, pothi, kindle ஆகிய நிறுவனங்களே மின்னூல் உருவாக்கத்திற்கு எளிதானவை. பிற நிறுவனங்கள் எந்த நாட்டிலிருந்து இயக்கப்படுகிறதோ, அந்நாட்டினரா இருத்தல் வேண்டும் என்கின்றன. இவை தவிர்த்த பிற நிறுவனங்கள் இல்லையா? இருக்கின்றன. அவை நாமே நூல் உருவாக்கத்திற்குரிய வழியை ஏற்படுத்தித் தரவில்லை. மாறாக, அந்நிறுவனத்தாருக்கு மின்னஞ்சல் மூலமாக, நமது புத்தகத்தை அனுப்பினால், அதனை அவர்கள் மின்னூலாக்கி வெளியிடுவர். இத்தன்மையில் அமைந்த மின்னூல் நிறுவனங்களாக freetamilebooks, kakithampublications போன்றவை அமைந்துள்ளன. மின்னூல் உருவாக்கத்தில் பெரிதும் துணையாக இருப்பது லூலூ நிறுவனம் என்றால் மிகையாகாது. இந்நிறுவனம் பிற இரண்டு நிறுவனங்களைக் காட்டிலும் இந்நிறுவனம் தரக்குறியீட்டு (ISBN)எண்ணுடன் நூல் வெளியிடுவதற்கான வசதியை ஏற்படுத்தித் தந்துள்ளது. இந்நிறுவனத்தின் மூலம் அச்சுநூல் (Print Book) உருவாக்கிக் கொள்ளலாம். அதன் வழிமுறைகளை இக்கட்டுரை முன்வைக்கிறது. உறுப்பினராதல்… இந்நிறுவனத்தின் மூலம் நூல் வெளியிடுவதற்கு முதலில் அந்நிறுவனத்தில் உறுப்பினராக இணைந்து கொள்ளல் வேண்டும்(இதற்கான வழிமுறையை மின்னூல் பதிப்பு நெறிகள் எனும் கட்டுரையில் பார்த்துக் கொள்ளலாம்). இதில் உறுப்பினர் ஆனவுடன்,  புதிதாக உருவாக்கு (New create) என்பதைச் சொடுக்கவும், அதன்பின்பு அது நூல் வெளியிடுவதற்கான ஆறு வழிமுறைகளைக் காட்டும். அதில் முதல் வழிமுறை நூல் அமைப்பு முறையாகும். இதில் நூல் அளவு, அட்டைக்கோப்பின் அளவு போன்றவை கேட்கப்படும். அவற்றைக் குறிப்பிடும் படங்கள் வருமாறு: (படம்: 1) இப்படத்தில் குறிப்பிட்டுள்ளபடி நமக்கு வேண்டிய நூல் கட்டமைப்பைத் தேர்வு செய்து கொள்ள வேண்டும். (படம்: 2) இப்படத்தின்படித் தேர்வு செய்யப்பெற்ற நூல் கட்டமைப்புக் குறிப்பைப் பார்த்துவிட்டு, நூல் உருவாக்கத்தை மேற்கொள்ளலாம். நூல் கட்டமைப்பின் அளவு தெரியவில்லை என்றால், மாதிரி அமைப்பைப் பதிவிறக்கி, அதில் தட்டச்சிட்டுக் கொள்ளலாம். (படம்: 3) இப்படத்தின்படி நூல்கட்டுமானம் எப்படி இருக்க வேண்டும் என்பதைத் தெரிவு செய்துகொள்ள வேண்டும். அதன் பின்பு, நூல் தலைப்பு, ஆசிரியர் பெயர் பதிவுமுறை ஆகியவற்றைப் பூர்த்தி செய்தல் வேண்டும். அதனைக் காட்டும் படம் வருமாறு: (படம்: 4) இதனைப் பூர்த்தி செய்தவுடன் சேமித்துத் தொடரவும் (save & continue).  அதன் பிறகு திருத்தும் தன்மையுடைய நூலாக்கக்...

Read More
  • 1
  • 2

ISSN : 2455-0531

Journal Number : 64244
✅ Approved by UGC, India.

Total no. of Visitors

Translate Website

Current Issues – Nov 2017