Month: May 2015

புதுயுக நூல் வெளியீடு : கலித்தொகைப்பதிப்பும் உரைச்சிறப்பும்

Download the Pdf கலித்தொகை, சங்க மக்களின் பண்பாட்டுக் களஞ்சியம். இது இருவர்  பேசுமாறு அமையும் போக்குடையது. இத்தகு நூலினை முதலில் வெளிக்கொணர்ந்த பெருமை சி.வை.தாமோதரம்பிள்ளையையே (1887) சாறும். அதன் பின்பு பல பதிப்புகள் வெளிவந்துள்ளன. அப்பதிப்புகளுள் புதுயுக நூல்  வெளியீட்டாரின் பதிப்பும் குறிப்பிடத்தக்கது. அவர்தம் பதிப்புக் குறித்தும், அ.விசுவநாதன் என்பாரின் உரைச்சிறப்புக் குறித்தும் ஈண்டு நோக்கப்படுகின்றது. கலித்தொகைப் பதிப்புகள்: வரலாறு கலித்தொகையின் பதிப்பு முயற்சி 1887 இல் தொடங்கி இன்று வரை பல பதிப்புகள் பல பதிப்பகங்களின் வழி வெளிவந்த வண்ணம் உள்ளது. அஃதாவது இருபத்தியெட்டுப் பதிப்புகளுக்குமேல் இந்நூல் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அப்பதிப்பாண்டுகள் வருமாறு: 1887 (சி.வை.தாமோதரம்பிள்ளை), 1925, 1930, 1931 (இ.வை.அனந்தராமையர்), 1933 (தை.ஆ.கனகசபாபதி முதலியார்), 1938 (மு.காசிவிசுவநாதன் செட்டியார்), 1941 (ந.சி.கந்தையா), 1949 (நா.இராமய்யாபிள்ளை), 1951 (எஸ்.ஆர்.மார்க்கபந்து சர்மா), 1957 (மர்ரே எஸ்.இராஜம்), 1958 (புலியூர்கேசிகன்), 1958 (மா.இராசமாணிக்கனார்), 1958 (சக்திதாசன் சுப்ரமணியன்), 1968, 1969, 1966 (பொ.வே.சோமசுந்தரனார்), 1987 (லேனா தமிழ்வாணன்), 1999 (அ.மாணிக்கம்), 2003 (சு.ப.அண்ணாமலை), 2004 (அ.விசுவநாதன்), 2007 (இரா.மணியன், குழ.கதிரேசன்), 2008 (இரா.சரவணமுத்து), 2009 (ச.வே.சுப்பிரமணியன்) என்பன (மு.முனீஸ்மூர்த்தி, 2010:5-6). இவற்றுள் சில பதிப்புகள் வணிக நோக்குடனும், சில வணிக நோக்குமின்மையும் ஆகச் செயல்பட்டுள்ளன. புதுயுக நூல் வெளியீட்டகமும் கலித்தொகைப் பதிப்பும் புதுயுக நூல் வெளியீட்டகம் (NCBH) எனும் பதிப்பகம் முகிழ்த்தது 1951ஆம் ஆண்டாகும். இப்பதிப்பகம் 1947இல் விவசாய மேம்பாடு, தொழில் வளர்ச்சி, விமர்சனங்கள்  உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் பற்றிய செய்திகளை நவயுகப் பதிப்பகம் சார்பில் வெளியிட்டன. அதன்பின்பு உலகத் தொடர்புக்காக ஆங்கில மொழியில் எழுதும் கட்டுப்பாடு இருந்தமையான் பி.பி.எச்., என்பதாகத் தோன்றியது. இது, தத்துவப் பிரச்சனை, உலகாயுதம், மதங்களின் வரலாறு பற்றிய கருத்துகளை வெளியிட்டு வந்தது. இவ்வாறாகவே புதுயுக நூல் வெளியீடாக வளர்ந்தது. இப்பதிப்பகம் உருவாவதற்கு ஆணிவேராக இருந்தர் கள் பி.எஸ்.ராவ்., மோகன், குமார மங்கலம், கல்யாணசுந்தரம், வ.சுப்பையா ஆகியோரார்  (2015:2). இப்பதிப்பகத்தின் நோக்கமாக நல்ல கருத்துகளைப் படைப்பாளிகளைப் படைக்கச் செய்ய வேண்டும், மக்களை வாசிக்க வைக்க வேண்டும் என்பதேயாம் (2015:3). இது மார் க்கசியப் பின்னணியில் உருவான பதிப்பகமாகும். இதன் தலைவர்  ஆர்.நல்லக்கண்ணு என்பவராவர். இர்  எளிமைக்கு உதாரணமாக வாழ்ந்து காட்டுபவர். இப்பின்னணியின்...

Read More

பீச்சி : நூல்மதிப்புரை

Download the Pdf கவிஞர் முனைவர் த.சத்தியராஜ் (நேயக்கோ) அவர்கள் செம்மொழியை வாசித்திருக்கிறார்; உளமாற நேசித்திருக்கிறார். நேசித்ததில் ‘பீச்சி’யைப் பிரசவித்து இருக்கிறார். உள்ளத்து உள்ளது கவிதை என்றார் கவிமணி. ஆம்! இவர் உள்ளத்து உள்ளும் தமிழுணர்வு, தாய்மையுணர்வு, சமுதாயுணர்வு, தன் தாய்மண்ணுணர்வு, கிராமியஉணர்வு எனப் பல கோணங்களில் உணர்வுகள் இருந்திருக்கின்றன. அதன் வெளிப்பாடாக ‘பீச்சி’ என்ற கவிதை நூல் வெளிப்பட்டிருக்கிறது. கவிஞர் ஒவ்வொன்றையும் கூர்ந்து நோக்கியிருக்கிறார். ஆழமாகச் சிந்தித்தும் இருக்கிறார். அதைக் கவிதையும் ஆக்கி இருக்கிறார். அவற்றில் தனக்கு உருக்கொடுத்த உள்ளங்களை, அவ்வுள்ளங்கள் கடந்த இன்னல்களை, காயங்களைக் கவலையோடு கவிதையாக்கியிருக்கிறார். ஈன்று புறந்தருதல் தாய்க்குக் கடனே! சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே! என்று இல்லறக் கடமையைக் கூறுவர். இத்தகைய இல்லறக் கடமையைக் கொண்டு வாழும் தன் பெற்றோர்களைப் போற்றியிருக்கிறார். தமிழே எங்களது தளரிலா உயிராகும் தமிழே எங்களது தண்நிகர் மூச்சாகும் தமிழ்! தமிழ்! தமிழெனத் தமிழியம் மொழிந்திடும் தமிழ்மாந்தன் மொழியினிலும் தமிங்கலம் தவழுவதேகாண்! என்பன போன்ற கவிதை வரிகளை நோக்கும்போது கவிஞர் தமிழ்மொழியின் நிலை குறித்து மனம் நொந்து பேசியுள்ளது தெரிகிறது. வாழ்வது தமிழகம். தாய்மொழி தமிழ். பயில்வது தமிழ். பேசுவது தமிழ். ஆனால் கையொப்பம் இடுவதோ கடன் வாங்கி ஆங்கிலத்தில். குழந்தைக்குப் பெயரிடுவதோ நமக்கு, நம் மொழிக்கு இணையில்லா வடமொழியில், வடமொழிக் கலப்பில். கேட்டால் நியூமராலஜி பார்த்துப் பெயர் வைத்திருக்கிறோம் என்று கூறுகிறார்கள். எங்கே போனது நம்மொழி. நிலையில்லாமல் இருக்கும் ஏட்டில் மட்டும் உள்ளதா? நரம்பில்லாமல் இருக்கும் நம் நாக்கில் மட்டும் உள்ளதா? என்னவாயிற்று தமிழ்மொழியின் நிலை?; நம் செம்மொழியின் நிலை? இதற்குக் காலம் தான் பதில் கூற வேண்டும். உன்னது நற்சுவை உணரும்முன் உனையறியேன் ………          ………          ………          ………           உன்னை வாசித்திட வாசித்திட           உன்னருமை கண்டிட வியந்தேனே அம்மா! என்ற வரிகளில் தன் தமிழன்னையைத் தன் தமிழன்னையின் தமிழ் இன்பத்தை வாசித்து வாசித்துக் கவிஞர் இன்புற்று இருப்பது கண்கூடாகத் தெரிகிறது. காதலைப் பாடாத கவிஞர் உண்டோ? இவரும் வதிவிலக்கல்ல. தன் மனதில் அமர்ந்த காரிகையை, இவள்தானே விழியினில் விசைதந்த காரிகையாள் இவள்தானே நினைகாரி இசைகாரி யானவள் மனப்பூவில் கலிதேனும் மகிழ வந்தவள் மனப்பூவில் அமராது மணப்பூவில் அமர்ந்தாளே! புன்னகைக்கும்...

Read More

மலைபடுகடாம் நவிலும் மானுட விழுமியங்கள்

Download the Pdf மலைபடுகடாம் நவிலும் மானுட விழுமியங்களை அடையாளப்படுத்துவது இக்கட்டுரையின் நோக்கமாகும். விழுமியம் என்பதற்கான வரையறை, வாழ்வியலுக்கும் விழுமியத்துக்குமான பிணைப்புநிலை, மலைபடுகடாம் வெளிப்படுத்தும் மானுட வாழ்வியல் நெறி, மலைபடுகடாம்வழிப் பெறப்படும் மானுட விழுமியங்கள் முதலிய தரவுகளை உள்ளடக்கிய வண்ணம் இக்கட்டுரை அமைகின்றது. (இக்கட்டுரைக்கு உ.வே.சா. பதிப்பித்த ‘பத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும்’ 1931, மூன்றாம் பதிப்பு எனும் நூல் மூலமாகக் கொள்ளப்பெற்றுள்ளது). மலைபடுகடாமில்? மலைபடுகடாத்தில்? கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மலைபடுகடாம் தொடர்பாக வெளிவந்த ஆய்வுக்கோவை ஒன்றில் மலைபடுகடாம் என்னும் சொல்லை முன்னிலைப்படுத்தி வந்த கட்டுரைத் தலைப்புகள் மொத்தம் 36. அவற்றுள், ‘மலைபடுகடாமில்’ எனும் சொற்பயன்பாடு கொண்ட கட்டுரைத் தலைப்புகள் – 20; ‘மலைபடுகடாத்தில்’ எனும் சொற்பயன்பாடு கொண்ட கட்டுரைத் தலைப்புகள் – 03.                                                                                           பத்துப்பாட்டை நினைவுகூரப் பயன்படும் ‘முருகு பொருநாறு…’ எனத் தொடங்கும் வெண்பாவின் இறுதியடி ‘கடாத்தொடும் பத்து’ என்றே நிறைவுபெறும். இவ்விடத்துக் ‘கடாத்தொடு’ என்பதற்குப் பதிலாக ‘கடாமொடு’ எனும் சீரைப் பயன்படுத்தினாலும் தளையமைப்பில் சிதைவு ஏற்படாது. தொல்காப்பிய உரையாசிரியர்களும் பத்துப்பாட்டை முதன்முதலில் பதிப்பித்த உ.வே.சா.வும் ‘கடாத்தொடு’ என்றே கையாண்டுள்ளனர். காரணம் – தமிழ் இலக்கண மரபை, தொல்காப்பிய இலக்கண மரபை உணர்ந்துள்ளமையே! ‘மஃகான் புள்ளிமுன் அத்தே சாரியை’ (தொல்.எழுத்து.உருபு.13) எனும் நூற்பாவை அவர்கள் மனத்துள் கொண்டமையே! மலைபடுகடாம் – நூற்குறிப்பு பிறிதொரு பெயர் – கூத்தராற்றுப்படை பாடியவர் – இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் பாட்டுடைத் தலைவன் – செங்கண் மாத்துவேள் நன்னன்சேய் நன்னன் அடிகளின் எண்ணிக்கை – 583 (ஆசிரியம்) பாடுபொருள் – ஆற்றுப்படுத்துதல் மலைபடுகடாத்தில் இடம்பெறும் பழந்தமிழக நிலப்பரப்பு மலைபடுகடாத்தில் இடம்பெறும் பழந்தமிழக நிலப்பரப்புகளாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம். பல்குன்றக் கோட்டம் செங்கண்மா நவிரமலை சேயாறு 3.1.  பல்குன்றக் கோட்டம் தொண்டைநாடு பண்டைக்காலத்தே 24 கோட்டங்களாகப் பிரிக்கப் பெற்றுள்ளது. அவற்றுள் ஒன்றே இந்தப் பல்குன்றக் கோட்டம். பல்குன்றக் கோட்டம் என்னும் பெயரே அதன் இயல்பை உணர்த்தும் காரணப்பெயராக அமைந்துவிடுகின்றமை சிறப்பு. ‘கோட்டமென்பது நாட்டின் பெரும்பிரிவிற்குச் சங்கேதமாக வழங்கி வருகின்றது. ‘பல்குன்றக் கோட்டத்துச் சிலைநாட்டுத் திருவேங்கடம்’ என்னும் சிலாசாஸன வாக்கியத்தால் திருவேங்கடமலை (திருப்பதி)யும் பல்குன்றக் கோட்டத்துள்ளதென்று தெரிகிறது: குன்றுசூழ் இருக்கை நாடுகிழவோனே (மலைபடு.583) என்பது இதனை வலியுறுத்தும்’ என்பார் உ.வே.சா...

Read More

பரிதாபப் பிஎச்.டி.யும் பாவ யு.ஜி.சி.யும்

Download the Pdf கல்வி நிலையில் மிக உச்சமான ஆராய்ச்சிப் படிப்பு பிஎச்.டி. ஆகும். ஒரு நாட்டு மக்களின் கல்வித் தரத்தை அளவிட மிக முதன்மையான கருவி இப்பட்டமாகும். இப்பட்டத்தை ஒருவர் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றுத் தொடர்ந்து கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் இடம்பெற்று,  பொதுக்கல்வியாக இருந்தால் மூன்றாண்டுகளிலும் தொழிற்கல்வியாக இருந்தால் நான்காண்டுகளிலும் இளநிலைப் பட்டம் பெற்றுத் தொடர்ந்து அதே பாடத்தில் இரண்டாண்டுகள் அல்லது மூன்று ஆண்டுகள் படித்து எம்.ஏ., எம்.எஸ்சி., எம்.காம்., எம்.டி., எம்.எஸ்., முதலான தகுதியை அடைந்தவரே பிஎச்.டி. பட்டத்திற்குச் சேரமுடியும் என்பது பொதுவிதி. பிஎச்.டி., பட்டத்தில் முழுநேர ஆய்வாளராகச் சேர்வதற்கு முன்பு, ஒருவர் பதினேழு முதல் பதினெட்டு ஆண்டுகள் படித்திருக்க வேண்டும். பிஎச்.டி., ஆய்விற்கு முன்பு எம்.ஃபில் என்ற இளநிலை ஆராய்ச்சிப் பட்டமும் இருக்கிறது. தொடர்ந்து பிஎச்.டி. பட்டம் பெறுவதற்காகக் குறைந்தது மூன்றாண்டுகள் முழுநேர ஆய்வாளராக ஒரு பல்கலைக்கழகத்தில் அல்லது பல்கலைக்கழக ஒப்புதல் பெற்ற முதுநிலைப் பட்டமும் ஆராய்ச்சியும் நிகழ்த்தும் கல்வி நிறுவனத்தில் ஒருவர் சேரலாம். சேருபவர் முன்பே எம்.ஃபில் பட்டம் பெற்றிருந்தால் அவர் மூன்றாண்டுக்குப் பதிலாக இரண்டாண்டுகள் முழுநேர ஆராய்ச்சியாளராக இருத்தல் வேண்டும். பெரும்பாலும் இந்த அடிப்படை நெறிகளில் 1970 வரை மிகக்கண்டிப்புக் காட்டப்பட்டது. எனவே, அக்காலங்களில் பிஎச்.டி. பட்டம் பெற்றவர்கள் நல்ல தகுதியுடையவர்களாக இருந்தனர். பலவேறு அடிப்படை ஆராய்ச்சிகளை நிகழ்த்தினர். இந்தியாவிலும் அயல்நாடுகளிலும் உயர்நிலை வேலை பெற்றதுடன் ஆராய்ச்சி நிறுவனங்களில் தலைமைப் பொறுப்பையும் சிலர் எய்தினர். அவர்கள் வழங்கிய ஆராய்ச்சிக் கட்டுரைகள், ஆராய்ச்சி நூல்கள் மிகத் தரமுடையனவாக இருந்தன. அவர்களது படைப்புகள் கல்வியாளர்களுக்கும் மக்களுக்கும் தொடர் ஆராய்ச்சிக்கும் மிகுந்த பயனுடையனவாக இருந்தன. அண்மைக்காலத்தில் பிஎச்.டி. ஆராய்ச்சிப் பட்டத் தரத்தில் பெரும் அதிர்ச்சியைக் கல்வியாளர்களும் ஆட்களைப் பணிக்குத் தெரிவு செய்யும் அதிகாரிகளும், அலுவலர்களும் நேரில் கண்டனர். தம்மிடம் வேலைக்காக வரும் பிஎச்.டி. ஆய்வாளரை நேர்காணல் காணும்போது அவ்வாய்வாளர்கள் அப்பட்டத்திற்குரிய தகுதியைப் பெற்றிருக்கவில்லை என்பது நிரூபணமாயிற்று. கிட்டத்தட்ட இந்தியாவில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகப் பிஎச்.டி. பட்டதாரிகள் நிலைமை இவ்வாறே இருந்தது. பழைய ஆய்வு முடிவுகளை  அசைக்கும் வண்ணம் ஆராய்ச்சிக் கட்டுரைகளையோ, நூல்களையோ எழுதும் வல்லமையும் அவர்களிடம் இல்லை என்பது தெள்ளத்தெளிவாகத் தெரிந்தது. பலவேறு காரணங்களாலும் சூழல்களாலும் பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் பணியாற்றும்...

Read More

இணையத்தில் கலித்தொகை

Download the Pdf தமிழ்மொழியின் சிறப்பு அதன் தொன்மையில் மட்டுமில்லை, அதன் தொடர்ச்சியிலும் உள்ளது என்ற உண்மைக்குத் தக்க சான்றுதான் இன்றைய இணையத்தமிழ் வளர்ச்சி. முச்சங்கம் வைத்தோம் மூன்றுதமிழ் வளர்த்தோம் என்று நம் முன்னோரின் பெருமையை மட்டுமே பேசிக்கொண்டிருக்காமல், காலத்துக்கேற்ப நாம் நம் மொழியை இணையத்தில் கையாளக் கற்றுக்கொண்டோம். அதனால் இன்று நம் பழந்தமிழ் இலக்கியங்களின் பெருமை உலகத்தோரால் வியந்து நோக்கப்படுகிறது. தமிழ் இலக்கியப் பரப்பில் சங்ககாலத்தை மட்டுமே பொற்காலம் என்றழைக்கிறோம். அக்காலத்தில் எழுந்த சங்கஇலக்கிய நூல்கள் சங்கால மக்களின் வரலாறாகவே திகழ்கின்றன. பாட்டும், தொகையும் என்றழைக்கப்படும் இந்நூல்களுள் கலித்தொகையானது “கற்றறிந்தார் ஏத்தும் கலி” எனப் போற்றப்படுகிறது. இணையத்தில் கலித்தொகை பதிப்புகளையும், பதிவுகளையும் எடுத்தியம்புவதாக இக்கட்டுரை அமைகிறது. சங்கஇலக்கியத்துள் கலித்தொகையின் இடம் பாட்டும், தொகையும் என்றழைக்கப்படும் சங்கஇலக்கியத்தின் ஒவ்வொரு பாடல்களுமே சிறந்தவை என்றாலும் அவற்றுள் கலித்தொகைப் பாடல்கள் தனக்கே உரிய சிறப்பியல்களைக் கொண்டிருக்கின்றன. பிறபாடல்கள் ஆசிரியப்பாவால் அமைய கலித்தொகையோ கலிப்பாவால் அமைந்துள்ளது. ஐந்து திணைகளும் தொகுக்கப்பட்டுள்ளன. பல பாடல்கள், ஓரங்க நாடகங்களைப் போல அமைந்துள்ளன. ஏறுதழுவுதல்  உள்ளிட்ட பல்வேறு செய்திகள் இன்றும் விவாதிக்கப்படுவனவாக விளங்குகின்றன. அதனால் கலித்தொகை கற்றறிந்தார் மட்டுமின்றி கல்வி அறிவு இல்லாதவர்களும் பேசும் இலக்கியமாக இன்று செல்வாக்குப் பெற்று விளங்குகிறது. கலித்தொகை சுவடிப் பதிப்பு தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் செயல்படுகிறது. உலகில் நாற்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி வாழும் தமிழர்கள் தங்களுடைய மரபுகளையும், விழுமியங்களையும், பண்பாட்டையும் பாதுகாக்க வேண்டும். இத்தேவையை நிறைவேற்ற அவர்கள் தங்கள் மொழி, கலை, இலக்கியம் இவற்றோடு நீங்காத தொடர்புடன் வாழ வேண்டும். உலகு தழுவி வாழும் தமிழ் மக்களின் பண்பாட்டுத் தேவைகளை மனத்திற்கொண்டு தமிழக முதல்வர் அவர்கள் 1999இல்; நடைபெற்ற தமிழ் இணைய மாநாட்டின் நிறைவு விழாவில், தமிழ் இணையப பல்கலைக்கழகம்  ஒன்று அமைக்கப்படும் என அறிவித்தார். அதை நிறைவேற்றும்வகையில் இத்தமிழ் இணையப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டிருக்கிறது. த.இ.க.ஆட்சிக்குழு ஒன்றால் வழி நடத்தப்பட்டு, ஒரு முழுநேர இயக்குநர் பொறுப்பில் செயற்பட்டு வருகின்றது. இது தற்போது தமிழ் இணையக் கல்விக்கழகம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் நூலகம் என்ற பிரிவில் தமிழ் இலக்கிய, இலக்கண...

Read More
  • 1
  • 2

ISSN : 2455-0531

Journal Number : 64244
✅ Approved by UGC, India.

Total no. of Visitors

Translate Website

Current Issues – Nov 2017