வ.சுப.மா.வின் சொல்லாக்க முறைகள்

Va.Cupa.Mā.Viṉ collākka muṟaikaḷ

[ Published On: February 10, 2017 ]

தமிழ்ப் புத்திலக்கிய மரபில் பாரதியார், பாரதிதாசன், திரு.வி.க., மறைமலையடிகள், பாவாணர், கி.இராமலிங்கனார், அறிஞர் அண்ணா, ரசிகமணி டி.கே.சி. முதலியோர் புதிய சொல்லாக்கங்களைப் படைத்து அளித்துள்ளனர். இந்த வரிசையில் வ.சுப.மாணிக்கனாரும் தனது எழுத்துகளின்வழிப் பல புதிய சொல்லாக்கங்களைத் தமிழ் ஆய்வுலகிற்கு வழங்கியுள்ளார். இவற்றில் பல இன்றும் ஆய்வாளர்கள், ஆட்சியாளர்களால் பின்பற்றப்பட்டு வருகின்றன. சில சொல்லாக்கங்கள் தனித்துவத்துடன் நிலைபேற்றை அடைந்துள்ளன. தமிழகப் பல்கலைக்கழகங்களில் பேராசிரியராகப் பணியாற்றிய காலத்தில் வ.சுப.மா. உருவாக்கிய அலுவலகப் பயன்பாட்டிற்கான சொல்லாக்கங்கள் இன்றும் கையாளப்பட்டு வருகின்றன. குறிப்பாக ‘மொழிப்புலம்’, ‘புல முதன்மையர்’, ‘ஆளவை’, ‘ஆட்சிக் குழு’, ‘செம்பதிப்பு’ என்னும் சொல்லாக்கங்கள் பல்கலைக்கழகப் பயன்பாட்டில் உள்ளன. இச்சொற்கள் அனைத்தும் வ.சுப.மா. உருவாக்கியவை. இன்று புலமை உலகில் பலராலும் பரவலாகக் கையாளக்கூடிய சொல்லாகச் ‘செம்பதிப்பு’ நிலைபெற்றுவிட்டது. இச்சொல்லை உருவாக்கியவர் யார் என்று கேட்டால் அது பலருக்கும் தெரியாது. இதுபோல் இன்னும் பல சொற்களை வ.சுப.மாணிக்கம் உருவாக்கியுள்ளார். இவர் தனது நூல்களில் பயன்படுத்தியுள்ள தனித்தன்மை வாய்ந்த சொற்களையும் அவற்றின் ஆக்க முறைகளையும் இக்கட்டுரை கவனப்படுத்துகின்றது. இவரது நடைநலச் சிறப்பை, சொல்லாக்க முறையைச் ச.மெய்யப்பன் பின்வருமாறு பதிவுசெய்துள்ளார்.

KEYWORDS

பாரதியார், பாரதிதாசன், திரு.வி.க., மறைமலையடிகள், பாவாணர்
  • Volume: 2
  • Issue: 8

Written by

CITATION

No Citation Included

Buy Books Offline