முதுகுடிமன்னர்களை விடச் சற்று மேலான நிலையில் இயற்கை வளம் சார்ந்த மலைப்பகுதிளை ஆட்சியெல்லையாகக் கொண்டு அரசாண்டவர்கள்தான் குறுநில மன்னர்கள். இக்குறுநில மன்னர்களுள் குறிப்பிடத்தகுந்தவன் கடையெழுவள்ளல்களில் ஒருவனான மலையமான் திருமுடிக்காரி. இவன் வேந்தர்களுக்கிடையே நிகழும் போரில் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் பேராற்றல் வாய்ந்தவனாக விளங்கினான் என்பதை, சங்க இலக்கியப் பதிவுகளின்வழி அடையாளப்படுத்தும் விதமாக இக்கட்டுரை அமைகிறது.