விசேட கல்வியின் முக்கியத்துவமும், வினைத்திறனான விசேட கல்வி வழங்குவதில் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சவால்களும்

The importance of special education and the challenges that organizations face in providing effective education

[ Published On: November 10, 2017 ]

விசேட கல்வி என அழைக்கப்படுவது தற்போது உட்படுத்துகைக்கல்வி என பிரபல்யம் பெற்றுக் காணப்படுகின்றது. இக்கல்வி முறையானது குறைபாடுகளையுடைய விசேட தேவைகளை வேண்டி நிற்கும் மாற்றுத்திறனாளிகளது ஆற்றல்களை வளர்க்க உதவுகின்ற ஒரு கல்வி முறையாகும். அந்தவகையில் பிள்ளைகள் அனைவருமே ஏதாவது குறைபாடுகளைக் கொண்டிருப்பது வழமையானதாகும். இதனைப் போக்கியவாறு கல்வி வழங்க வேண்டியது கல்வித்துறையில் உள்ளவர்களினதும் பெற்றோர்களினதும் தலையாய கடமையாகும். இந்தக் குறைபாடுகளைக் கொண்டு பிள்ளைகளை ஒதுக்கிவிட முடியாது. எனவே இவர்களுக்குக் கல்வி வழங்குவதே விசேட கல்வியாகும். சாதாரண வகுப்பறைச் செயற்பாடுகளூடாகத் தமது கற்றல் செயற்பாடுகளை மேற்கொள்ள முடியாதவர்கள் அல்லது அவ்வாறு மேற்கொள்வதில் இடர்பாடுகளை எதிர்கொள்பவர்கள் விஷேட தேவையுடைய சிறார்களாகக் கருதப்படுவர். இவர்கள் சாதாரண பிள்ளைகளிலும் பார்க்க உடல், மனவெழுச்சிப் பண்புகளில் அதிக வேறுபாடு கொண்டவர்களாகக் காணப்படுவர். இவர்களுக்கு மேலைநாடுகளில் விசேடமான பாடசாலைகள் அல்லது விசேடமான வகுப்புகள் உள்ளன. எனினும் இலங்கை நாட்டில் சாதாரண வகுப்பறைகளிலேயே அவர்கள் வைக்கப்படுகின்றனர். இவர்கள் மாறுபட்ட நடத்தைக் கோலத்தை வெளிக்காட்டுபவர்களாக காணப்படுவதால் இவர்களைச் சாதாரண மாணவர்களுக்குக் கற்பித்தலை மேற்கொள்வது போன்று கற்பித்தலுக்கு உட்படுத்த முடியாது. இவர்கள் உடல், உள ரீதியாகப் பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றனர். இவர்களது விசேட கல்வி தொடர்பாக தற்போது உலகளாவிய ரீதியில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. மாற்றுத்திறன்களையுடைய மாணவர்களுக்கான கல்வி மட்டுமன்றி ஆசிரியர்களுக்கான பயிற்சிகளையும், இம்மாணவர்களது சூழல் மற்றும் சுகாதார வசதிகளையும் மேம்படுத்தும் திட்டங்களையும் நடைமுறைப்படுத்தி வருகின்றனர். தற்போது இலங்கையிலும் இது போன்று முக்கிய கவனம் செலுத்தப்படுவதோடு அரச நிறுவனங்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களும் வெளிநாட்டு நிதியுதவியுடன் பல்வேறு சேவைகளை வழங்கி வருகின்றன. இந்தவகையில் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச பிரிவிலுள்ள மாற்றுத்திறனாளிகளுக்குக் கல்வி வழங்கும் விசேட கல்வி நிறுவனங்கள் விசேட தேவையுடைய மாணவர்களுக்காக எத்தகைய கற்பித்தல் மற்றும் பராமரிப்பு முறைகளை  மேற்கொள்கின்றன என்பதை ஆராய்ந்து வெளிப்படுத்தும் பொருட்டு இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

KEYWORDS

விசேட கல்வி, கற்பித்தல், பராமரிப்பு முறை, சார்பற்ற நிறுவனங்கள், மட்டக்களப்பு
  • Volume: 3
  • Issue: 11

Written by

CITATION

No Citation Included

Buy Books Offline