வரைவிலக்கணங்கள்வழிக் கல்வி எனும் எண்ணக்கருவை ஆராய்தல்

Varaivilakkaṇaṅkaḷvaḻik kalvi eṉum eṇṇakkaruvai ārāytal

[ Published On: May 10, 2018 ]

“இருளை நீக்கி ஒளியினைக் காட்டுவாய்

இறப்பை நீக்கி அமிர்தத்தை ஊட்டுவாய் ..”

எனும் மகாகவி பாரதியின் நாட்டிற்கான கல்வி பற்றிய கவிதையானது, கல்வியின் மீதான விலையேறப்பெற்ற மகத்துவத்தைச் சுட்டிக்காட்டி  நிற்கின்றது. இத்தகு மனித வாழ்கையையே மாற்றியமைக்கும் “கல்வி” எனும் சொல்லை நாம் சுயாதீனமாகப் பயன்படுத்திய போதிலும் அதனால் கருதப்படுவது யாது என வினாவப்பட்டால் அதற்காக வழங்கக்கூடிய குறித்த விடை ஏதும் கிடையாது. அது ஒரு கருத்துப்பொருளான எண்ணக்கருவாக அமைந்திருப்பதே அதற்கான காரணமாகும். வெறுங்கண்ணால் காணக்கூடிய மற்றொருவருக்கு அது பற்றிய விளக்கக்கூடிய ஒன்றாகிய கூட்டுப்பதத்தைவிட, கருத்துப்பொருளான சொல்லுக்கு வரைவிலக்கணம் கூறுவது இலகுவானதொன்றல்ல. கல்வி என்பதால் கருதப்படுவது யாது எனும் வினாவைக் கல்வித்தத்துவ ஞானியே எழுப்புகின்றான். இதற்கான பற்பல விடைகள் கிடைக்கப்பெறலாம். அவ்வொரு விடையையும் கவனத்திற் கொண்டு அப்பதத்தினால் கருதப்படுவது யாது என ஆய்ந்தறிவது பொருத்தமானதாகும். அந்தவகையில் கல்வி எனும் எண்ணக்கருவானது காலத்திற்குக் காலம் விருத்தியடைவது. இவ்வெண்ணக்கருக்கள் சிலவற்றில் நிலையான அம்சங்கள் இருந்தாலும் சமுதாய காலமாற்றங்களுக்கேற்ப புதுக்கேள்விகள், புதுத்தேவைகள் என்பவற்றிற்கேற்ப அவை மாற்றமடைகின்றன. அதன் காரணமாக கல்வி பற்றிய திட்டமான வரைவிலக்கணம் ஒன்றை முன்வைப்பது கடினமான விடயம் எனலாம். ஆகவே கல்வி தொடர்பான மாற்றமுறுகின்ற எண்ணக்கருவை அக்காலகட்டங்களில் வாழ்க்கை நடாத்திய  தத்துவ ஞானிகள், அறிஞர்கள் , ஆசிரியர்கள் மூலமாக நாம் அறிந்து கொள்ள முடியும். அந்தவகையில் கல்வி தொடர்பாக எண்ணக்கருவை பற்பல  காலகட்டங்களில் உள்ள வரைவிலக்கணங்கள் கொண்டு ஆராய்வதற்கு ஆதாரமாக கல்வி என்பது யாது,  கல்விக்கான சுருக்கமாக வரைவிலக்கணங்கள்,  அவை மாற்றம் பெறுவதற்கான காரணங்கள் யாவை,  கல்வியின் நோக்கங்களுடன் இணைந்த துறைகள் யாவை என்பன பற்றி சுருக்கமாக நோக்குவது வினாவினடத்து முழுவிளக்கத்தை எமக்கு அளிப்பதாக அமையும் எனலாம்.

KEYWORDS

கல்வி, சுயாதீனம், எண்ணக்கரு, வரைவிலக்கணம், ஆய்ந்தறிவது
  • Volume: 4
  • Issue: 13

Written by

CITATION

No Citation Included

Buy Books Offline