வரலாற்று நோக்கில் இராமநாதபுரம் மாவட்டம் [தமிழகக் குறுநில வேந்தர்களை முன்வைத்து]

Varalāṟṟu nōkkil irāmanātapuram māvaṭṭam [tamiḻakak kuṟunila vēntarkaḷai muṉvaittu] Pandya country Antiquities

[ Published On: May 10, 2017 ]

தமிழகத்தின் ‘தென்புலம்’ என விளங்கிய ஆட்சிப் பகுதி ‘பாண்டிய மண்டலம்’ என அழைக்கப்பெறுகிறது. பாண்டிய மண்டலத்தைப் பன்னெடுங்காலம் ஆண்ட பாண்டியர்கள், படைப்புக் காலந்தொட்டு மேம்பட்டு வரும் தொல்குடியினர் என வரலாறு புலப்படுத்துகின்றது. இதனைப் பின்வரும் கருத்து விளக்கும்.

வடமொழியாளர் ஆதிகாவியமெனக் கூறும் வால்மீகி இராமாயணத்திலும் கி.மு.நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த காத்யாயனர் நூலிலும் பாணினி வியாகரணத்திற்கு வரைந்த வாத்திகம் என்ற உரையிலும் இலங்கையின் வரலாறு கூறும் பண்டைய நூலான மகாவம்சத்திலும் அசோகப் பெருவேந்தனின் கல்வெட்டிலும் மெக்சுத்தனீசின் குறிப்புகளிலும் காணப்பெறும் பாண்டியர் குறித்த செய்திகள் அவர்தம் தொன்மையை மெய்ப்பிக்கும் (தமிழ்நாட்டு வரலாறு பல்லவர் – பாண்டியர் காலம், 1990:401).

திருவாசகத்தில் மாணிக்கவாசகர் பாண்டிய நாட்டைப் ‘பாண்டிய நாடே பழம் பதி’ எனக் கூறுகின்றார். இப்பாண்டிய நாட்டில் தமிழ்மொழி செழித்து வளரப் பலர் பங்காற்றியுள்ளனர். அதனால் ‘செந்தமிழ் நாடு’ என்றும் அழைக்கப்பட்டது.

KEYWORDS

தென்புலம், பாண்டிய மண்டலம், பன்னெடுங்காலம், பாண்டியர்கள், படைப்பு
  • Volume: 3
  • Issue: 9

Written by

CITATION

No Citation Included

Buy Books Offline