ISSN: 2455 - 0531

Inam International E-Journal of Tamil Studies

மேலாய்வுக் களமளிக்கும் முனைவர் பட்ட ஆய்வுகள்

Doctoral studies in the field of supervision

Article Authors

Full Text

share it

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on email
Share on whatsapp

Abstract (English):

The doctoral thesis which were supervising by the Dr.M. Sudha, who is the professor in the Dept. of Tamil, Alagappa University, Karaikudi, in the span of years between 2006 – 2018. The objective of the paper is list out of the thesis and evaluate its research quality.

Abstract (Tamil):

தொகுத்தல் என்பது பண்டைக்காலம் தொட்டே இருந்து வரும் ஒரு நடைமுறை. சங்க இலக்கியங்கள் முதல் இக்கால இலக்கியம் வரையிலான இலக்கியத் தொகுப்புகளே இதற்குச் சான்று. கால வரையறைக்கு உட்படுத்துதல் மட்டுமன்றி ஒரு கால கட்டச் சமூகச் சூழலை அறிவதற்கும் இத்தொகுப்பு முயற்சிகள் உதவுபுரியும். ஒரு பொருண்மை தொடர் புடைய நூல்கள் அல்லது ஒரே படைப் பாளரின் பல்துறைப் படைப்புகள் குறித்து அறிவதற்கும். அவை குறித்த அடுத்தகட்ட ஆய்வுகளுக்கு முன்னோடியாகப் பயன் படுத்திக் கொள்வதற்கும் தொகுப்புகள் பயன்படுகின்றன. இத்தொகுப்புக் கலையின் சிறப்பைப் பற்றி து. குமரேசன் தன் வலைப்பூ பக்கத்தில் கூறும்போது,

‘தொகுப்புக்கலை என்பது தொல்தமிழர் காலம் முதலே தமிழில் அறியப் பட்ட ஒன்றாகும். இத்தொகை வழக்கங்களின் உதவிகொண்டே சி.வை. தாமோதரம் பிள்ளை, உ.வே.சாமிநாதய்யர் போன்றோர் ஓலைச்சுவடிகளிலிருந்து சங்க இலக்கியங்களை எடுத்துப் பதிப்பித்துள்ளனர். தமிழில் அச்சுநூல்கள் உருவாகும் முன்னர் வழக்கில் இருந்த ஓலைச் சுவடிகளைத் தொகுத்து அட்டவணைப்படுத்திய வரலாறும் உண்டு என்று கூறுவதோடு, மெக்கன்சியின் ஓலைச் சுவடி சேகரிப்பு, அதனால் அறியலாகும் தமிழகம் மற்றும் தமிழ்மொழியின் வரலாறு குறித்தும் எடுத்துரைக்கின்றார்’ (து.குமரேசன், நூற் தொகைப் பதிப்புகள், வலைப்பூ பக்கம், 21.04.2011)

இந்நூல் தொகைகள் ஒரு மொழியில் காலந்தோறும் வெளிவரும் இலக்கியம், கலை, அறிவியல், ஆன்மீகம், பண்பாடு மற்றும் பிற நூல்கள் குறித்தும் தெரிவிக்கும் கருவிகளாகும். நாட்டின் வரலாறு, மக்களின் பண்பாடு, நாகரிக வளர்ச்சி, கல்வி மேம்பாடு முதலியவற்றை அடுத்து வரும் தலைமுறையினருக்குத் தெரியப் படுத்தவும், மொழியின் வளர்ச்சிக்குத் துணை நிற்கவும் இது பயன்படும் என்ற கருத்து நூற்தொகைகளின் சிறப்பை உணர்த்தும். அவ்வகையில் இன்று கல்வி நிறுவனங்கள் இலக்கியங்கள் சார்ந்து பல் வேறு ஆய்வாளர்களை உருவாக்கி வரும் நிலையில் அவ்வாய்வுகள் குறித்த அடங்கல், ஆய்வின் புதிய போக்குகளையும் மாறுபட்ட சிந்தனைகளையும் எடுத்துரைப்ப தோடு பின்வரும் புதிய ஆய்வுகளுக்கு முன்னோடியாக நின்று உதவும் என்ற நிலையில் அழகப்பா பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் நிகழ்ந்த முனைவர்பட்ட ஆய்வுகள் குறிப்பாக ஆய்வுக் கட்டுரையின் விரிவு கருதி ஒருவரின் வழிகாட்டுதலில் உருவான ஆய்வேடுகள் குறித்த அடங்கலைத் தருவதாய் இக்கட்டுரை அமைகின்றது.

Keywords

மேலாய்வு, களமளிக்கும், முனைவர் பட்ட, ஆய்வுகள், Doctoral studies, supervision

references

1. மாரிமுத்து.இரா, ‘ஐங்குறுநூற்றில் உயிரியல் செய்திகள்’, நெறியாளர் : முனைவர் மு.சுதா, இணைநெறியாளர்: முனைவர் மு.பாண்டி, தமிழ்த்துறை,அழகப்பா பல்கலைக்கழகம், மே,2010
2. இராஜேந்திரன்.ந, ‘சங்க இலக்கியத்தில் வரலாற்றுப்பதிவுகள்’, நெறியாளர் : முனைவர் மு.சுதா, தமிழ்த்துறை, அழகப்பா பல்கலைக்கழகம், ஜூன்,2013
3. மணிகண்டன்.மா, ‘காலந்தோறும் தமிழர் இசை’, நெறியாளர் : முனைவர் மு.சுதா, இணைநெறியாளர்: முனைவர் மு.பாண்டி, தமிழ்த்துறை, அழகப்பா பல்கலைக்கழகம், மார்ச்,2013
4. தென்றல்.பா, ‘காப்பியங்களில் அறமாந்தர்கள்’, நெறியாளர் : முனைவர் மு.சுதா, இணைநெறியாளர்: முனைவர் மு.பாண்டி, தமிழ்த்துறை, அழகப்பா பல்கலைக்கழகம், ஜூலை,2013
5. முத்துமாரி.பொ, ‘சங்க இலக்கியத்தில் கதைகள், நெறியாளர் : முனைவர் மு.சுதா, இணைநெறியாளர்: முனைவர் மு.பாண்டி, தமிழ்த்துறை, அழகப்பா பல்கலைக்கழகம், நவம்பர்,2013
6. நிவேதிதா.ப, ‘சங்க இலக்கியங்களில் தோழிக்கான உவமைப் பயன்பாட்டு வரையறை’, நெறியாளர் : முனைவர் மு.சுதா, தமிழ்த்துறை, அழகப்பா பல்கலைக்கழகம், ஜூலை,2015
7. சத்தியமூர்த்தி.கா, ‘நற்றிணையில் மொழிதல்’, நெறியாளர் : முனைவர் மு.சுதா, தமிழ்த்துறை, அழகப்பா பல்கலைக்கழகம், ஆகஸ்டு,2015.
8. முகமது உசேன்.இ, ‘சமூகநோக்கில் கீரனூர் ஜாகிர் ராஜாவின் படைப்புகள் ஒரு மதிப்பீடு, நெறியாளர் : முனைவர் மு.சுதா, தமிழ்த்துறை, அழகப்பா பல்கலைக்கழகம், ஜூலை,2018
9. கோகுலவர்த்தினி.ப, ‘சங்க இலக்கியங்களில் தலைவிக்கான உவமைப் பயன்பாட்டு வரையறை’இ நெறியாளர் : முனைவர் மு.சுதா, தமிழ்த்துறை, அழகப்பா பல்கலைக்கழகம், ஜூலை,2018
10. இராஜேந்திரன்.க, ‘அகநானூற்றில் உயிரியல்’ நெறியாளர் : முனைவர் மு.சுதா, தமிழ்த்துறை, அழகப்பா பல்கலைக்கழகம், ஜூலை,2018

citation

சுதா மு. & இரவிக்குமார் இரா., (February 2021), “மேலாய்வுக் களமளிக்கும் முனைவர் பட்ட ஆய்வுகள் (Doctoral studies in the field of supervision)”, IIETS (Inam: International E-Journal of Tamil Studies) (ISSN:2455-0531), Vol.6, Issue 25, pp.

Sign In

Author access is disabled