முதுகுளத்தூர் சுப்பையாபிள்ளையின் புவனேந்திர காவியமும் அந்நூலுக்குச் சாற்றுக்கவி பாடியோரும்

Mutukuḷattūr cuppaiyāpiḷḷaiyiṉ puvaṉēntira kāviyamum annūlukkuc cāṟṟukkavi pāṭiyōrum

[ Published On: May 10, 2018 ]

இராமநாதபுர மாவட்ட மண்ணில் சங்கப்புலவர்கள் முதல் முந்தைய நூற்றாண்டுப் புலவர்கள் வரை பலர் காணப்பட்டுள்ளனர்.  ஏனெனில் சங்கம் வைத்து தமிழ்வளர்த்த மதுரை மண்ணிற்குரிய புலமைத்திறன்  மண்சார்ந்த உறவுநிலையின் தாக்கம் பரவப்பட்டமையால் கவிபாடும் புலமைகளாக வெளிப்பட்டுள்ளனர். மண்ணைப் பொறுத்தே மக்கள். மண்வளம் செழித்தோங்கியதால் கவிவளமும் வளப்பமாயின. இறுதியாக அரைநூற்றாண்டுக்கு முந்தைய காலகட்டத்தில் கணக்கிலடங்காப் புலவர் பெருமக்கள் வாழ்ந்தும், இலக்கியம் படைத்தும் சென்றுள்ளனர். அவ்வகையில் சுப்பையாபிள்ளையின் புவனேந்திர காவியம் எனும் நூல் மதுரைத் தமிழ்ச் சங்கத்தால் 1908 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.  சுப்பையாபிள்ளை பற்றியும் இந்நூல் பற்றியும் விளக்கி எடுத்துரைப்பதாக  இக்கட்டுரை அமைந்துள்ளது.

KEYWORDS

சங்கப்புலவர், சங்கம், மக்கள், மண்வளம், புவனேந்திர காவியம்
  • Volume: 4
  • Issue: 13

Written by

CITATION

No Citation Included

Buy Books Offline