மீவியற் புனைவுகளுள் ‘கனவு’ பெறும் இடம் (திருவிளையாடற் புராணத்தை முன்வைத்து)

Dream and the story flow in the supernatural things (Based on the Thiruvilaiyadal Puranam)

[ Published On: August 10, 2019 ]

காப்பிய இலக்கியங்களுள் மனிதனை முன்னிலைப்படுத்தி இயற்றப்பட்ட சிலப்பதிகாரமாக இருந்தாலும் தெய்வத்தை முன்னிலைப்படுத்தி எழுதப்பட்ட பெரியபுராணமாக இருந்தாலும் இருவகைக் காப்பியங்களுக்கும் பொதுத்தன்மைகள் பல உண்டு. பிற்காலத்தில் தோன்றிய புராணங்களுக்கும் இவை பொருந்தும். அவற்றுள் ஒன்று காப்பிய ஆசிரியர்களால் பின்பற்றப்படும் ‘மீவியற்புனைவு (அ) இயற்கை இகந்த நிகழ்வு’ எனும் உத்தி. அதாவது இயல்பு நிலைக்கு, இயற்கைக்கு மாறான நிகழ்வு. இவ்வுத்தி கதைமாந்தரின் பெருமையைப் பேசுவதற்காக மட்டும் படைப்பாளர்களால் படைக்கப்படவில்லை. கதைப்போக்கிற்கும், நிகழ்வை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்கும், நல்ல திருப்பத்தைக் கொடுப்பதற்கும் எனப் பல காரணங்களுக்காக இவ்வுத்தி பயன்படுத்தப்பட்டுள்ளது. சான்றாக மணிமேகலையை மணிமேகலா தெய்வம் மணிபல்லவ தீவிற்குத் தூக்கிச் சென்ற பிறகுதான் மணிமேகலைக் காப்பியம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்கிறது. எனவே காப்பியக் கூறுகளுள் இன்றியமையாத ஒன்றாக ‘இயற்கை இகந்த நிகழ்வு’ அமைகின்றது.  இந்நிகழ்வு அசரீரி (வானிலிருந்து கேட்கும் ஒலி), கனவு, உருமாற்ற நிலை எனப் பல்வடிவங்களில் நிகழ்கிறது. அவ்வகையில் திருவிளையாடற்புராணத்தில் இடம்பெறும் இயற்கை இகந்த நிகழ்வுகளுள் ஒன்றாக வரும் கனவு தொடர்பான காட்சிகள் அக்கதைநகர்விற்கு எங்ஙனம் பரஞ்சோதி முனிவரால் எடுத்தாளப்பட்டுள்ளன என்பதைக் காண்பது இவ்வாய்வின் நோக்கமாகும்.

KEYWORDS

மீவியற்புனைவு, புராணம், கனவு, இயற்கை, உத்தி
  • Volume: 5
  • Issue: 18

Written by

CITATION

No Citation Included

Buy Books Offline