பொய்க்கால் குதிரை நாவலில் அங்கத உத்திகள்

The trick in the Poikkal Kuthirai

[ Published On: February 10, 2019 ]

படைப்பாளனையும் படைப்பையும் வாசகனுக்கு அடையாளப்படுத்துவன, உள்ளடக்க வெளிப்பாட்டிற்குப் பயன்படுத்தும் உத்திகள்தாம். ஒருவருக்கு எடுத்துரைப்புக் கைவரப் பெறுகிற நிலையில்தான் படைப்புகள் உருவாவதும், வெற்றி பெறுவதும் சாத்தியமாகிறது. மற்றொரு வகையில் உள்ளடக்கத்திற்குத் தக்க எடுத்துரைப்பு என்பதும் முக்கியத்துவம் பெறுகிறது. கதை சொல்லுதலில் எடுத்துரைப்பு என்பது மற்ற படைப்புகளிலும் முதன்மையான இடத்தைப் பிடிப்பதோடு, அவ்வெடுத்துரைப்பு உத்திகளாலும் நிறைந்து. கதைசொல்லும் படைப்பாளன் உள்ளடக்கத்திற்குத் தக்கவும், வாசகனுக்கேற்பவும் உத்திகளைக் கையாளுகிறான். அந்தவகையில் மார்ச்சிய எழுத்தாளராக அறியப்படும் டி.செல்வராஜின், ‘பொய்க்கால் குதிரை’ நாவல் அவரின் மற்ற படைப்புகளிலிருந்து வேறுப்பட்டதாக அமைவதற்கு, அவர் கையாண்டுள்ள அங்கத உத்திகளே காரணமாகின்றன. அந்நாவலில் அவர் கையாண்டுள்ள அங்க உத்திகளை முன்வைத்தே இக்கட்டுரை அமைகிறது.

KEYWORDS

Poikkal Kuthirai, Narration, D.Selvaraj, அங்கதம், டி.செல்வராஜின் பொய்க்கால் குதிரை
  • Volume: 4
  • Issue: 16

Written by

CITATION

No Citation Included

Buy Books Offline