ISSN: 2455 - 0531

Inam International E-Journal of Tamil Studies

பேரா. க. பூரணச்சந்திரன் படைப்புகளை அடைவுபடுத்துதலும் மதிப்பிடுதலும்

Directory and evaluation of the works of Prof. K. Pooranachandran

Article Authors

Full Text

share it

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on email
Share on whatsapp

Abstract (English):

The paper takes the subject for its review and bibliography of the name prof. K. Poorana Chandran, who was many research and literary works in the field like criticism, translation, and publications. 5 publications, 28 translations, 14 criticism and many projects work for various educational firms, were added his bibliography of this paper to enclosed.

Abstract (Tamil):

பேரா.பூரணச்சந்திரன் வட ஆற்காடு மாவட்டத்தில் செய்யாற்றுக்கருகில் உள்ள வெங்களத்தூர் எனும் சிற்றூரில் 1949 -ஆம் ஆண்டு பிறந்தார். திமிரி என்ற ஊரில் பள்ளிக் கல்வியை முடித்து, வேலூர் மாவட்டத்தில் உள்ள ஊரிசு கல்லூரியில் இளம்அறிவியல் (இயற்பியல்) பட்டத்தைப் பெற்றார். அதன்பின் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முதுகலைத் தமிழிலக்கியம், ஆங்கில இலக்கியப் பட்டங்களை முதல்வகுப்புத் தேர்ச்சியுடன் வெற்றி பெற்றார். 1970-இல் கல்லூரிப் படிப்பை முடித்து ஆறாண்டுகள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். 1977 முதல் திருச்சி, பிஷப் ஹீபர் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியைத் தொடங்கினார். அன்று தொடங்கி மாணவர் மத்தியிலும், கல்வியாளர்கள் மத்தியிலும் நன்மதிப்பைப் பெற்றதோடு திறனாய்வாளர், மொழி பெயர்ப்பாளர் என்ற அடையாளங்களுடன் இவ்விருவகையாளர்களின் மனத்திலும் அரியாசனம் இட்டு அமர்ந்திருக்கின்றார்.

வகுப்பறையை உயிர்ப்புள்ளதாக வைத்திருப்பதோடு, பல கருத்துக்களை விவாதிப்பதற்கான இடமாகவும் அதனை மாற்றி அமைக்கும் திறனுடையவர். ஒரு மணிநேர வகுப்பு முடிவடைவதுகூடத் தெரியாமல் மாணவர்களைத் தன் கருத்துக்களால் கட்டிப் போடக்கூடிய திறம் படைத்தவர். திருச்சியில் பணியாற்றிய காலத்தில் அங்குச் செயல்பட்டு வந்த திருச்சி வாசகர் வட்டத்திலும், நிமாய்கோஷ் பிலிம் சொசைட்டியிலும் உறுப்பினராக இருந்தவர். 1980இல் பாதல் சர்க்காரின் பெயரில் நாடகப் பட்டறை நடத்தியவர், இவ்வமைப்புகளின் வழியாக இலக்கியத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு, நூல்களைத் திறனாய்வு செய்தல், திரைப்படங்களைத் திறனாய்வு செய்தல் எனப் பன்முகத் தளங்களில் இயங்கியவர்; இயங்குபவர். அக்காலகட்டத்தில் நவீன கோட்பாடுகளைத் தாங்கி வெளியான நிழல், நிறப்பிரிகை, காலச்சுவடு, தமிழ் நேயம் ஆகிய சிற்றிதழ்களில் எழுதியவர்.

Keywords

பேரா. க. பூரணச்சந்திரன், படைப்புகளை, அடைவுபடுத்துதலும், மதிப்பிடுதலும், Prof. K. Pooranachandran

references

1. பூரணச்சந்திரன், க., 2004, இலக்கியப் பயணத்தில் சில எதிர்ப்பாடுகள், சிந்தியன் பதிப்பகம்.
2. தமிழ் நேயம் 46 – ஞானி, 24, வி. ஆர். வி. நகர், ஞானாம்பிகா ஆலை(அஞ்சல்), கோயம்புத்தூர்.
3. விகடன் – தடம், ஆகஸ்ட் – 2018.
4. www.poornachandran.com

citation

சிவசெல்வன் ப., (February 2021), “பேரா. க. பூரணச்சந்திரன் படைப்புகளை அடைவுபடுத்துதலும் மதிப்பிடுதலும் (Directory and evaluation of the works of Prof. K. Pooranachandran)”, IIETS (Inam: International E-Journal of Tamil Studies) (ISSN:2455-0531), Vol.6, Issue 25, pp.

Sign In

Author access is disabled