கலித்தொகை, சங்க மக்களின் பண்பாட்டுக் களஞ்சியம். இது இருவர் பேசுமாறு அமையும் போக்குடையது. இத்தகு நூலினை முதலில் வெளிக்கொணர்ந்த பெருமை சி.வை.தாமோதரம்பிள்ளையையே (1887) சாறும். அதன் பின்பு பல பதிப்புகள் வெளிவந்துள்ளன. அப்பதிப்புகளுள் புதுயுக நூல் வெளியீட்டாரின் பதிப்பும் குறிப்பிடத்தக்கது. அவர்தம் பதிப்புக் குறித்தும், அ.விசுவநாதன் என்பாரின் உரைச்சிறப்புக் குறித்தும் ஈண்டு நோக்கப்படுகின்றது.