கவிஞர் முனைவர் த.சத்தியராஜ் (நேயக்கோ) அவர்கள் செம்மொழியை வாசித்திருக்கிறார்; உளமாற நேசித்திருக்கிறார். நேசித்ததில் ‘பீச்சி’யைப் பிரசவித்து இருக்கிறார்.
உள்ளத்து உள்ளது கவிதை என்றார் கவிமணி. ஆம்! இவர் உள்ளத்து உள்ளும் தமிழுணர்வு, தாய்மையுணர்வு, சமுதாயுணர்வு, தன் தாய்மண்ணுணர்வு, கிராமியஉணர்வு எனப் பல கோணங்களில் உணர்வுகள் இருந்திருக்கின்றன. அதன் வெளிப்பாடாக ‘பீச்சி’ என்ற கவிதை நூல் வெளிப்பட்டிருக்கிறது.
கவிஞர் ஒவ்வொன்றையும் கூர்ந்து நோக்கியிருக்கிறார். ஆழமாகச் சிந்தித்தும் இருக்கிறார். அதைக் கவிதையும் ஆக்கி இருக்கிறார். அவற்றில் தனக்கு உருக்கொடுத்த உள்ளங்களை, அவ்வுள்ளங்கள் கடந்த இன்னல்களை, காயங்களைக் கவலையோடு கவிதையாக்கியிருக்கிறார்.