பாலைக்கலி : காட்சியும் கருத்தாக்க உத்திகளும்

Pālaikkali: Kāṭciyum karuttākka uttikaḷum

[ Published On: February 10, 2019 ]

சங்கப்பனுவலில் ‘நடுவணைந்திணை’யாக அமைந்தது பாலைத்திணை. இச்சொல்லின் பொருளே பாலைத்திணையின் நிலைப்பாட்டினை அறிவிக்கப் போதுமானதாகும். சங்க காலத்தில் பாலைத்திணை புலவர்களால் புனைந்துகொள்ளப்பட்ட ஒரு திணை என்பது ஆய்வாளர்களின் கருத்தாகும். இவற்றோடு தொல்காப்பியர் பாலைத்திணை குறித்த இலக்கணங்களை விரிவாகக் குறிப்பிடாததும் கருதத்தக்கது. தொல்காப்பியத்திற்குப் பின்னர் எழுந்த பொருளிலக்கண நூல்கள் இத்திணை குறித்து விரிவாகப் பேசியுள்ளன.

சங்கப்பாடல்களில் சிறப்பானவையாக அமைந்தவை பாலைத்திணைப் பாடல்களே. சங்கப் பாடல்களில் பாலைப்பாடல்களே எண்ணிக்கையில் மிகுதி என்பதும் அறியத்தக்கதாகும். மனித வாழ்வில் இணைவும் பிரிவும் இயல்பானவை என்றாலும், இணைப்பினைக் காட்டிலும் பிரிவு ஏற்படுத்தும் தாக்கங்கள் ஏராளமானதாகும். சங்கப்பாடல்களில் பிரிவுத்திணையாக விளங்கும் பாலைத்திணைப் பாடல்களில் புலப்படுத்தப்படும் காட்சியுருக்களும், கருத்துருக்களும் சங்கச் சமூகத்தைக் காட்டுபவையாகும். பாலைத்திணைப் பாடல்களைப் பாடிய புலவர்களில் பெருங்கடுங்கோ தனித்துவம் பெற்றுத் திகழ்கிறார். அவரது பாலைப்பாடல்களின் படைப்பாக்க நிலைப்பாடுகள் கலித்தொகைப் பாடல்களில் இடம்பெற்றுள்ள திறம் குறித்து இக்கட்டுரையில் ஆராயப்பெறுகிறது.

KEYWORDS

சங்கப்பாடல், கபிலர், பரணர், ஓளவையார், பெருங்கடுங்கோ
  • Volume: 4
  • Issue: 16

Written by

CITATION

No Citation Included

Buy Books Offline