பழந்தமிழரின் இயற்கைப் பாதுகாப்பு முறைமைகள்

Paḻantamiḻariṉ iyaṟkaip pātukāppu muṟaimaikaḷ

[ Published On: May 10, 2018 ]

இயற்கைப் பாதுகாப்பு என்பது மிகவும் இன்றியமையாததாகும். இன்று இயற்கைப் பாதுகாப்பிற்குப் பதிலாக இயற்கையை அழிக்கத் தொடங்கி விட்டோம். ஆறு, குளம், ஏரி என எல்லாவற்றையும் அழித்து நவீன குடியிருப்புகளாக ஆக்கிரமிப்புச் செய்து கொண்டிருக்கிறோம். ஆனால் பழந்தமிழ்ச் சமூகத்தில் இயற்கைசார் சுற்றுச்சூழல் குறித்த பாதுகாப்பு உணா்வு மேலோங்கியிருந்ததைத் தமிழ் இலக்கியங்கள் எடுத்துரைக்கின்றன. பழந்தமிழரிடையே காடு கொன்று  நாடாக்கி வாழ்வது  நாகரிகமாகக் கருதப்பட்டது. இருப்பினும் அவா்கள் அழித்த காடுகளுக்குப் பதிலாகக் குளம் வெட்டி அதனைப் பாதுகாத்தனா் என்ற செய்தியையும் அறிய முடிகிறது. ஐம்பூதங்களில் ஒன்றான நீரின் மேலாண்மையை உணா்ந்து “நீரின்றி அமையாது உலகு” (குறள்-20) என்று நீரின் மேலாண்மையைக் குறள் எடுத்துரைக்கின்றது. அதுபோல, தமிழர்கள்  குளம் வெட்டி, நீரைப் பாதுகாத்தனா், கடலோரங்களிலும், ஆற்றங்கரை ஓரங்களிலும் பேரழிவைத் தாங்கக்கூடிய மரங்களை நட்டு அதனைப் பாதுகாத்துள்ளனா். தற்கால மனிதனைப் போல் இயற்கையை அழிக்காமல், அதனைப் பாதுகாத்துள்ளனா். இதுகுறித்து அறிமுக நிலையில் விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

KEYWORDS

ஆறு, குளம், ஏரி, நவீன குடியிருப்பு, பாதுகாப்பு உணா்வு
  • Volume: 4
  • Issue: 13

Written by

CITATION

No Citation Included

Buy Books Offline