மண்ணுள் புதைந்து கிடக்கும் புழங்குபொருட்களை வெட்டிக்கொணர்ந்து வெளியே எடுத்து அதன் வயதைக் கணக்கிட்டு அப்பொருள்களைப் பயன்படுத்திய நாகரிகங்களைக் கணக்கிடுவது தொன்றுதொட்ட வழக்கமாகும். ஆனால், அவ்வாறு கிடைக்கும் பொருள்கள் கணக்கில் கொள்ளப்படுகின்றனவே தவிர அவற்றால் அறியப்படும் வரலாறுகளைப் பலர் அறிந்துகொள்ள ஆர்வம் காட்டுவதில்லை. பழங்காலப் புழங்குபொருட்களைப் போலவே ஆயிரமாயிரம் நுட்பமான தகவல்கள் நம் இலக்கியங்களில் காணக்கிடைக்கின்றன. அந்த வகையில் பொருண்மையியலின் ஒரு பிரிவான பொருட்புலங்களை அடிப்படையாகக் கொண்டு சங்க அக இலக்கியங்களில் பயின்றுவரும் அறிவியல் சிந்தனைகளைப் பொருட்புல நோக்கில் ஆராய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.