பள்ளு இலக்கிய வாசிப்பின் முக்கியத்துவம் : நா.வானமாமலையின் ‘பள்ளுப்பாட்டு ஆராய்ச்சி’ நூலை முன்வைத்துச் சில சிந்தனைகள்

Paḷḷu ilakkiya vācippiṉ mukkiyattuvam: Nā.Vāṉamāmalaiyiṉ ‘paḷḷuppāṭṭu ārāycci’ nūlai muṉvaittuc cila cintaṉaikaḷ

[ Published On: May 10, 2019 ]

மகாராசன் தொகுத்திருக்கும் நூல் நா.வானமா மலையின் பள்ளுப்பாட்டு ஆராய்ச்சி. இந்நூல்  இனவரைவியலை அடிப்படையாகக் கொண்டது. பள்ளுப்பாட்டு என்றால் பள்ளர் களின் வாழ்வியலைக் காட்டும் நூல் என்பதாகப் பொதுப் புத்தியில் உறைந்துள்ளது. அதனால் என்னவோ அவ்விலக்கிய வாசிப்பை இந்தத் தமிழ்ச் சமூகம் குறைத்துக் கொண்டுள்ளமை ஒருவகைக் காரணம். பிறிதொரு வகைக் காரணங்களாவன:  பாலியலை வெளிப்படையாகப் பேசுவது (இரா.அரிகரசுதன், 15.3.19, முற்பகல் 12.30- 1.00), அடித்தட்டு மக்களின் வாழ்வியலைப் பேசுவது (இரா.அரிகரசுதன், 15.3.19, முற்பகல் 12.30-1.00) போன்றன. இங்கு அடித்தட்டு மக்கள் யார்? எனும் வினாவை எழுப்புவோமேயானால் அதற்கு விடை கூறுவது இயல்பானதன்று. ஏனெனில் காலந்தோறும் ஒவ்வோர் இனமும் மாறிமாறி வாழ்வாதாரத்தில் உயர்ந்தும் தாழ்ந்தும் தத்தமது வாழ்க்கைமுறையை அமைத்துக் கொண்டுள்ளன. இதனைப் பின்வரும் வரலாற்றுப் படிநிலை மூலம் உணரலாம்.

KEYWORDS

Na.Vanamamalai, Palluppaattu Aaraichi, பள்ளுப்பாட்டு ஆராய்ச்சி, நா.வானமாமலை, உழவர்
  • Volume: 5
  • Issue: 17

Written by

CITATION

No Citation Included

Buy Books Offline