பல்லவர் கால வரிவிதிப்பு முறை

Pallavas Taxation method

[ Published On: November 10, 2019 ]

ஒரு நாட்டின் பொருளாதாரத்தை நிர்ணயிப்பது அந்நாட்டு மக்களின் மீது விதிக்கப்படும் பலவித வரிகளேயாகும். அந்நாட்டு அரசு அனுதினமும் இயங்குவதற்கும், அரசின் பல்வகைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், அரசுப் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கவும் இவ்வரிகள் பயன்படுகின்றன. எந்திரத்தை இயக்கும் உந்துசக்தியாக எரிபொருள் எவ்வாறு பயன்படுகின்றதோ அவ்வாறே மக்களின் மீது நேரடியாகவோ, மறைமுகமாகவோ விதிக்கப்படும் வரிகள் பயன்படுகின்றன. தமிழகத்தின் பொற்காலம் என்று கருதப்படும் சங்க காலத்தில் பல்வேறு வரிகள் விதிக்கப்பட்ட போதிலும் அவை யாவை என்பது குறித்து இதுவரை எவ்வித சான்றுகளும் கிடைக்கவில்லை (Social and Cultural History of Tamil Nadu,P:39). வரிகளின்றி நிர்வாகம் நடத்தவியலாது என்பதால் அக்காலத்திலும் மக்கள் மீது வரிகள் விதிக்கப்பட்டிருக்கும்.

சங்ககாலத்திற்குப் பின் வந்த பல்லவர் காலம் தமிழகத்திற்கு முதன்முதலாக முழுமையான நிர்வாகத்தை அளித்த காலமாகும். அவர்களே முதன்முதலில் முறையான வரிவிதிப்பை மேற்கொண்டு அதுகுறித்த சான்றுகளை அளித்து விட்டுச் சென்றுள்ளனர். அவர்கள் வட நாட்டினருடன் கொண்ட தொடர்பின் காரணமாய் அவர்களின் ஆரம்பகால வரிகளின் பெயர்கள் யாவும் வடமொழியில் காணப்பட்டன. ஆனால் அவர்களின் பிற்கால வரிகளின் பெயர்கள் தமிழில் வழங்கப்பட்டன. அவர்கள் விதித்த வரிகள் பற்றியசெய்திகள் அவர்களுடைய பல்வேறு கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் காணக்கிடைப்பது நற்பேறாகும். பல்லவ மன்னர்கள் தம் காலத்தில் ஏற்கனவே வழங்கிய வரிகளோடு காலத்துக்குத் தக்கவாறு புதிய வரிகளையும் விதித்து அவற்றை நடைமுறைப்படுத்தினர். அறிஞர் பெருமக்கள் திரு.புஹ்லர் (Mr.Johan Georg Buhler), திரு.பிளீட் (Mr.John Faithfull Fleet), திரு.ஹல்ட்ஸக் (Mr.Julius Theodor Hultzsch), திரு.கே.வி.சுப்பிரமண்ய ஐயர் (Mr.K.V.Subramanya Aiyar), திரு.S.கிருஷ்ணசாமி ஐயங்கார் (Mr.S.Krishnasami Aiyangar), திரு.T.V.கோபிநாத ராவ் (Mr.T.A.Goinatha Rao), திரு.H.கிருஷ்ண சாஸ்திரி (Mr.H.Krishna Sastri), திருமதி.C.மீனாட்சி (Mrs.C.Minakshi), திருT.V.மகாலிங்கம் (Mr.T.V.Mahalingam)  போன்றோர் அரிதின் முயன்று கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் வடமொழியிலும், தமிழிலும் காணக்கிடைக்கும் பல்வகைப் பல்லவர் கால வரிகளின் பொருள்களை உய்த்துணர்ந்து உலகுக்கு வெளிப்படுத்தினர். பல்லவர் கால வரிகள் பல்சிறப்பு வாய்ந்தவை.

KEYWORDS

Pallavas, Taxes, Sanskrit, Tamil, பல்லவர் வரி
  • Volume: 5
  • Issue: 19

Written by

CITATION

No Citation Included

Buy Books Offline