உலகம் தோன்றிய நாள் முதல் மனிதன் தன் கருத்தைத் தெரிவிக்கவும், பிறர் கருத்தை அறிந்துணரவும், மொழியையே தலையான ஒன்றாகப் பயன்படுத்துகின்றான். மொழி பேச்சு, வட்டாரம், எழுத்து, இலக்கண முடையது, இலக்கணமற்றது என வகைப் படுத்தப்பட்டுள்ளன.தமிழின் இலக்கணங்கள் உலகபிறமொழி இலக்கணங்களுக் கெல்லாம் முன்னோடியாகத் திகழ்வதை இக் கட்டுரையின் வழியே சிறிதேனும் ஆராய முற்படுவோம்.