பன்முக நுண்மதி, மனவெழுச்சி நுண்மதி – பின்னணியும் பிரயோகமும்

Multiple intelligence, Emotional intelligence - Background and Application

[ Published On: August 10, 2019 ]

நுண்மதி என்ற விடயம் பரந்து பட்ட ஒன்றாக இன்று வரைவிலக்கணப்படுத்தப்படுகிறது. காரணம் காணுதல், புரிந்து கொள்ளல், சுய விழிப்பு, கற்றல், மனவெழுச்சிகளை அறிதல், தர்க்கரீதியாக சிந்தித்தல், திட்டமிடல், புத்தாக்கம் செய்தல், பிரச்சினை தீர்த்தல் போன்றவற்றிற்கான இயலுமையாக அது அடையாளம் காணப்படுகிது. இதனை ஒரு சூழல் அல்லது நிலை, விடயம், மனவெழுச்சி குறித்து விளங்கி அதற்கு ஏற்ற வகையில் கருமமாற்றுவதற்கான இயலுமை என்றும் சுருக்கமாக குறிப்பிடலாம். (Wikipedia) நுண்மதி என்ற விடயம் பரந்துபட்ட அளவில் மனிதனில் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட போதும் அது மிருகங்கள் மற்றும் தாவரங்களிலும் அவதானிக்கப்பட்டுள்ளது. மாத்திரமல்ல கருவிகளில் காணப்படும் நுண்மதி குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. கனிணி போன்ற கருவிகளில் காணப்படுகின்ற நுண்மதி செயற்கை நுண்மதி அல்லது ஆக்க நுண்மதி( Artificial Intelligence)  என வழங்கப்படுகிறது.

KEYWORDS

பன்முக நுண்மதி, மனவெழுச்சி நுண்மதி, நரம்பியல் உளவியல், நுண்மதி, கார்டனர்
  • Volume: 5
  • Issue: 18

Written by

CITATION

No Citation Included

Buy Books Offline