பத்துப்பாட்டுப் பதிப்புருவாக்கத்தில் உ.வே.சாமிநாதையர்

Pattuppāṭṭup patippuruvākkattil u.Vē.Cāminātaiyar

[ Published On: August 10, 2018 ]

பழந்தமிழ் இலக்கியங்களான சங்க இலக்கியங்களுள் பெரும்பான்மையான நூல்களைப் பதிப்பித்தவர் உ.வே.சா. என்று அழைக்கப்படும் உ.வே.சாமிநாதையர். செவ்விலக்கியங்கள் என்று அழைக்கப்படும் ‘பாட்டும் தொகையும்’ என்பதில் முதலாவதாகப் பதிப்பிக்கப்பட்டது பத்துப்பாட்டுள் ஒன்றாகிய திருமுருகாற்றுப்படை. பத்துப்பாட்டு வைப்பு முறையில் முதலாவதாக அமைந்துள்ள திருமுருகாற்றுப்படையை சரவணப்பெருமாளையரும், ஆறுமுக நாவலரும் முறையே 1834, 1851 ஆம் ஆண்டுகளில் பதிப்பித்திருந்தாலும் அவர்கள் சங்க இலக்கியம் என்ற அடையாளத்தோடு அதைப் பதிப்பிக்கவில்லை. பத்துப்பாட்டின் பாட்டுடைத் தலைவனாக விளங்கும்  முருகன் சைவ சமயத்தின் கடவுள் பட்டியலுள் இடம்பெற்றதால் முருகனின் பெருமையைப் பாடும் திருமுருகாற்றுப்படையைச்  சைவர்கள் பாராயண செய்யும்பொருட்டே அது அக்காலகட்டத்தில் பதிப்புருவாக்கம் பெற்றது.

KEYWORDS

உ.வே.சா., செவ்விலக்கியங்கள், திருமுருகாற்றுப்படை, பத்துப்பாட்டு, ஆறுமுக நாவலர்
  • Volume: 4
  • Issue: 14

Written by

CITATION

No Citation Included

Buy Books Offline