ஒரு மனிதனுக்கு அடிப்படைத் தேவைகளாக விளங்குபவை உணவு, உடை, இருப்பிடம் ஆகும். இம்மூன்றும் ஒரு மனிதனுக்கு மிகவும் அவசியமாகிறது. ஆடை மனிதனுக்கு அழகாகவும், வாழ்க்கைக்குப் பாதுகாப்பாகவும் விளங்குகிறது. இன்று உலகம் முழுவதும் பலவிதமான ஆடைவகைகள் மிகுதியாகக் காணக் கிடைக்கின்றன. ஆனால் நமது முன்னோrகள் பயன்படுத்திய ஆடை வகைகளாக, சங்க இலக்கியம் – பத்துப்பாட்டில் காணலாகும் மக்கள் பயன்படுத்திய ஆடை பற்றிய செய்திகளை ஆய்வதாக இவ்வாய்வு அமைகிறது.