பதிற்றுப்பத்தில் உழவும் உழவரும்

Patiṟṟuppattil uḻavum uḻavarum

[ Published On: February 10, 2018 ]

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்’ என்ற பாரதியாரின் கவிதை வரிகளுக்கு இணங்க உழவைப் போற்றி வளர்த்த நாடு தமிழ்நாடு. சங்கநூல்களுள் ஒன்றான பதிற்றுப்பத்து சேர அரசர்களைப் பற்றியது என்றாலும் வீரம் சார்ந்தது என்றாலும் உழவு சார்ந்த வேளாண்மைக் கருத்துக்களை அதிகம் கொண்டுள்ளது. பதிற்றுப்பத்தில் நான்கில் ஒரு பங்கு உழவைப் பற்றி மட்டுமே கூறுகிறது. பதிற்றுப்பத்தில் இடம்பெற்றுள்ள உழவு குறித்தும், உழவர் குறித்தும் எடுத்துரைப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும். உழத்திப்பாட்டு, பள்ளு, ஏர் பரணி, ஏர் எழுபது (எண் செய்யுள்) திருக்கை வழக்கம், நெல் விடு தூது முதலான உழவை மையமிட்ட சிற்றிலக்கியங்களுக்கான வேர் சங்க இலக்கியத்தில் இருந்துதான் வந்திருக்க முடியும்.

KEYWORDS

உழத்திப்பாட்டு, பள்ளு, ஏர் பரணி, ஏர் எழுபது, திருக்கை வழக்கம்
  • Volume: 3
  • Issue: 12

Written by

CITATION

No Citation Included

Buy Books Offline