பதினோராம் திருமுறை யாப்பு – பதிப்பு : சில குறிப்புகள்

Patiṉōrām tirumuṟai yāppu - patippu: Cila kuṟippukaḷ

[ Published On: May 10, 2018 ]

பக்தி இயக்கக் காலத்தில் உருப்பெற்ற சைவ இலக்கியங்கள் பன்னிரு திருமுறைகளாகத் தொகுக்கப்பெற்றுள்ளன. அவற்றுள் பதினோராம் திருமுறையானது காலத்தால் முதலேழு திருமுறைகளுக்கு(தேவாரம்) முற்பட்டு அமைந்த இலக்கியங்களையும், காலத்தால் மிகவும் பிற்பட்ட (பன்னிரு திருமுறைகளைத் தொகுத்த நம்பியாண்டார் நம்பி இயற்றிய இலக்கியங்கள் உட்பட) இலக்கியங்களின் தொகுப்பாகவும் அமைந்துள்ளது. சங்ககாலத்தைச் சார்ந்தவராகக் கருதப்படும் திருமுருகாற்றுப்படை நக்கீரர், நக்கீர தேவநாயனாராக மாறி இலக்கியங்கள் படைத்திருப்பதும் இத்திருமுறையில்தான். யாப்பியலைப் பொறுத்தவரை பதினோராம் திருமுறையில் பல பழமை வாய்ந்த யாப்பு வடிவங்களைக் காணமுடிகின்றது. மேலும் பிற்காலத்தில் உருப்பெற்ற பல இலக்கிய வகைமைகளுக்கான முன்னோடித் தன்மையினையும் கொண்டதாகவும் பதினோராந் திருமுறை அமைந்துள்ளது.

KEYWORDS

பக்தி இயக்கம், சைவ இலக்கியங்கள், பன்னிரு திருமுறை, பதினோராம் திருமுறை, தேவாரம்
  • Volume: 4
  • Issue: 13

Written by

CITATION

No Citation Included

Buy Books Offline