பகுப்பாய்வு மெய்யியலில் மொழி : சமகால மெய்யியலை அடிப்படையாகக் கொண்ட ஓர் ஆய்வு

Language in Analytical Philosophy: A Study Based on Contemporary Philosophy

[ Published On: August 10, 2018 ]

மொழியின் அர்த்தத்தைத் தெளிவாக்குவதே மெய்யியலின் மைய நோக்கு என்பதை உணர்ந்த மெய்யியலாளர்கள் அதனை நிவர்த்தி செய்ய முனைந்ததன் விளைவே பகுப்பாய்வு மெய்யியலின் வளர்ச்சிக்குக் காரணமாக அமைந்தது. பிரெட்லீயின் மாணவர்களான ரஸல், மூவர் போன்றவர்கள் பகுப்பாய்வு மெய்யியலுக்கு அடித்தளம் இட்டனர். இவர்கள் பிரெட்லீயின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளாமல் அவரின் கருத்துக்களில் இருந்து விலகி மொழிப்பிரச்சினையைத் தீர்க்க முயன்றனர். ஆனாலும் தீர்வுக்கான வழிமுறையில் வேறுபட்டு நின்றனர். மேலும் மொழிப் பகுப்பாய்வுப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக லைபினிட்ஸடன் ரஸல் இணைந்து மொழியின் பயன்பாடுகள் பற்றி விளக்க முனைந்தார். பின் வைற்கெற்றுடன் இணைந்து 1910இல் “Principia Mathamatica” என்ற நூலை வெளியிட்டார்.

KEYWORDS

பிரெட்லீ, ரஸல், பகுப்பாய்வு, மொழிப் பகுப்பாய்வு, மெய்யியலின்
  • Volume: 4
  • Issue: 14

Written by

CITATION

No Citation Included

Buy Books Offline