நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் இராஜபதி மாரியம்மன் கொடை விழா – அறிமுக நோக்கு

Nellai māvaṭṭam kaṅkaikoṇṭāṉ irājapati māriyam'maṉ koṭai viḻā – aṟimuka nōkku

[ Published On: February 10, 2018 ]

நாட்டுப்புறவியல் என்னும் சமூக அறிவியல் துறைக்குக் கள ஆய்வு இன்றியமையாதது. “கள ஆய்வு என்பது களம் தரவு என்ற இரண்டின் அடிப்படையில் அமைகிறது. மக்கள் கூட்டத்தையும் அவர்களது வாழ்வியல் நடத்தைகளான வழக்காறுகளையும் கொண்டுள்ள ஒரு பருண்மையான இடப்பரப்பே களம் ஆகும். களம் என்பது ஆய்வுக்கான தரவுகளைக் கொண்டிருப்பது மட்டுமின்றி அது எந்த நேரமும் உயிர்ப்புடன் இருக்கும் ஒரு குழு வாழ்ந்துவரும் இடப்பரப்பும் ஆகும்” (ச.பிலவேந்திரன், 2001.26.27) தரவுகள் மக்களின் வாழ்வியலோடு நெருங்கியத் தொடர்புடையவை. ஒரு குறிபிட்ட வரலாறு தொடர்பான ஆய்வுகளுக்கு அவ்வழக்காறு காணப்படும் களத்தின் பின்னணி இன்றியமையாதது. எனவே திருநெல்வேலி மாவட்டத்தில்   கங்கைகொண்டான் பஞ்சாயத்துக்குட்பட்ட இராஜபதி கிராமத்தில் உள்ள மாரியம்மன் வழிபாட்டு மரபுகளையும் பண்பாட்டுக் கூறுகளையும் ஆய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

KEYWORDS

நாட்டுப்புறவியல், சமூக அறிவியல், கள ஆய்வு, வழக்காறு, தரவுகள்
  • Volume: 3
  • Issue: 12

Written by

CITATION

No Citation Included

Buy Books Offline