நாட்டுப்புறப் பாடல்களின் வளர்ச்சிப் படிநிலைகள்

The developmental stages of folk songs

[ Published On: February 10, 2018 ]

தகவலைப் பலதரப்பட்ட மக்களுக்கும் எடுத்துச் செல்லப் பயன்படும் கருவியே ஊடகமாகும்.  ‘ஊடகம்’ என்ற சொல்லும், ஊடகங்களும் தோன்றும் முன்னே தகவல் பரிமாற்றப் பணியினை நாட்டுப்புறக் கலைகள் செய்துவந்தன என்றால் அது மிகையாகாது.

சமிக்ஞைகளும் சப்தங்களும் மெருகூட்டப்பட்டு, செம்மையாக்கப்பட்டு, நாட்டுப்புறப் பாடலாகவும், கதைகூறல்களாகவும், கதைப்பாடல்களாகவும், நாடகங்களாகவும் உருப்பெற்றன.  இதன்வழி தன் எண்ணங்களையும், நிகழ்வுகளையும், செய்திகளையும் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டனர்.  பிற்காலத்தில் இதனை நாட்டுப்புற ஊடகங்கள் என்றும் அழைத்து வந்தனர்.  இவையே நவீன ஒலி, ஒளி ஊடகங்களின் தோற்றுவாய் எனலாம்.

இவ்வாறாக ஊடகங்கள் தோன்றுவதற்குக் காரணமாக இருந்த நாட்டுப்புறக் கலைவடிவில் ஒன்றாகிய நாட்டுப்புறப்பாடல்கள் ஊடகங்களில் பங்கு பெறும் விதம் பற்றி ஆய்ந்துரைப்பதே இக்கட்டுரையின் நோக்கம்.

KEYWORDS

ஊடகங்கள், நவீன ஒலி, ஒளி, நாட்டுப்புறப்பாடல்கள்
  • Volume: 3
  • Issue: 12

Written by

CITATION

No Citation Included

Buy Books Offline